உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / அரசியல் ஆசான் திருமாவளவன்: ஆதவ் அர்ஜூனா

அரசியல் ஆசான் திருமாவளவன்: ஆதவ் அர்ஜூனா

சென்னை: 'எனது அரசியல் ஆசான் திருமாவளவன்; அவரது அறிவுரைகளை ஏற்று பயணிப்பேன்' என விடுதலை சிறுத்தைக் கட்சியில் இருந்து விலகிய ஆதவ் அர்ஜூனா தெரிவித்தார்.தமிழக வெற்றிக் கழகத்தில் இணையும் திட்டம் உள்ளதா என நிருபர்கள் எழுப்பிய கேள்விக்கு, 'எதிர்கால திட்டம் குறித்து ஆலோசித்து விரைவில் அறிவிப்பேன். எங்கு இணைகிறேன் என்பதை விட என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து ஆலோசிக்கிறேன்' என விடுதலைச் சிறுத்தைகள் கட்சியில் இருந்து விலகிய ஆதவ் அர்ஜூனா பதில் அளித்தார்.மேலும், அவர் கூறியதாவது: திருமாவளவன் வார்த்தைக்கு கட்டுப்பட்டு, அவரது அறிவுரையை ஏற்று பயணிப்பேன். எனது அரசியல் ஆசான் திருமாவளவன். அவரிடம் இருந்து நிறைய விஷயங்களை கற்றுள்ளேன். இவ்வாறு ஆதவ் அர்ஜூனா கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

வைகுண்டேஸ்வரன் V
டிச 19, 2024 19:33

திருமாவளவன் வார்த்தைக்கு நான் எப்போதும் கட்டுப்படுவேன், அவரது வாழ்த்து மற்றும் அறிவுரைகளை ஏற்று பயணிப்பேன். திருமா வை அரசியல் அனாதை ஆக்கி நடுத்தெருவில் நிறுத்தும் வரை அவரோடு பயணிப்பார். திருமா வை முடிச்சு வுட்டுட்டு தான் நிறுத்துவார். இப்பவே பாதி முடிச்சுட்டார். 2026 தேர்தலுக்கு சீட் கேட்டு திருமா அறிவாலயம் வந்து எப்படி, என்ன பேச முடியும்? "அதான் மன்னராட்சி " ன்னு சொல்லிட்டு இங்கே எதுக்கு வந்தீங்க? " ன்னு உதயநிதி கேட்டால் மூஞ்சியை எங்கே கொண்டு வெச்சுப்பார்??


S Ramkumar
டிச 16, 2024 16:26

எப்ப தாவேகாவில் இணையப்போறீங்க.


சம்பர
டிச 16, 2024 13:49

அதான் வெளிய போயாச்சு இனி என்ன ஆசான் ஊசாண்னுட்டு


Barakat Ali
டிச 16, 2024 13:42

கொஞ்சிக்கிட்டே முதுகுல குத்துறது இதுதானோ ????


எவர்கிங்
டிச 16, 2024 12:45

re-entry க்கு அச்சாரம் போட்டாச்சு


முக்கிய வீடியோ