உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / இலங்கை வாலிபரிடம் பணம் பறித்ததாக ஏட்டு சஸ்பெண்ட்

இலங்கை வாலிபரிடம் பணம் பறித்ததாக ஏட்டு சஸ்பெண்ட்

சென்னை:இலங்கை வாலிபரை மிரட்டி பணம் பறித்த தலைமை காவலர், 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டார்.சென்னை வடக்கு கடற்கரை காவல் நிலையத்தில், தலைமை காவலராக பணியாற்றியவர் கனகராஜ், 42. இவர், நேற்று முன்தினம் மாலை, மண்ணடி பகுதியில் கண்காணிப்பு பணியில் இருந்துள்ளார்.அப்போது, அவ்வழியே சந்தேகப்படும் படியாக சென்ற வாலிபரை, தலைமை காவலர் கனகராஜ் அழைத்துள்ளார். அந்த வாலிபர் போலீசை பார்த்ததும் ஓட முயன்றுள்ளார். அவரை மடக்கி பிடித்து விசாரித்த போது, இலங்கையைச் சேர்ந்த முகமது அசாம், 38, என்பது தெரியவந்தது. எதற்காக ஓடினாய் என்று கேட்டு மிரட்டி, 1,500 ரூபாயை வாங்கிக்கொண்டு, அவரை அனுப்பியதாக கூறப்படுகிறது.இதனிடையே, காவலர் ஒருவர் தன்னை மிரட்டி பணம் பறித்ததாக, பூக்கடை துணை கமிஷனர் அலுவலகத்தில் முகமது அசாம் புகார் அளித்தார். அதன் அடிப்படையில், பூக்கடை துணை கமிஷனர் சுந்தரவடிவேல் விசாரித்து, தலைமை காவலரை, 'சஸ்பெண்ட்' செய்து நேற்று உத்தரவிட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை