மேலும் செய்திகள்
12 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு
7 hour(s) ago | 1
டிசம்பரில் மதுரை மீனாட்சி கோயில் கும்பாபிஷேகம்
7 hour(s) ago
மதுரையில் 3 மாடி வீடு இடிந்து மூதாட்டி பலி
7 hour(s) ago
ராமநாதபுரம்:''தமிழகத்தில் பொது மக்கள் ஆன்லைன் மூலம் தெரிவிக்கும் புகார்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என டி.ஜி.பி., ராமானுஜம் அனைத்து மாவட்ட எஸ்.பி.,க்களுக்கும் உத்தரவிட்டுள்ளார்.தமிழக முதல்வர் ஜெ., பொதுமக்களின் நலன்கருதி, அவர்கள் புகாரினை உடனடியாக போலீசில் தெரிவித்து, அதன்மீது உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளார். அதன்படி தற்போது தமிழக டி.ஜி.பி., அனைத்து மாவட்ட எஸ்.பி.,க்களுக்கும் போலீஸ் ஆன்லைன் புகார் மீது சிறப்பு கவனம் செலுத்த உத்தரவிட்டுள்ளார். ராமநாதபுரம் எஸ்.பி.,அனில்குமார் கிரி கூறியதாவது: தமிழ்நாடு போலீஸ் துறை இணையதளம் தீதீதீ.tணணீணிடூடிஞிஞு.ஞ்ணிதி.டிண(தங்களின் புகாரை அனுப்ப) இயங்கி வருகிறது. இந்த இணையதளத்தினை பொது மக்கள் பயன்படுத்தி தங்களின் புகாரை பதிவு செய்யலாம். பதிவு செய்யப்படும் புகாருக்கு உடனடியாக உரிய பதில் அனுப்பப்படுவதுடன், தக்க நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் ஆட்கள் கடத்தல், காணாமல் போனவர்கள் பற்றிய விபரங்கள், அடையாளம் தெரியாத பிரேதம் மற்றும் போலீஸ் துறையில் புகார் தெரிவிப்பது தொடர்பான பிரச்சனைகள் எதுவாக இருந்தாலும் பொது மக்கள் இணையதளத்தினை பயன்படுத்தலாம். இதன் மீது போலீசார் சிறப்பு கவனம் செலுத்தி உடனுக்குடன் நடவடிக்கை எடுப்பர், என்றார்.
7 hour(s) ago | 1
7 hour(s) ago
7 hour(s) ago