உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ரூ.20 கோடி பறிமுதல் வைரம் ஆட்டை போட்ட போலீசார்?

ரூ.20 கோடி பறிமுதல் வைரம் ஆட்டை போட்ட போலீசார்?

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: 'வழக்கில் பறிமுதல் செய்யப்பட்ட 20 கோடி ரூபாய் மதிப்பிலான நான்கு வைர கற்களுக்கு பதிலாக, அதேபோல தயாரித்த போலி வைர கற்களை, போலீசார் நீதிமன்றத்தில் சமர்ப்பித்துள்ளனர்' என, மாநகர போலீஸ் கமிஷனரிடம் வைர வியாபாரி பரபரப்பு புகார் அளித்துள்ளார்.சென்னை அண்ணா நகர், டவர் வியூ காலனியைச் சேர்ந்தவர் சந்திரசேகர், 56; வைர வியாபாரி. கடந்த 4ம் தேதி, சந்திரசேகர் தன்னிடமிருந்த 20 கோடி ரூபாய் மதிப்பிலான நான்கு வைர கற்களை விற்பதற்காக, வடபழனி - ஆற்காடு சாலையில் உள்ள நட்சத்திர ஹோட்டலுக்கு சென்றார். https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=ef25ozgw&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0அப்போது, வைர கற்களை வாங்கப் போவதாகக் கூறி அழைத்தவர்கள், அவரை கட்டிப் போட்டு, வைர கற்களை பறித்து தப்பினர்.சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த வடபழனி போலீசார், வைர கற்களை கொள்ளையடித்து சென்ற, ஜான் லாயட், 34, விஜய், 24, ரதீஷ், 28, அருண் பாண்டியராஜன், 35, ஆகிய நான்கு பேரை கைது செய்தனர்; வைர கற்களையும் பறிமுதல் செய்தனர்.வைர கற்களை, சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் போலீசார் ஒப்படைத்தனர். ஆனால், நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்ட வைர கற்கள் ஒரிஜினல் இல்லை என்பது தெரியவந்தது. இது குறித்து, வேப்பேரியில் உள்ள போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் நேற்று நடந்த பொதுமக்கள் குறைதீர் முகாமில், கமிஷனர் அருணிடம் அவர் புகார் மனு அளித்தார். அந்த மனுவில் கூறியிருப்பதாவது: இம்மாதம் 8ம் தேதி, நான்கு வைர கற்களை நீதிமன்றத்தில் போலீசார் ஒப்படைத்தனர். அந்த வைர கற்கள் ஒரிஜினல் இல்லை. அவை, போலீசாரால் தயாரிக்கப்பட்ட போலி வைர கற்கள். அவை போலியானது என்பதை மதிப்பீட்டாளர்கள் வாயிலாக நீதிபதியும் அறிந்து கொண்டார்; ஏற்கனவே மதிப்பீட்டாளர்கள் சமர்ப்பித்த ஆவணத்தை வைத்து, சரிபார்க்கவும் உத்தரவிட்டார். எனக்கு சொந்தமான பழமையான, 20 கோடி ரூபாய் மதிப்பிலான வைர கற்களை மீட்டுத் தாருங்கள். மோசடியில் ஈடுபட்ட போலீசார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு புகார் மனுவில் கூறியுள்ளார்.இது குறித்து, போலீஸ் அதிகாரியிடம் கேட்ட போது, 'வியாபாரி சந்திரசேகர் அளித்த புகார் முற்றிலும் பொய்யானது. அவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க உள்ளோம்' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 7 )

rasaa
மே 17, 2025 10:18

காவல்துறை உங்கள் நண்பன். நண்பனுக்கு உதவ கூடாதா வைர வியாபாரியே.


N Annamalai
மே 17, 2025 07:55

இது போல் நடக்குமா ?.ஏன்டா காவலர் இது போல் செய்வார் ?.


D Natarajan
மே 17, 2025 07:42

தமிழக போலீசார் தான் உலகத்திலேயே மிக பெரிய திருடரகள் . போலீஸ் என்றாலே லஞ்சம் திருட்டு கொள்ளை தான்.


ராமகிருஷ்ணன்
மே 17, 2025 07:38

விடியல் அரசின் போலீஸ் அப்படித்தான் இருக்கும். ரோடு போடும் கருங்கலை பாலீஷ் செய்து கொடுத்து இதுதான் உங்களிடம் திருடப்பட்ட கல் என்று சொல்லி விடுவார்கள். எச்சரிக்கை.


ramesh
மே 17, 2025 11:30

என்ன ராமகிருஷ்ணன் தமிழ்நாடு இந்தியாவில் தான் இருக்கிறது அதனால் மத்திய அரசு ஆட்சி நடக்கும் இடங்களில் இப்படித்தான் நடக்கும் என்று சொல்லலாமா.


Srinivasan Srisailam Chennai
மே 17, 2025 06:09

காவலர்கள் மீது இப்படிப்பட்ட ஒரு குற்றச்சாட்டு வருவது துரதிஷ்டவசமானது, இதன் உண்மை தன்மை கண்டறியப்பட வேண்டும் குற்றம் யார் பேரில் இருந்தாலும் அவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும் இல்லை எனில் காவலர் மீது மக்கள் வைத்திருக்கும் நம்பிக்கை இழக்க நேரிடும். இது நல்லதல்ல


D.Ambujavalli
மே 17, 2025 03:34

பிடிபட்ட நகைகளுக்கு பதில் ஒன்றிரண்டு போலிகளை வைப்பது போல தான் இதுவும் போலீஸ் என்ன, நீதிபதிகளே கூட ஊழலில் மாட்டும்போது இவர்கள் மட்டும் சந்தேகத்துக்கு அப்பாற்பட்டவர்களா? என் உறவினர் ஒருவரது 5 பவுன் தாலி சங்கிலி திருடப்பட்டது. திருடன் பிடிபட்ட பிறகும் சில நாள் தாமதித்து, 2 பவுன் துண்டைக் கொடுத்துவிட்டு நகை பெற்றுக்கொண்டதாக கையெழுத்துப் போட நிர்பந்தித்தனர் வைரம், 20 கோடி, ஆசை யாரை விட்டது?


முக்கிய வீடியோ