உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ஏ.டி.எம்., கட்டணத்தை உயர்த்தியது தபால் துறை

ஏ.டி.எம்., கட்டணத்தை உயர்த்தியது தபால் துறை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: ஏ.டி.எம்., கார்டு வாயிலாக பணம் எடுப்பதற்கான கட்டணத்தை, தபால் துறை மாற்றி அமைத்துள்ளது.வாடிக்கையாளர்கள் தாங்கள் கணக்கு வைத்திருக்கும் வங்கி அல்லது நிதி நிறுவனங்களின் ஏ.டி.எம்.,களில் இருந்து பணம் எடுக்கும் போது, குறிப்பிட்ட எண்ணிக்கையிலான பரிவர்த்தனைகளுக்கு பின், கட்டணம் வசூலிக்கப்படுகிறது. நகரம் மற்றும் கிராமப்புறங்களில் இந்த எண்ணிக்கை மாறுபடுகிறது.தற்போது, தபால் துறை ஏ.டி.எம்., கார்டு வாயிலாக பணம் எடுப்பதற்கான கட்டண விதிமுறைகளை, அந்த துறை மாற்றி அமைத்து உள்ளது.அதாவது, மெட்ரோ என வரையறுக்கப்பட்ட நகரங்களில், பிற வங்கிகளின் ஏ.டி.எம்.,கள் வாயிலாக, தபால் ஏ.டி.எம்., கார்டு பயன்படுத்தி மூன்று முறைக்கு மேல் பண பரிவர்த்தனை மேற்கொள்ளும் போதும், மெட்ரோ அல்லாத நகரங்களில் ஐந்து முறைக்கு மேல் பணம் எடுக்கும் போதும், 20 ரூபாய் மற்றும் ஜி.எஸ்.டி., கட்டணம் இதுவரை வசூலிக்கப்பட்டு வந்தது.தற்போது இது, 23 ரூபாய் மற்றும் ஜி.எஸ்.டி., என்று மாற்றப்பட்டுள்ளது.பண பரிவர்த்தனை அல்லாத பிற சேவைகளுக்கு, 8 ரூபாய் மற்றும் ஜி.எஸ்.டி., கட்டண நடைமுறை இருந்தது. தற்போது, 11 ரூபாய் மற்றும் ஜி.எஸ்.டி., என்று மாற்றப்பட்டு உள்ளது. இந்நடைமுறை நேற்று முதல் அமலுக்கு வந்தது. - நமது நிருபர் -


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 7 )

V Gandhi Rajan
நவ 03, 2025 15:59

Post office have introduced on lone banking in which no ges levied. Log on to it today.


Neelachandran
நவ 03, 2025 08:57

அஞ்சல்துறை ஏடிஎம் வசதியை தற்காலிகமாக நிறுத்தியிருந்தது.தற்போது புதுப்பித்து விட்டார்களா


GMM
நவ 02, 2025 09:29

முன்பு மணி ஆர்டர் போன்ற சேவை இருந்தது. தற்போது முழுவதும் நின்று இருக்கும். நாடு முழுவதும் உள்ள மக்களுக்கு போஸ்ட் ஆபீஸ் ஒரு முக்கிய உதவி மையம். இதன் நிதி தேவையை பூர்த்தி செய்ய வேண்டும். நாடு முழுவதும் கட்டண அடிப்படையில் தபால் துறை மக்களுக்கு இருப்பிட சான்று வழங்க வேண்டும். மாநில நிர்வாகம் தன் துறை அதிகாரிகள் மூலம் வழங்க வேண்டும். இரண்டும் பொருத்தமாக இருந்தால் மட்டும் ஆதார், ஓட்டுரிமை, ரேஷன்.. வழங்க வேண்டும்.


SENTHIL NATHAN
நவ 02, 2025 06:59

தபால் துறை தேவையில்லாதவற்றுள் ஒன்று என்ற நிலைமைக்கு சென்ற பிறகு கூட இதுகளுக்கு காமண்சென்ஸ் இல்லை


முருகன்
நவ 02, 2025 06:33

கூவி கூவி கணக்கு தொடங்க வைத்தாது இதற்கு தான் போலும்


அப்பாவி
நவ 02, 2025 05:38

ஒசத்துங்கோ... உங்க பங்குக்கு நீங்களும் உருவுங்கோ...


V Venkatachalam, Chennai-87
நவ 02, 2025 11:48

நாம் திருட்டு தீயமுக ஆட்சியில் இருக்கோம். நமக்கு எல்லாமே ஃப்ரீயா வேணும். வேணுமானால் டமில் நாட்டுக்கு ன்னு ஒரு பேரல்லல் தபால் துறையை தொடங்கலாம். இப்பவே தொடங்கினா, முத்தமில் அறிஞர் தலீவர் கலைஞர் பேரு வச்சுடலாம்.பேரு வைக்குர டார்ஜெட்டில் ஒண்ணு குறஞ்சிடும்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை