உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தமிழகத்தில் மக்கள் தொகை வளர்ச்சி 7.7 சதவீதமாக சரிவு

தமிழகத்தில் மக்கள் தொகை வளர்ச்சி 7.7 சதவீதமாக சரிவு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: உலக மக்கள் தொகை தினத்தையொட்டி, சென்னையில் நேற்று விழிப்புணர்வு பேரணி நடந்தது. இதில் பங்கேற்ற பின், மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் சுப்பிரமணியன் கூறியதாவது:மக்கள் தொகையை கட்டுப்படுத்தும் வகையில், தேசிய அளவில், 'தாய் மற்றும் சேய் நல்வாழ்விற்கு சரியான வயதில் திருமணம், போதிய பிறப்பு இடைவெளி சிறந்தது' என்ற கருப்பொருள்படி உலக மக்கள் தொகை தினம் அனுசரிக்கப்பட்டு வருகிறது.குடும்பநல திட்டத்தை செயல்படுத்துவதில், நாட்டிலேயே தமிழகம் முன்னோடி மாநிலமாகும். இந்தியாவின் மக்கள் தொகை, 145.3 கோடி; தமிழக மக்கள் தொகை 8.4 கோடி. தமிழகத்தில் பிறப்பு விகிதம், 15 முதல் 49 வயதுக்கு உட்பட்ட 1,000 பெண்களுக்கு 13.8 ஆக உள்ளது.பிரசவத்தின் போது மரணம் அடைவோர் விகிதம், ஒரு லட்சம் பெண்களுக்கு, 45.6 ஆக உள்ளது. சிசு மரணத்தை பொறுத்தவரையில் 1,000 குழந்தைகளுக்கு, 13 என்ற அளவில் உள்ளது.தமிழகத்தில் மக்கள் தொகை வளர்ச்சி விகிதம் படிப்படியாக குறைந்து, தற்போது, 7.7 சதவீதம் என்ற நிலையில் உள்ளது. பூஜ்ஜியம் என்ற நிலையை, 2035ம் ஆண்டுக்குள் அடைந்த முதல் மாநிலம் என்ற பெருமையை தமிழகம் பெறும்.இவ்வாறு கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 7 )

Sankara Subramaniam
ஜூலை 16, 2024 15:00

தேர்தலின் போது ஒரு ஓட்டுக்கு 1 லி க.சாராயம் இலவசமாக கொடுத்தால் அடுத்த தேர்தலலுக்குள் சொர்க்கம் மக்கள் தொகை குறையும் பணம் பட்டுவாடாவும் குறையும்


kulandai kannan
ஜூலை 14, 2024 11:55

7.7 ல் அவர்கள் எவ்வளவு?


தமிழ்வேள்
ஜூலை 14, 2024 10:36

மானாவாரியாக பிரியாணி தின்னும் பழக்கமும், டாஸ்மாக் டானிக் வழக்கமும் பிள்ளை பேற்றை, ஆண் தன்மையை அழிக்கும்...


va sri.nrusimaan
ஜூலை 14, 2024 06:57

this is bcz of Tasmac with targeted sales.


Mani . V
ஜூலை 14, 2024 03:38

தலைவர் மாதிரி அனைவரும் மனைவி, இணைவி, துணைவி என்று வாழ்ந்தால், மக்கள் தொகை குறையாது என்பதற்குத்தான் தலைவர் போட்டோ வைத்துள்ளார்களோ?


N Sasikumar Yadhav
ஜூலை 14, 2024 03:02

ஒரு குறிப்பிட்ட மதத்தினரின் ஜனத்தொகை பெருகுகிறதே . இந்துக்கள் இப்போது மூன்று வேளையும் பிரியாணி சாப்பிட ஆசைப்படுகிறார்கள் .. ஆனால் இரண்டு வேளை கிடைக்கிறது பிரியாணி


N Sasikumar Yadhav
ஜூலை 14, 2024 03:02

ஒரு குறிப்பிட்ட மதத்தினரின் ஜனத்தொகை பெருகுகிறதே . இந்துக்கள் இப்போது மூன்று வேளையும் பிரியாணி சாப்பிட ஆசைப்படுகிறார்கள் .. ஆனால் இரண்டு வேளை கிடைக்கிறது பிரியாணி


மேலும் செய்திகள்