உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / இன்பார்மரை காட்டிக்கொடுத்த போலீஸ் எஸ்.ஐ., துாக்கியடிப்பு

இன்பார்மரை காட்டிக்கொடுத்த போலீஸ் எஸ்.ஐ., துாக்கியடிப்பு

மதுரை:மதுரை, பழங்காநத்தம் ரேஷன் கடையில் கடந்த மாதம் ரேஷன் அரிசி கடத்தப்பட்டது. இதை அங்கு பணிபுரியும் பெண் ஊழியர் ஒருவர் வீடியோ எடுத்து, சமூக ஆர்வலருக்கு அனுப்பினார். அவர் உணவுக்கடத்தல் தடுப்புப்பிரிவு எஸ்.ஐ., ஒருவருக்கு மட்டும் வீடியோவை அனுப்பினார். சிறிது நேரத்தில் அந்த பெண்ணை தேடி வந்த கடத்தல்காரர்கள், மிரட்டி, வீடியோ எடுத்த மொபைல் போனை பறித்துச்சென்றனர். இதனால் சமூக ஆர்வலருக்கு எஸ்.ஐ., மீது சந்தேகம் ஏற்பட்டது. உயர் அதிகாரிகள் கவனத்திற்கு சென்றதை தொடர்ந்து, சமூக ஆர்வலரிடம், டி.எஸ்.பி., செந்தில் இளந்திரையன் விசாரித்தார். எஸ்.ஐ., மீது துறை ரீதியான விசாரணை நடந்த நிலையில், நேற்று முன்தினம் அவர் அப்பிரிவில் இருந்து விடுவிக்கப்பட்டார். நிர்வாக காரணம் எனக்கூறி, அப்பிரிவு இன்ஸ்பெக்டர் வனிதா சென்னைக்கும், எஸ்.ஐ., சிவபிரகாசம் மதுரைக்கும் மாற்றம் செய்யப்பட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

R.RAMACHANDRAN
பிப் 19, 2025 10:30

அரசு பணிகளில் ஊடுருவி உள்ள குற்றவாளிகளை களை எடுக்காமல் அவர்கள் மீது கருணை காட்டுவதாய் எத்தகைய குற்றங்களையும் செய்கின்றனர்.


pv, முத்தூர்
பிப் 19, 2025 07:17

அரசாங்கம் தன் வேலையைச் செய்யாது. நாம் தகவல் கொடுத்தாலும், அவர்கள் தமிழக மக்களுடன் அல்ல, குற்றம் சாட்டப்பட்டவர்களுடன் மட்டுமே கைகோர்க்க விரும்புகிறார்கள். அவர் அதையே மீண்டும் செய்வதற்கு முன்பு ஏன் அவரை பணிநீக்கம் செய்யக்கூடாது?


Smbs
பிப் 19, 2025 01:30

ஏற்புடையது அல்ல நீக்கம் ஒன்றே தீர்வு ஆனால் செய்ய மாட்டான்கள்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை