உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / பொங்கல் பரிசு தொகுப்பு 1.47 கோடி பேருக்கு வினியோகம் பெரியகருப்பன் தகவல்

பொங்கல் பரிசு தொகுப்பு 1.47 கோடி பேருக்கு வினியோகம் பெரியகருப்பன் தகவல்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: கூட்டுறவுத் துறை அமைச்சர் பெரியகருப்பன் அறிக்கை:பொங்கல் பண்டிகையை சிறப்பாக கொண்டாடும் வகையில், அனைத்து ரேஷன் அட்டைதாரர்கள் மற்றும் தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பத்தினருக்கு, தலா ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, முழு கரும்பு வழங்க முடிவு செய்யப்பட்டு உள்ளது. மாநிலம் முழுதும் 34,793 ரேஷன் கடைகளில், 2.20 கோடி அரிசி அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் பணி முழுவீச்சில் நடந்து வருகிறது. இதற்காக, 50,000 கூட்டுறவு பணியாளர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர். பொங்கல் பண்டிகைக்கு முன்பாக, அனைத்து அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு வழங்கும் வகையில் பணி நடந்து வருகிறது. அதன்படி, 11ம் தேதி வரை தமிழகம் முழுதும் 1.47 கோடி அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்புகள் வழங்கப்பட்டு உள்ளன. அதாவது, 67 சதவீதம் பேர் பெற்றுள்ளனர். மீதமுள்ள பயனாளிகளுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் பணி நடந்து வருகிறது.இவ்வாறு அவர் கூறி உள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 18 )

யார் அந்த சார், சென்னை
ஜன 14, 2025 00:13

பொங்கல் பண்டிகை சிறப்பாக கொண்டாட பொங்கல் பரிசு தொகுப்பு.1 கிலோ பச்சரிசி,1 கிலோ சீனி மற்றும் ஒரு முழு கரும்பு இதை வைத்து பொங்கல் பண்டிகையை சிறப்பாக கொண்டாட முடியுமாம். இதுதான் திராவிட மாடல். மாதம் மாதம் இலவசமாக போட்ட பச்சரிசி, மாதம் மாதம் குடும்பத்தின் தேவைக்கு ஏற்ப போட்ட சீனி, இது போக ஒரே ஒரு கரும்பு. இதற்குப் பெயர் பொங்கல் பரிசு தொகுப்பு. கம்பி கட்டுற கதை எல்லாம் சொல்றாங்க பாருங்க..


Barakat Ali
ஜன 13, 2025 14:05

இந்த சார் புகழ்பெற்றவர் ......


M Ramachandran
ஜன 13, 2025 13:05

என்ன ஓங்கோல் பரிசா? ஓஹோ பொங்கல் பரிசா கிராமத்து பெண்கள் சாபமிடுகிறார்கள். பலன் 2026 இல் தெரியும். ஜெயலலிதா அம்மையார் மிக்சி கிரைண்டர் fan கொடுத்தார்கள். இவர்கள் ஐஸ் ப்ருட்டு அதுவும் ஐஸ் உருகி போய் வெறும் குச்சி தான் மிச்சம்


ram
ஜன 13, 2025 12:48

இதில் சின்னவர் நேற்று பொங்கல் பண்டிகை கொண்டாடினர் செருப்பு காலோடு பொங்கல் பானை அடுப்பு ஏத்தாமல், முஸ்லீம் கிறிஸ்டின் ஆட்களோடு அதில் ஒரு கிரிப்டோ பைபிள் வைத்து கொண்டு, வெட்கக்கேடான ஒன்று. இவர் அந்த பதவிக்கு லாயக்கு இல்லாதவர்.


KavikumarRam
ஜன 13, 2025 12:32

உங்களுக்கெல்லாம் குத்தம் சொல்றதுக்கு என்ன அருகதை இருக்குன்னு நீங்களே கேட்டுக்குங்க.


KavikumarRam
ஜன 13, 2025 12:30

வாயெடுத்தா பொய் கைய்யெடுத்தா களவு என்பதே திமுககாரனின் தாரக மந்திரம்.


KavikumarRam
ஜன 13, 2025 12:28

மூன்றிலும் பொய் . ரேஷன் கடையில் கிடைத்தது 1 கிலோ பச்சரிசி, 1 கிலோ சீனி, ஒரு இத்துப்போன கரும்பு.


ram
ஜன 13, 2025 11:13

பொங்கல் தொகுப்பு ஒரு கிலோ அரிசி, ஒரு கிலோ சர்க்கரை, ஒரு சூம்பிப்போன கரும்பு அவ்வளுவுதான். தொகுப்பு எல்லாம் துட்டு கொடுத்து வாங்க வேண்டும் ஒரு தொகுப்பு 199, 499, 999. இதில் முக்கால்வாசி திருட்டு திமுக ஆட்கள் வாங்கி கொண்டு சென்று விட்டார்கள். கார்டு வைத்துஇருக்கும் மக்கள் கேட்டால் அதுவெல்லாம் இல்லை என்று ரேஷன் கடைகளில் சொல்லுகிறார்கள். இதுதான் உண்மை நிலவரம்.


Pats, Kongunadu, Bharat, Hindustan
ஜன 13, 2025 10:00

தமிழர் திருவிழா, உழவுத் திருவிழா நம் மாநிலத்தில் பிச்சைக்காரர்கள் திருவிழாவாக மாறிவிட்டது. வாழ்க பிச்சைக்காரர்கள் தினம்.


Kannan Chandran
ஜன 13, 2025 09:50

என்னையா அநியாயமாக இருக்கு. உங்களுக்கு கார் பந்தயமும் வேணும், பொங்கலும் வேணும்னா எப்படி.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை