உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / முதுநிலை மருத்துவ படிப்பு நீட் தேர்வு ஒத்திவைப்பு

முதுநிலை மருத்துவ படிப்பு நீட் தேர்வு ஒத்திவைப்பு

சென்னை,: முதுநிலை நீட் தேர்வு, வரும் 15ம் தேதி இரண்டு கட்டங்களாக நடக்கவிருந்த நிலையில், ஒரே கட்டமாக நடத்துவதற்காக ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்த தேர்வு எழுத, தமிழகத்தில் 25,000 பேர் உட்பட நாடு முழுதும், 2.30 லட்சத்துக்கும் மேற்பட்ட எம்.பி.பி.எஸ்., முடித்த டாக்டர்கள் விண்ணப்பித்து இருந்தனர். தமிழகத்தில், 17 உட்பட, நாடு முழுதும் 179 நகரங்களில், வரும் 15ம் தேதி, காலை 9:00 முதல் 12:30 மணி வரை, மாலை 3:30 முதல் 7:00 மணி வரை, இரண்டு ஷிப்ட் முறையில் தேர்வு நடக்கவிருந்தது.இதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், இரண்டு ஷிப்டுகளுக்கு பதிலாக, ஒரே ஷிப்டில் தேர்வு நடத்த உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இதை ஏற்ற, தேசிய மருத்துவ அறிவியல் தேர்வுகள் வாரியம், முதுநிலை மருத்துவ படிப்புகளுக்கான 'நீட்' தேர்வு, ஒரே ஷிப்டில் நடத்தப்படும். கூடுதல் தேர்வு மையங்கள் ஏற்படுத்த வேண்டி இருப்பதால், ஜூன் 15ம் தேதி நடக்கவிருந்த தேர்வு ஒத்தி வைக்கப்படுகிறது. தேர்வு தேதி விரைவில் அறிவிக்கப்படும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை