உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / துணைவேந்தர்களுக்கு போலீசார் மிரட்டல்: கவர்னர் ரவி பரபரப்பு புகார்!

துணைவேந்தர்களுக்கு போலீசார் மிரட்டல்: கவர்னர் ரவி பரபரப்பு புகார்!

ஊட்டி: ''மாநாட்டில் பங்கேற்க கூடாது என தமிழக அரசு பல்கலை துணைவேந்தர்களை போலீசார் மிரட்டி உள்ளனர்'' என தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி குற்றம் சாட்டி உள்ளார்.தமிழக அரசு, தனியார் மற்றும் மத்திய பல்கலை துணைவேந்தர்களின் மாநாடு, கவர்னர் ரவி தலைமையில் ஊட்டியில் தொடங்கியது. துணை ஜனாதிபதி ஜக்தீப் தன்கர் தொடங்கி வைத்தார். மாநாட்டில், 32 பல்கலைகளின் சார்பில் பிரதிநிதிகள் பங்கேற்றுள்ளனர். தமிழக அரசுக்கு உட்பட்ட 17 பல்கலைகளில் இருந்து துணைவேந்தரோ, பிரதிநிதிகளோ பங்கேற்கவில்லை.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=hf2rlbds&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இந்த மாநாட்டில் கவர்னர் ஆர்.என்.ரவி பேசியதாவது: தமிழகத்தில் கல்வித்தரத்தை மேம்படுத்தவே இந்த கூட்டம் நடத்தப்படுகிறது. நேரில் சென்று நிறைய பல்கலைக்கழகங்களை ஆய்வு செய்த பிறகே, இந்த கூட்டத்திற்கு ஏற்பாடு செய்தேன். தமிழகத்தில் அரசு பள்ளிகளின் நிலைமை மோசமாக உள்ளது. மாநாட்டில் பங்கேற்க கூடாது என துணைவேந்தர்களை போலீசார் மிரட்டி உள்ளனர். இதனால் தமிழக அரசு பல்கலை துணைவேந்தர்கள் யாரும் மாநாட்டில் பங்கேற்கவில்லை.துணைவேந்தர்களின் வீட்டின் கதவை நள்ளிரவில் தட்டி, 'மாநாட்டில் பங்கேற்றால் வீடு திரும்ப முடியாது' என மிரட்டல் விடுக்கப்பட்டு உள்ளது. மாநில பல்கலைக்கழகங்களில் மாணவர்களுக்கு தரமான கல்வி வழங்கப்படவில்லை.தமிழகத்தில் கல்வி தரம் மோசமாக உள்ளது. ஆட்சியில் இருப்பவர்களுக்கு இந்த மாநாடு நடத்தப்படுவது பிடிக்கவில்லை. சில துணைவேந்தர்கள் ஊட்டிக்கு வந்தும் மாநாட்டில் பங்கேற்கவில்லை. கல்வி அடுத்த கட்டத்திற்கு எடுத்து செல்ல துணைவேந்தர்கள் மாநாடு உதவியாக இருக்கும். துணைவேந்தர்கள் மாநாட்டில் அரசியல் செய்கிறார்கள். இதுபோன்ற சூழல் இதுவரை ஏற்பட்டது இல்லை. அரசு பள்ளி மாணவர்களுக்கு சிங்கிள் டிஜிட்டல் எண்களை கூட படிக்க தெரியவில்லை. இவ்வாறு கவர்னர் ரவி பேசினார். கல்வித்துறை வளர்ச்சி அடைவது அவசியம்!மாநாட்டில் துணை ஜனாதிபதி ஜக்தீப் தன்கர் பேசியதாவது: நாட்டின் வளர்ச்சிக்கு கல்வித்துறை வளர்ச்சி அடைவது அவசியம். பயங்கரவாதம் உலக அளவில் அச்சுறுத்தலாக உள்ளது. நாட்டின் வளர்ச்சியை எந்த சூழலிலும் தடுக்க முடியாது. குருகுல கல்வி மிகவும் சிறந்தது. இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 45 )

muthu
ஏப் 26, 2025 01:02

மாநாட்டில் துணை ஜனாதிபதி ஜக்தீப் தன்கர் பேசியதாவது: குருகுல கல்வி மிகவும் சிறந்தது. இவ்வாறு அவர் கூறினார். Useless talk. When all people are getting education from govt schools, why this bad idea when guru kula education itself not being followed by bhramin themself.Let bhramin dont study IPS IAS MBBS and do learning of Vedas only and do homam to earn


vivek
ஏப் 26, 2025 06:22

may be you studied samacheer. so you will not understand...


Velan Iyengaar
ஏப் 25, 2025 21:39

மிஸ் பக்கத்து பய்யன் கிள்றான் மிஸ் இந்த பக்கம் பய்யன் லப்பறை ஒளிச்சுவெச்சிட்டான் மிஸ் மிடில மிஸ் என்ன வேற கிளாசுக்கு மாத்திடுங்க மிஸ்


vivek
ஏப் 25, 2025 22:15

இந்த வேலன் சரியான ஒலை மட்டை என்று தெரிகிறது


என்றும் இந்தியன்
ஏப் 25, 2025 17:16

கல்வித்துறையின் பெயர் திருட்டு திராவிட அறிவிலி மடியல் ஆட்சியில் களவுத்துறை / கலவித்துறை என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது என்று தெரிகின்றது


venugopal s
ஏப் 25, 2025 17:13

நாய் வாலை நிமிர்த்த முடியாது என்ற பழமொழி ஞாபகத்துக்கு வருகிறது!


vivek
ஏப் 25, 2025 18:12

உன் எஜமானரை இப்படி சொல்லாதே வேணுகோபால்


என்றும் இந்தியன்
ஏப் 25, 2025 17:12

தமிழக அரசு காவல் துறை பெயர் திராவிட அரசு ஏவல் துறை என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது என்று அதிகார பூர்வமாக தெரிகிறது இதனால்


brittopharma
ஏப் 25, 2025 17:06

ஆளுனர் அவர்களே. உங்கள நியமித்த ஒன்றிய அரசு வெளியிட்ட அறிக்கையில் தமிழ் நாடு தொழில்துறை மற்றும் கல்வியில் மற்ற எல்லா மாநிலங்களைக் முதலில் உள்ளதுன்னு பட்டியல் பொட்டு வெளியிட்டது பொய்ங்களா ஆளுநர் அவர்களே?


thehindu
ஏப் 25, 2025 15:52

பயங்கரவாதிகள் காவல்துறையை அரசை மிரட்டுவது காரணமான ஒன்றுதான்


ameen
ஏப் 25, 2025 15:45

ஆட்டுக்கு தாடி போல் மாநிலத்திற்கு ஆளுநர் தேவையா என்ற கேள்வி 50 வருடமாக இன்றும் தொடர்கிறது....


Srinivasan Krishnamoorthy
ஏப் 25, 2025 15:53

will you hold the same view when stalin becomes opposition leader. DMK changed stances according to situations. They gave deep trouble to Jayalalitha through governor Barnala. They are not bothered about their wrong doings in the past


N Sasikumar Yadhav
ஏப் 25, 2025 15:59

அப்ப உங்க திராவிட மாடல் எஜமான் சட்டை கிழித்துக் கொண்டு போய் யாரிடம் மனு கொடுப்பார்


Dharmavaan
ஏப் 25, 2025 16:39

ஆளுநர் இல்லையென்றால் காட்டாச்சிதான் தனி நாடு தான்


Krishnamoorthy
ஏப் 25, 2025 15:12

அரசு பல்கலை கழகங்களின் துணை வேந்தர்கள் புறக்கணித்தது சரியான செயல்.


Krishnamoorthy
ஏப் 25, 2025 15:01

துணைவேந்தர்கள் திமுக support, ஆளுநர் பிஜேபி support