உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / வார விடுமுறை பற்றி தெரியாது: நீதிபதி கேள்விக்கு போலீஸ்காரர் பதில்

வார விடுமுறை பற்றி தெரியாது: நீதிபதி கேள்விக்கு போலீஸ்காரர் பதில்

மதுரை : போலீசாருக்கு வார விடுமுறையை கட்டாயமாக்கும்படி, உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் தொடர்ந்த வழக்கு விசாரணையின்போது, நீதிமன்ற வளாகத்தில் இருந்த போலீசாரை அழைத்து, 'வார விடுமுறை அளிக்கப்படுகிறதா?' என நீதிபதி உடனடி விசாரணை மேற்கொண்டார்.

மதுரை, ஆஸ்டின்பட்டி போலீஸ் ஏட்டு செந்தில்குமார் தாக்கல் செய்த மனு:

பணியின் போது போலீசார் பல்வேறு பிரச்னைகளை எதிர்கொள்கின்றனர். வாரத்தில் ஏழு நாட்களும், 24 மணி நேரமும் பணி செய்ய வேண்டியுள்ளது. இதனால் குடும்பத்தினருடன் நேரம் செலவிட முடியவில்லை. உடல், மன ரீதியாக பாதிக்கப்படுகிறோம்.போலீசாருக்கு வார விடுமுறை அளிக்க, தமிழக அரசு, 2021ல் வெளியிட்ட அரசாணை, தற்போது வரை நடைமுறைக்கு வரவில்லை. எனக்கு பலமுறை வார விடுமுறை மறுக்கப்பட்டது. இதுபோன்ற பிரச்னையை போலீசாரில் பலர் எதிர்கொள்கின்றனர். உரிமைகள் தொடர்பாக உயரதிகாரிகளிடம் கேட்டால் பழிவாங்கப்படுவோம். அரசாணையை முறையாக அமல்படுத்தி, போலீசாருக்கு வாரவிடுமுறை அளிப்பதை கட்டாயமாக்க வேண்டும். இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.இந்த வழக்கு, நீதிபதி பட்டுதேவானந்த் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது அவர், நீதிமன்ற அறையில், பார்வையாளர் பகுதியில் அமர்ந்திருந்த ஒரு போலீஸ்காரரை வரவழைத்து, 'வார விடுமுறை அளிக்கப்படுகிறதா?' என, கேள்வி எழுப்பினார். அந்த போலீஸ்காரர், 'நான் ஒரு உயர் அதிகாரியின் கார் டிரைவராக இங்கு வந்துள்ளேன். வார விடுமுறை பற்றி தெரியாது' என்றார். நீதிமன்ற வளாகத்திலிருந்து மற்றொரு போலீஸ்காரரை வரவழைத்த நீதிபதி, 'வார விடுமுறை அளிக்கப்படுகிறதா?' என, கேள்வி எழுப்ப, அவர், 'உயர்நீதிமன்ற பாதுகாப்பு பணியில் உள்ளேன். நீதிமன்றம் சனி, ஞாயிறு விடுமுறை என்பதால் எனக்கு வார விடுமுறை அளிக்கப்படுகிறது' என்றார். நீதிபதி தீர்ப்பை ஒத்திவைத்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 10 )

Vel murugan
ஏப் 24, 2025 18:23

நீதித்துறையிலும் உள்ளது.இரவு காவலருக்கு வார விடுமுறை இல்லை.


சாமானியன்
ஏப் 24, 2025 16:33

போலிஸ்துறை முதல்வர் பார்த்துக்கொள்கிறார். மாதம் ஒரு முறை ரிவிய்யு பண்ணால் அங்கே நடப்பது தெரியும். தனது துறையிலேயே இவ்வளவு குளறுபடிகள் இருக்கிறதே !


venugopal narayanan
ஏப் 24, 2025 12:54

TN police definitly desreve to be given rest and refit . 80% of the working force is sufficient on normal days. As such there are quick action force on stand by available in all police districts. extra force placed on road in every 10 feet for VIP duties must be reduced . With traffic signal and U turn plan is effective at all places traffic police also can be given rest. No doubt crime rate is alarming but police alone cannot stop the crime with out public support. public too maintain a disccipline and follow all rules and precautions as advised .let us support police and give them rest to protect us better.


Sivaprakasam Chinnayan
ஏப் 24, 2025 18:39

Are they working?. Ha ha. Leave for rest?


Mecca Shivan
ஏப் 24, 2025 12:35

லஞ்சம் வாங்க தெரியும்.. எதற்கு விடுமுறை ..


Yasararafath
ஏப் 24, 2025 11:35

காவல்துறை பதில் இது இல்லை


உண்மை கசக்கும்
ஏப் 24, 2025 10:45

,முக்கிய தலைகள் செல்லும்போது காவல்துறையில் பலர் சாலையில் தவம் கிடக்க வேண்டும். அவசரத்திற்கு சிறுநீர் கழிக்க கூட முடியாது. குடிக்க தண்ணீர் கிடைக்காது. வ்வ்யிலில் சாவ வேண்டும். இதுக்காது பரவாயில்லை. அமெரிக்கன் எம்பசி அருகில் அண்ணா மேம்பாலத்த்தில் 3 அல்லது 4 காவல்துறை நண்பர்கள் வெந்து சாவார்கள். பெரிய பிஸ்தாக்களா இந்த அமெரிக்கன் எம்பஸியில் வேலை பார்க்கும் ஆசாமிகள்.


GMM
ஏப் 24, 2025 08:01

போலீஸ் அரசு அலுவலகம், அரசு மருத்துவ மனை, போன்ற பொது இடங்களில் அந்த அலுவலக தலைமை அதிகாரி கட்டுபாட்டில் பணி அமர்த்த வேண்டும். அவசர போலீஸ் மட்டும் போலீஸ் துறை நிர்வாக கட்டுபாட்டில் இருக்க வேண்டும்.


Kalyanaraman
ஏப் 24, 2025 07:36

என்னதான் லஞ்சம் வாங்குகிறார்கள் அதிகார துஷ்பிரயோகம், இப்படி காவல்துறையைப் பற்றி இருந்தாலும் அவர்களும் பாவம் தான் வார விடுமுறையே கிடையாது. எப்போது கூப்பிட்டாலும் வரவேண்டும், எத்தனை மணி நேரம் ஆனாலும் வேலை செய்ய வேண்டும். அவர்களும் மனிதர்கள் தானே. மனித உரிமை பற்றி வாய் கிழிய பேசுபவர்கள் இதற்கு ஏன் மௌனமாக இருக்கிறார்களோ?


Palanisamy Sekar
ஏப் 24, 2025 06:58

குறைந்த பட்சம் போலீஸ்காரர்களை மனிதர்களாக மரியாதை கொடுத்து நடத்த இந்த அரசு முயற்சியிக்க கோர்ட்டார் வழிவகை செய்திட வேண்டும். அப்போதுதான் போலீசார் பொதுமக்களை மனிதர்களாக நடத்துவார்கள். தொடர் வேலை காரணமாக அதிலும் உயர் அதிகாரிகளின் வலுக்கட்டாய வேலையை சுமத்துவதால் மனத்தளவில் பாதிக்கப்படுகின்ற போலீசார் அந்த அழுத்தம் காரணமாக ஏற்படும் கோபத்தை பொதுமக்களிடம் தான் காட்ட நேரிடுகின்றது. போலீஸ்காரர்கள் குடும்பத்தினரையும் கோர்ட்டார் கவனத்தில் எடுத்துக்கொள்ள வேண்டும். இந்த அளவுக்காவது நீதிபதிகள் விசாரித்ததே மகிழ்ச்சியான செய்தி. இதனோடு நிறுத்திவிடாமல் வாரவிடுமுறையை கட்டாயமாக்க உயர் போலீஸ் அதிகாரிகளுக்கு கடுமையான உத்தரவை இடவேண்டும்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை