மேலும் செய்திகள்
உ.பி.,யில் 2.89 கோடி வாக்காளர்கள் நீக்கம்
1 hour(s) ago
வள்ளல் தகடூர் அதியமான் பெயரை எழுதிய நெடுஞ்சாலைத்துறை
2 hour(s) ago | 1
சென்னை:வரும், 2024 -25ம் கல்வியாண்டுக்கான முதுநிலை மருத்துவ படிப்புகளில், மாணவர் சேர்க்கைக்கான நீட் தேர்வு, மார்ச், 3ல் நடைபெறும் என, அறிவிக்கப்பட்டு இருந்தது. தற்போது, இந்ததேர்வு தள்ளி வைக்கப்பட்டு உள்ளது.தேசிய மருத்துவ அறிவியல் தேர்வுகள் வாரியம் வெளியிட்ட செய்திக்குறிப்பு: எம்.பி.பி.எஸ்., மாணவர்கள் கடைசி ஓராண்டு, பயிற்சி டாக்டர்களாக பணியாற்ற வேண்டும். இந்தாண்டு பயிற்சியை நிறைவு செய்பவர்களும், நீட் தேர்வில் பங்கேற்கும் வகையில், ஜூலை, 7ம் தேதிக்கு தேர்வு ஒத்திவைக்கப்பட்டு உள்ளது.ஆக., 15 அல்லது அதற்கு முன் பயிற்சியை நிறைவு செய்பவர்கள், நீட் தேர்வில் பங்கேற்கலாம். மேலும் விபரங்களுக்கு https://natboard.edu.inஎன்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.இவ்வாறு கூறப்பட்டுள்ளது.
1 hour(s) ago
2 hour(s) ago | 1