மேலும் செய்திகள்
பொதுமக்கள் 256 பேர் தபால் ஓட்டளிக்க ஏற்பாடு
21-Jan-2025
ஈரோடு: ஈரோடு கிழக்கு தொகுதியில் 246 பேர் தங்களின் தபால் ஓட்டை பதிவு செய்துள்ளனர்.ஈரோடு கிழக்கு தொகுதிக்கான இடைத்தேர்தல் பிப்.5ம் தேதி நடக்கிறது. ஓட்டுகள் எண்ணப்பட்டு, தேர்தல் முடிவு பிப்.8ம் தேதி அறிவிக்கப்படுகிறது. முக்கிய எதிர்க்கட்சிகள் தேர்தலை புறக்கணித்துவிட்டதால் போட்டியிடும் தி.மு.க., மற்றும் நாம் தமிழர் வேட்பாளர்கள் தீவிர ஓட்டு வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். மொத்தம் 46 வேட்பாளர்கள் களத்தில் இருக்கும் இந்த தேர்தல் களத்தில் தபால் ஓட்டுப்பதிவு தொடங்கியது. 85 வயதுக்கு மேற்பட்ட வாக்காளர்கள் 209 பேர், மாற்றுத்திறனாளிகள் 47 பேர் என ஒட்டுமொத்தமாக 256 பேர் தபால் ஓட்டளிக்க விருப்பம் தெரிவித்து இருந்தனர்.அவர்களுக்கான ஓட்டுப்பதிவு கடந்த (ஜன.) 23ம் தேதி தொடங்கியது. 256 பேரில் 3 பேர் வயது முதிர்வின் காரணமாக காலமாகிவிட்டனர். 7 பேர் வாக்களிக்கவில்லை. கடைசி ஓட்டாக ஈரோடு மணல்மேட்டைச் சேர்ந்த 103 வயது முதியவர் பெரியண்ணன் என்பவரின் தபால் ஓட்டு பெறப்பட்டது.ஒட்டுமொத்தமாக தபால் ஓட்டளிக்க விருப்பம் தெரிவித்தவர்களில், 246 பேர் தங்களின் தபால் ஓட்டை செலுத்தி இருக்கின்றனர். இதையடுத்து, தபால் ஓட்டு நிறைவு செய்யப்பட்டது.
21-Jan-2025