உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தமிழகத்தில் மின் தடை குறைவு

தமிழகத்தில் மின் தடை குறைவு

சென்னை : மத்திய மின் திட்டங்கள் தொடர்பான ஆய்வு கூட்டம், நேற்று முன்தினமும், நேற்றும், டில்லியில் நடந்தது. அதில், மத்திய மின் துறை அமைச்சர் ஆர்.கே.சிங், மத்திய, மாநில மின் துறை உயரதிகாரிகள் பங்கேற்றனர். தமிழக எரிசக்தி துறை செயலர் பீலா வெங்கடேசன் மற்றும் மின் வாரிய அதிகாரிகள் பங்கேற்றனர்.கூட்டத்தில் பேசிய, மத்திய மின் துறை அமைச்சர் ஆர்.கே.சிங், 'நாட்டிலேயே மின் தடை எண்ணிக்கை மற்றும் கால அளவு தமிழகத்தில் குறைவு. தமிழகத்தின் மின்சார கட்டமைப்பின் நம்பகத்தன்மை, வளர்ந்த நாடுகளுடன் இணையானது' என, தெரிவித்துள்ளார். இந்த தகவல், தமிழக மின் வாரியம் வெளியிட்ட செய்திகுறிப்பில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை