உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / 27 ஆண்டு தலைமறைவு குற்றவாளி வீட்டில் நோட்டீஸ் ஒட்டிய போலீஸ்

27 ஆண்டு தலைமறைவு குற்றவாளி வீட்டில் நோட்டீஸ் ஒட்டிய போலீஸ்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

கோவை: ரயில் நிலையங்களில், வெடிகுண்டு வெடித்த வழக்கில், 27 ஆண்டுகளாக தலைமறைவாக உள்ள குற்றவாளி, நீதிமன்றத்தில் ஆஜராக உத்தரவிடப்பட்ட நோட்டீஸை, போலீசார் நேற்று கோவையில் உள்ள அவரது வீட்டில் ஒட்டினர்.1992ம் ஆண்டு, டிச., 6ல் பாபர் மசூதி இடிப்பு சம்பவம் நடந்தது. அன்றைய தினம் திருச்சி ரயில் நிலையத்தில் பாண்டியன் எக்ஸ்பிரஸ், ஈரோடு ரயில் நிலையத்தில் சேரன் எக்ஸ்பிரஸ், திருச்சூர் ரயில் நிலையத்தில் ஆலப்புழை எக்ஸ்பிரஸ் ஆகிய ரயில்களில், வெடிகுண்டுகள் வெடித்தன. திருச்சி, ஈரோடு மற்றும் திருச்சூர் ரயில்வே போலீசார் விசாரித்தனர்.இவ்வழக்குகளில் கோவை செல்வபுரம், கல்லாமேடு பகுதியை சேர்ந்த அஸ்ரப் அலி முக்கிய குற்றவாளியாக சேர்க்கப்பட்டார். இதையடுத்து, அவர் தலைமறைவானார். வழக்கு விசாரணை, திருச்சி நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. சம்பவம் நடந்து, 27 ஆண்டுகளாகி விட்டன. கோவையை சேர்ந்த அஸ்ரப் அலி, வழக்குப்பதிவு செய்யப்பட்ட நாளில் இருந்து, தலைமறைவாக இருக்கிறார்.இந்நிலையில், 'வரும், ஜூலை, 17ல் திருச்சி நீதிமன்றத்தில் ஆஜராகி, அவர் விளக்கம் அளிக்க வேண்டும். ஆஜராக தவறினால், விளம்பரப்படுத்தப்பட்ட குற்றவாளியாக அறிவிக்கப்படுவார்' என, நீதிபதி உத்தரவிட்டார். அந்த உத்தரவு நோட்டீசை, கோவை செல்வபுரம், கல்லாமேடு பகுதியில் உள்ள அஸ்ரப் அலி வீட்டில், தீவிரவாத தடுப்பு பிரிவு போலீசார், நேற்று ஒட்டினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 25 )

Pandi Muni
ஜூன் 14, 2025 15:26

யோகி ஆதித்யநாத் ஜி வாழ்க தமிழகத்தை ஆள வருக


JAYACHANDRAN RAMAKRISHNAN
ஜூன் 14, 2025 14:03

நோட்டீஸ் ஒட்டும் போது அஸ்ரப் அலி பக்கத்தில் நின்று வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தாலும் இருந்திருப்பார். ஆபரேஷன் சிந்தூர் அடுத்து என் ஜ ஏ கெடுபிடி காரணமாக இந்த பைல் தூசி தட்டி வெளியே எடுக்கப்பட்டு இருக்கலாம்.


shakti
ஜூன் 14, 2025 13:51

அக்கம்பக்கத்திலுள்ள மசூதிகளில் உள்ள பங்கர் அறைகளை தேடி பாருங்கள் ... ஏசி வசதியோடு குடியும் குடித்தனமுமாக ஜாலியாக இருப்பான்


Rathna
ஜூன் 14, 2025 13:08

சட்டம் மிக சுறுசுறுப்பாக வேலை செய்கிறது போல? இவனை பிடித்தாலும், இறந்தாலும் இவனுக்கு கூடும் கூட்டம் அப்துல் கலாம் இறந்த போது கூட இல்லை, இருக்காது. நல்ல தங்கத்திற்கு அந்த சமூதாயத்தில் மதிப்பு குறைவு


Anantharaman Srinivasan
ஜூன் 14, 2025 12:04

1992 ம் ஆண்டு குண்டு வெடிப்பு. இப்போ 2025. 33 ஆண்டுகள் முடிந்து 34ம் ஆண்டு நடக்கிறது. 27 ஆண்டுகள் என்பது தவறு.


தர்மராஜ் தங்கரத்தினம்
ஜூன் 14, 2025 11:19

வேடிக்கையான சட்டங்கள் .... ஷரத்துகள் ....


Duruvesan, தர்மபுரி பாட்டாளி
ஜூன் 14, 2025 11:11

ஆனாலும் விடியல் சார் ரொம்ப ஸ்ட்ரிட்


Nava
ஜூன் 14, 2025 11:07

ஸ்காட்லாந்து யார்டு போலீசுக்கு நிகரானவர்கள் என்று பீற்றிக்கொள்ளும் திராவிட மாடல் ஆட்சியாளர்கள் குற்றவாளிகளுக்கு ஆதரவாக ஒப்புக்கு சப்பாணியாக நடந்து கொள்கிறார்கள் என்பதுதான் உண்மை


m.arunachalam
ஜூன் 14, 2025 10:04

புல்டோசர் சிகிச்சை பலனளிக்கும் வாய்ப்பு உள்ளது . செய்ய முடியுமா ?


தத்வமசி
ஜூன் 14, 2025 09:44

பரவாயில்லையே இருபத்தெட்டு வருடங்களில் நடவடிக்கை எடுத்து விட்டார்கள். இவர்கள் தான் ஜனாதிபதிக்கும் கவர்னருக்கும் கால கெடு கூறுகிறார்கள்.


சமீபத்திய செய்தி