மேலும் செய்திகள்
வாகனம் மோதி இருவர் பலி
01-Jul-2025
சென்னை:திருநெல்வேலி மாவட்டம், கூடங்குளம் அணுமின் நிலைய விரிவாக்க அணு உலைகளில், மின் உற்பத்தி துவக்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. மூன்றாவது அணு உலையில், 2026 டிசம்பரிலும், நான்காவது அணு உலையில், 2027 ஆகஸ்டிலும் மின் உற்பத்தி துவக்கப்படும் என்ற தகவல் வெளியாகி உள்ளது. கூடங்குளத்தில், மத்திய அரசின் இந்திய அணுமின் கழகத்துக்கு, தலா 1,000 மெகா வாட் திறனில், இரு அணு உலைகளுடன் கூடிய அணுமின் நிலையம் உள்ளது. ஒதுக்கீடு
இங்கு உற்பத்தியாகும் மின்சாரத்தில் இருந்து, தமிழகத்திற்கு தினமும் 1,152 மெகா வாட்டும், மீதி மின்சாரம் அண்டை மாநிலங்களுக்கும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.கூடங்குளம் அணுமின் நிலையத்தில் தலா, 1,000 மெகா வாட் திறனில் மூன்று மற்றும் நான்காவது அணு உலை அமைக்கும் பணி, 2016 - 17ல் துவங்கியது. இவற்றில் இந்த நிதியாண்டில் மின் உற்பத்தி துவக்க திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால், இன்னும் கட்டுமானப் பணி முடிவடையாததால், மின் உற்பத்தியை துவக்குவதில் தாமதமாகும் நிலை ஏற்பட்டுள்ளது.இது குறித்து, மின் வாரிய அதிகாரி ஒருவர் கூறியதாவது:கூடங்குளம் அணுமின் நிலையம், ரஷ்யா உதவியுடன் அமைக்கப்பட்டது. இங்கு அணு மின்சாரம் நிலையாக கிடைக்கிறது. ஒரு யூனிட் மின்சார விலை, 3.50 - 4 ரூபாயாக உள்ளது. குறைந்த செலவில், தமிழக மின் தேவையை பூர்த்தி செய்வதில், கூடங்குளம் மின்சாரம் முக்கிய பங்கு வகிக்கிறது. தமிழக மின் தேவை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. தாமதம்
இரு அணு உலைகளில் உற்பத்தியாகும் மின்சாரத்தை முழுதுமாக ஒதுக்கீடு செய்ய, மத்திய அரசுக்கு தமிழகம் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது. மத்திய அரசிடம் இருந்து எந்த பதிலும் கிடைக்கவில்லை. கூடங்குளம் மூன்றாவது அணு உலையில், இந்த ஆண்டு டிசம்பரிலும், நான்காவது அணு உலையில், அடுத்த ஆண்டு ஆகஸ்டிலும் மின் உற்பத்தி துவங்கும் என தகவல் தெரிவித்தனர். கட்டுமானம், முக்கிய உபகரணங்கள் பொருத்தும் பணிகள் முடிவடைந்துள்ளன. இருப்பினும் பணிகள் முழுமை அடையாததால், மின் உற்பத்தி துவக்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. ரஷ்யா - உக்ரைன் போரால், ரஷ்யாவில் இருந்து தளவாடங்கள் வர தாமதமானது முக்கிய காரணம். கூடங்குளம் மூன்றாவது அணு உலையில், 2026 டிசம்பரிலும், நான்காவது அணு உலையில், 2027 ஆகஸ்டிலும் மின் உற்பத்தி துவக்கப்படும் என, மத்திய மின் துறையின் கீழ் செயல்படும் தென் மாநில மின்சாரக் குழு வாயிலாக தகவல் கிடைத்துள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
01-Jul-2025