உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / பொன்முடி மீதான வழக்கு: கூடுதல் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய அவகாசம்

பொன்முடி மீதான வழக்கு: கூடுதல் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய அவகாசம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

விழுப்புரம் : விழுப்புரம் கோர்ட்டில் நடந்து வரும் அமைச்சர் பொன்முடி மீதான செம்மண் குவாரி வழக்கில், கூடுதல் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய, அரசு தரப்பில் அவகாசம் கேட்டுள்ளனர்.கடந்த தி.மு.க., ஆட்சியின்போது விழுப்புரம் மாவட்டம், பூத்துறை அரசு செம்மண் குவாரியில் ஏலம் விட்டு, அளவுக்கு அதிகமாக செம்மண் எடுத்து முறைகேடு நடந்ததாக அமைச்சர் பொன்முடி, மகன் கவுதமசிகாமணி, உட்பட 8 பேர் மீது 2012ம் ஆண்டு மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்குப் பதிந்தனர்.விசாரணை, விழுப்புரம் மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. 67 பேர், அரசு தரப்பு சாட்சிகளாக சேர்க்கப்பட்டு, சாட்சிகளிடம் விசாரணை நடந்து வருகிறது. இதுவரை 51 பேர் சாட்சியம் அளித்துள்ள நிலையில், 30 பேர் அரசு தரப்புக்கு எதிராக பிறழ் சாட்சியம் அளித்துள்ளனர்.வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. வழக்கில் தொடர்புடைய ஜெயச்சந்திரன், கோபிநாதன், சதானந்தம், ராஜமகேந்திரன் ஆஜராகினர். அரசு தரப்பு சாட்சிகள் ஆஜராகவில்லை. அரசு தரப்பு வழக்கறிஞர் ஆஜராகி, இந்த வழக்கில் இறுதி அறிக்கையாக, கூடுதல் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய உள்ளதால், அதற்கு அவகாசம் வழங்கும்படி கோரினார். நீதிபதி மணிமொழி, வழக்கின் விசாரணையை ஏப்., 22க்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 24 )

Visu
ஏப் 04, 2025 12:04

வழக்கு தள்ளுபடி செய்யப்படும் அதுவரை மக்கள் பொறுமை காக்க வேண்டும்


Murthy
ஏப் 04, 2025 11:37

திமுக-பிஜேபி கள்ள உறவுக்கு இதுதான் சாட்சி.. இதுவரை எந்த அமைச்சரும் தண்டிக்கப்படவில்லை.. போதைமருந்து கடத்தியதற்காகவோ, கள்ளச்சாராய சாவுக்கோ, ஊழலுக்கோ...


ஆரூர் ரங்
ஏப் 04, 2025 13:01

பொன்முடி தண்டிக்கப்பட்டார். அவ‌ரது மனைவியும் தண்டிக்கப்பட்டார் ஆனால் மீண்டும் மந்திரியாக ஆக்க நீதிமன்றமே அழுத்தம் கொடுத்தது. இப்போ சொல்லுங்க அது மத்திய அரசின் தவறா? கட்டுக்கட்டாக பணம் எரிந்த நிகழ்வுக்குக்கூட நீதிபதியின் வீடு என்பதால் தாமாக வழக்குப் பதிவு பதிவு செய்ய போலீசுக்கு அதிகாரமில்லையாம். சட்டம் அப்படி சொல்லுது.


sridhar
ஏப் 04, 2025 13:51

பிஜேபிக்காரர்கள் தான் நீதிபதிகளா ? ஆமையை விட மெதுவாக நகரும் நீதிமன்றங்கள் தான் காரணம் .


K.Rajasekaran
ஏப் 04, 2025 11:36

மத்திய அரசு என்ன செய்கிறது, இந்த குற்றவாளியை தண்டிக்காமல் வேடிக்கை பார்க்கிறது, மாநில அரசு எதுவும் செய்யாது என்பது ஊரறிந்த விஷயம், என்னை கேட்டால் மத்திய அரசுக்கும் இந்த திராவிட திருட்டு மாடல் அரசுக்கும் எந்த வேறுபாடும் இல்லை. இறைவன் ஒருவனே நின்று கொள்வான்.


Narayanan
ஏப் 04, 2025 11:23

ஸ்டாலின் தலைமையின் கட்டுப்பாட்டில் போலீஸ் துறை இருப்பது நீதிபதிக்கு தெரியும்தானே .இப்படியே வாய்த்த கேட்டு கேட்டு ஆட்சிக்காலம் முழுதும் அமைச்சராகவும். பின்னர் தேர்தலில் நிற்கவும் வழி வகுக்கும்தானே? நீதித்துறை நிதியை எதிர்நோக்கி இருப்பது தெரிகிறது .


அப்பாவி
ஏப் 04, 2025 11:20

உருப்புடுமா? உருப்புடுமா இந்த நாடு?


Anand
ஏப் 04, 2025 11:16

அவன் ஆயுள் முடிவதற்குள் தாக்கல் செய்து தண்டனை பெற்று தர முடியுமா...?


Ramalingam Shanmugam
ஏப் 04, 2025 11:08

10 வருடம் போனால் இறந்து விடுவார் அப்புறம் சொத்துக்கள் லீகல் ஆகி விடும்


kumarkv
ஏப் 04, 2025 10:59

இவங்க குடும்பம் எல்லாம் அப்படியே நாசமா போகவேண்டும்


sridhar
ஏப் 04, 2025 10:48

நிதானமா செய்யுங்க, அவசரம் இல்லை. ஒரு பத்து வருஷம் போகட்டும், இயற்கை பாத்துக்கும் .


Parthasarathy Badrinarayanan
ஏப் 04, 2025 10:40

அமைச்சருக்கு எதிராக சாட்சி சொன்னாங்க திராவிட தில்லுமுல்லு மாடல் ஆட்சியில்?


முக்கிய வீடியோ