உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / துவங்கியதும் முடிந்தது பொங்கல் சிறப்பு ரயில்கள் முன்பதிவு; முன்பதிவில்லாத சிறப்பு ரயில்கள் இயக்கப்படுமா?

துவங்கியதும் முடிந்தது பொங்கல் சிறப்பு ரயில்கள் முன்பதிவு; முன்பதிவில்லாத சிறப்பு ரயில்கள் இயக்கப்படுமா?

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: பொங்கல் பண்டிகை சிறப்பு ரயில்களுக்கான முன்பதிவு இன்று (ஜன.,10) முன்பதிவு துவங்கிய 10 நிமிடத்தில் டிக்கெட் விற்று தீர்ந்தது. தட்கல் முறையில் டிக்கெட் பெறுவதற்கு பயணிகள் முனைப்பு காட்டி வருகின்றனர்.தென் மாவட்டங்களைச் சேர்ந்த ஏராளமானோர் சென்னை, கோவையில் வசிக்கின்றனர். இவர்கள் தைப்பொங்கலை முன்னிட்டு தங்கள் சொந்த ஊருக்கு வந்து செல்ல சென்னையிலிருந்து இயங்கும் அனைத்து ரயில்களிலும் முன்பதிவு செய்துள்ளதால், தற்போது வெயிட்டிங் லிஸ்ட் நிலை காணப்படுகிறது. சிறப்பு ரயில்களிலும் இதே நிலை தொடர்கிறது.சிறப்பு ரயில்களுக்கான முன்பதிவு இன்று (ஜன.,10) காலை 8 மணிக்கு துவங்கியது. முன்பதிவு துவங்கிய 10 நிமிடத்தில் டிக்கெட் விற்று தீர்ந்தது. தட்கல் முறையில் டிக்கெட் பெறுவதற்கு பயணிகள் முனைப்பு காட்டி வருகின்றனர். நாளை பயணம் செய்ய இன்று காலை 10 மணிக்கு தட்கலில் முன்பதிவு செய்யலாம். சிறப்பு ரயில்கள் நாளை முதல் இயக்கப்படுகின்றன.எனவே ஜன. 11, 12, 13 ல் சென்னை, கோவையில் இருந்து மதுரை, திருநெல்வேலி, நாகர்கோவிலுக்கும், மறு மார்க்கத்தில் ஜன. 17,18, 19 ல் நாகர்கோவில், திருநெல்வேலி, மதுரையில் இருந்து சென்னை, கோவைக்கும் முன்பதிவு இல்லாத சிறப்பு ரயில்களை தெற்கு ரயில்வே நிர்வாகம் இயக்க வேண்டுமென தென் மாவட்ட மக்கள் எதிர்பார்க்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 6 )

Sidharth
ஜன 10, 2025 12:56

ஜி ஆட்சியில் புல் புல் பறவையில் பறந்து போக முடியாதா?


eros
ஜன 10, 2025 16:16

வேணும்னா நீ காகா மாறி கத்து...இல்ல காகா புடி


நக்கீரன் (நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே)
ஜன 10, 2025 12:47

இப்படி வருடா வருடம் பண்டிகை காலங்களில் மக்கள் சொந்த ஊருக்கு செல்வத்ததற்கு கஷ்டப்படுவது தொடர்கிறது. ஆனால், அதை சரி செய்ய மத்திய மாநில அரசுகளால் எந்த நடவடிக்கையும் இல்லை. இதில் வருமானம் பார்க்கவே அரசுகள் விரும்புகின்றன. தென் மாவட்ட மக்கள் இங்கே வந்து குவிவதற்கு என்ன காரணம்? போதிய தொழில் வாய்ப்புகள் அங்கே இல்லை. இருக்கும் கொஞ்ச தொழில்களிலும் போதுமான வருமானம் இல்லை. அதனால், வேறு வழியின்றி இடம் பெயர்கிறார்கள். இந்த நயவஞ்சக ஆட்சியாளர்கள் எல்லா தொழில்களையும் வட மாவட்டங்களில் குறிப்பாக சென்னையிலேயே குவிக்கிறார்கள். தென்மாவட்டங்கள் புறக்கணிக்கப்படுகின்றன. ஆள்வோர் விமானங்களில், சொகுசு காரிலும் பவனி வர அவர்களுக்கு ஓட்டுப்போட்டு மக்கள் டிக்கெட்டே கிடைக்காமல் அலைந்து திரிந்து கஷ்டப்படுகிறார்கள். இப்படி கஷ்டப்படும் மக்கள் கொஞ்சமேனும் தேர்தல் நேரத்தில் சிந்தித்து வாக்களித்தால் இது போன்ற கஷ்டங்கள் தேவையில்லை. என்ன செய்வது ஆட்டுமந்தைகளாய் மாறிவிட்ட மக்களுக்கு என்னதான் கஷ்டப்பட்டாலும் டாஸ்மார்க் உபயத்தால் புத்தி வேலை செய்யமாட்டேங்குது. அதனால் கஷ்டப்படுங்கள்.


Sampath Kumar
ஜன 10, 2025 11:23

ஆக சிங்கார சென்னை வாசிகள் அதாவது வெளிஊர் வாசிகளின் சன்தோஷத்திற்கு வருஷ வருஷம் இந்த கூத்து அரங்கேறுகிறது மக்களுக்கு என்ன பயன்? ஒரு சுக்கும் இல்லை அரசுக்கு நல்ல வருமானம் இந்த பண்டிகை கொண்டுங்கள் வேடம் என்று சொல்ல இல்லை அதை தங்கள் வசிக்கும் ஊரிலே கொண்டாடினால் உண்ணும் குடி மூழ்கி விடாதா விஞஞானம் வளருது உள்ள நிலையில் உங்கள் ஆழிபேசியில் ஆடியோ வீடியோ மூல உறவுகளை தொடர் கொள்ளலாமே செய்வார்களா ???/


கிஜன்
ஜன 10, 2025 10:42

ஏன் மெட்றாஸ்ல விட்டா பொங்காதா ?


MARI KUMAR
ஜன 10, 2025 10:32

இது வழக்கமாக நடக்குது ஒன்றுதான்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை