உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / மகா கேவலமாக பேசிவிட்டு மன்னிப்பு கேட்கிறார் பொன்முடி

மகா கேவலமாக பேசிவிட்டு மன்னிப்பு கேட்கிறார் பொன்முடி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: பெண்களையும், சைவ, வைணவ சமயங்களையும் மகா கேவலமாக பேசிய ஆபாச பேச்சு அமைச்சர் பொன்முடி, அனைத்து தரப்பிலும் எதிர்ப்பு கிளம்பியதை தொடர்ந்து மன்னிப்பு கேட்பதாக அறிக்கை வெளியிட்டு உள்ளார்.விழுப்புரத்தில் கடந்த 6 ம் தேதி பெரியார் திராவிடர் கழகம் சார்பில் நடந்த நிகழ்ச்சியில் அமைச்சர் பொன்முடி பங்கேற்றார். விலைமாதுவுடன் சைவம், வைணவம் சமயங்களை தொடர்புப்படுத்தி மிகவும் ஆபாசமாக கொச்சைப்படுத்தி பேசினார். பெண்கள் பங்கேற்ற இந்த நிகழ்ச்சியில் மிகவும் அசிங்கமான வார்த்தைகளை அவர் பயன்படுத்தியது அனைவரையும் முகம் சுளிக்க வைத்தது. அவருக்கு அனைத்து தரப்பிலும் கடும் எதிர்ப்பு எழுந்தது. அவரது கட்சி பதவி பறிக்கப்பட்டது. அமைச்சர் பதவி பறிப்பு எப்போது என அனைத்து தரப்பிலும் கேள்வி எழுப்பப்படுகிறது. https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=rgjfbfby&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0அனைத்து தரப்பிலும் இருந்து எதிர்ப்பு கிளம்பியதைத் தொடர்ந்து பொன்முடி மன்னிப்பு கேட்டுள்ளார்.அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: உள் அரங்கக் கூட்டத்தில், தகாத பொருளில் தவறான சொற்களைப் பயன்படுத்தி நான் பேசிய பேச்சுக்கு மனப்பூர்வமாக மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன்.இந்தத் தகாத கருத்தை நான் பேசியது குறித்து உடனடியாக மனப்பூர்வமாக வருந்தினேன். நீண்ட காலம் பொது வாழ்க்கையில் உள்ள எனக்கு இதுபோன்ற தடுமாற்றம் ஏற்பட்டது குறித்து நான் மிகவும் வருந்துகிறேன். பலருடைய மனதைப் புண்படுத்தும் வகையில் இப்பேச்சு அமைந்து விட்டது குறித்தும், அவர்கள் தலைகுனியும் சூழல் ஏற்பட்டது குறித்தும் நான் மிகவும் மனம் வருந்துகிறேன்.மனம் புண்பட்ட அனைவரிடமும் நான் பேசிய பேச்சுக்கு மீண்டும் மீண்டும் மன்னிப்புக் கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அந்த அறிக்கையில் பொன்முடி கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 53 )

VITTAL KRISHNAMOORTHY RANGARAO
ஏப் 13, 2025 16:06

நாடு அதை நாடு ... வாழும் பொழுது எல்லாம் அதையே பாடு மானம் பெரிது கூறும் பண்பாடு என்ற தலைவர்கள் வாழ்ந்த தமிழ் நாட்டில்....


Shunmugham Selavali
ஏப் 13, 2025 12:29

இந்த ஆள் ஓர் சாக்கடை என்பதை அடிக்கடி நிரூபித்துக்காட்டுகிறார். இவருடைய மனைவி, மக்கள் முகத்தில் எப்படி விழிப்பார். மீண்டும் மக்களிடம் எப்படி ஓட்டு கேட்ப்பார். இழி பிறவி.


Palanisamy T
ஏப் 13, 2025 11:41

நம் முன்னோர்கள் அன்றே சொன்ன சொல். "கொட்டியப் பாலையும் அள்ளமுடியாது கொட்டிய வார்த்தைகளையும் அள்ளமுடியாது". இப்போது மன்னிப்பு கேட்பதினால் எந்தப் பயனுமில்லை. ஹிந்து மதத்திலும் நிறைய குற்றங்களும் குறைகளுமுண்டு பிற மதங்களிலும் இதைவிட மோசமான பின்னடைவுகள் குழப்பங்கள் நிறைந்தேயுள்ளன. அமைச்சரென்றால் நன்குப் படித்தவராக இருக்க வேண்டும். பொறுப்புள்ளவர்கள் இப்படிப் பேசமாட்டார்கள். ஹிந்து மதத்தோடு ஒப்பிட்டால் இவையெல்லாம் நேற்றுவந்த மதங்கள். இதுவொன்றை வைத்தே பாஜக நாளையோ நாளை மறுநாளோ தமிழகத்தை கைப்பற்றிவிட நிறைய வாய்ப்புக்கள் உள்ளது


venugopal s
ஏப் 13, 2025 11:27

இதை விடக் கேவலமாகப் பேசிய வட இந்திய பாஜக தலவர்களையே மக்கள் மன்னித்து விட்டனர், மறந்தும் விட்டனர்.


vijai hindu
ஏப் 13, 2025 11:40

200 ரூபாய் குவாட்டர் பிரியாணி கண்டிப்பா உங்களுக்கு உண்டு


Karthik
ஏப் 13, 2025 15:16

நீ சைவமா வைணவமா?


Sampath Kumar
ஏப் 13, 2025 08:47

பேசி மன்னிப்பு ஓகே


RAMAKRISHNAN NATESAN
ஏப் 13, 2025 08:47

பொன்முடி, துரைமுருகன் இவங்க செஞ்சதையே உதாரணமா வெச்சி ஹிந்துக்களும் இம்சை மன்னரைப்பற்றி, அவன் பேமிலி பத்தி எதையாவது பேசிவிட்டு மன்னிப்புக்கேட்கலாமா ????


Suppan
ஏப் 12, 2025 22:15

திமுகக்காரனுக்கு வெட்கம் மானம் என்று ஏதாவது உள்ளதா என்ன?


நிக்கோல்தாம்சன்
ஏப் 12, 2025 21:19

இப்படி பேசி உமது பிறப்பு எப்படி பட்டது என்பதனை நிரூபித்து விட்டாய்


Natarajan Ramanathan
ஏப் 12, 2025 21:11

நானும் கேவலமாக பேசிவிட்டு மன்னிப்பு கேட்டால் சரியாகிவிடுமா?


naranam
ஏப் 12, 2025 20:52

கேவலம் ராமசாமியின் சீடன் அப்பாவின் அடிமை 21 ம் பக்கத்தை பின் பற்றுவர்களிடன் வேறு என்ன எதிர் பார்க்க முடியும். கடவுள் நிச்சயம் தண்டிப்பார்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை