உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ரயிலில் இருந்து தவறிவிழுந்த கர்ப்பிணி பலி: வேலைசெய்யாத அபாய சங்கிலியால் வினை

ரயிலில் இருந்து தவறிவிழுந்த கர்ப்பிணி பலி: வேலைசெய்யாத அபாய சங்கிலியால் வினை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

விருத்தாசலம்: வளைகாப்புக்காக சென்னையில் இருந்து கொல்லம் எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணித்த 7 மாத கர்ப்பிணி கஸ்தூரி, வாந்தி எடுக்க படிக்கட்டு பகுதிக்கு சென்றபோது தவறி கீழே விழுந்தார். அவரது உறவினர்கள் அபாய சங்கிலியை இழுத்தும் அது வேலை செய்யாததால், நீண்ட தூரம் சென்று ரயில் நின்றது. அதற்குள் படுகாயமடைந்த கர்ப்பிணி கஸ்தூரி, உயிரிழந்தார்.தென்காசி மாவட்டம் மேல்நிலைய நல்லூர் பகுதியை சேர்ந்தவர் சுரேஷ்குமார். இவரது மனைவி கஸ்தூரி. சென்னையில் வசித்துவரும் இவர்களுக்கு திருமணமாகி 9 மாதங்கள் ஆன நிலையில், கஸ்தூரி 7 மாத கர்ப்பமாக உள்ளார். கஸ்தூரிக்கு வளைகாப்பு நடத்துவதற்காக அவரது உறவினர்கள் சென்னை எழும்பூர் ரயில் நிலையில் இருந்து சங்கரன்கோவிலுக்கு செல்லும் கொல்லம் எக்ஸ்பிரஸ் ரயிலில் அழைத்து வந்துள்ளனர். ரயில், கடலூர் மாவட்டம் விருத்தாசலம் ரயில் நிலையத்தை கடந்தபோது கஸ்தூரிக்கு திடீரென வாந்தி வந்ததாக கூறப்படுகிறது.இதனால் ரயில் படிக்கட்டு பகுதிக்கு சென்று வாந்தி எடுக்க முற்பட்டபோது திடீரென ரயிலில் இருந்து தவறி விழுந்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த உறவினர்கள் அந்த ரயில் பெட்டியில் இருந்த அபாய சங்கிலியை பிடித்து இழுத்தனர். ஆனால் அது வேலை செய்யாததால், டிக்கெட் பரிசோதகர் உதவியுடன் அருகில் இருந்த மற்றொரு பெட்டியில் உள்ள அபாய சங்கிலியை இழுந்து ரயிலை நிறுத்தியுள்ளனர். அதற்குள் ரயில், பல கிலோமீட்டர் தூரம் கடந்துவிட்டது. பிறகு கீழே விழுந்த கர்ப்பிணி கஸ்தூரியை உறவினர்கள், ரயில்வே போலீசார் தேடினர். நீண்ட நேர தேடலுக்கு பின்னர் படுகாயமடைந்த கஸ்தூரி உயிரிழந்த நிலையில் கிடந்தார். இதனை கண்டு உறவினர்கள் கதறி அழுதனர். அபாய சங்கிலி வேலை செய்யாததால் சில கிலோமீட்டர் தூரம் தள்ளி ரயில் நின்றிருந்தது. அபாய சங்கிலி வேலை செய்திருந்தால் அப்போதே ரயில் நின்றிருந்து, படுகாயங்களுடன் அவரை மீட்டிருக்கலாம் என உறவினர்கள் தரப்பில் கூறுகின்றனர். வளைகாப்புக்காக சென்ற பெண், ரயிலில் தவறி விழுந்து உயிரிழந்த சம்பவத்தால் அப்பகுதியில் சோகம் நிலவியது.

சந்தேக மரணமாக வழக்குப்பதிவு

ரயிலில் இருந்து தவறி விழுந்து கஸ்தூரி உயிரிழந்த விவகாரம் தொடர்பாக சந்தேக மரணம் என்ற பிரிவில் வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்துகின்றனர்.கஸ்தூரிக்கு திருமணமாகி 8 மாதங்களே ஆகிறது. இதனையடுத்து அவரது மரணம் குறித்து ஆர்டிஓ விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது. அவரும் விசாரணையை துவக்கி உள்ளார். வாந்தி எடுக்கும் போது கீழே தவறி விழுந்ததாக தெரிகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 28 )

MADHAVAN
மே 06, 2024 11:10

வந்தபாரத் னு ரயிலு விட்டு இன்னும் என்ன என்ன பண்ணப்போறாங்களோ


Mohan
மே 04, 2024 10:36

திருமணமான பெண்கள் பாத்ரூம் போகும் சமயம் பெரும்பாலும் இன்னொருவர் அல்லது கணவருடன் செல்வர் மாத கர்ப்பிணியை வாந்தி எடுக்க தனியாக அனுப்பிய புத்திசாலி கணவர் மற்றும் உறவினர்கள்- கண்டிப்பாக விசாரிக்கப்பட வேண்டியவர்களே


K.Muthuraj
மே 03, 2024 20:23

கொல்லம் எக்ஸ்பிரஸ் பழைய ஐ சி எப் ரயில் பெட்டிகளை கொண்டது அது முழு வேகத்தில் செல்லும் பொழுது படிக்கட்டு, பாத்ரூம் பகுதிகளில் அதிகமான அதிர்வுகளை, அலசல்களை கொடுக்கும் தற்போதைய நவீன LHB பெட்டிகளில் பயணம் செய்து விட்டு இந்த மாதிரி ரயில் பெட்டிகளில் பயணம் செய்வோருக்கு அந்த அசௌகரியம் தெரியும் அதிக எச்சரிக்கை தேவைப்படும் பிடிமானமற்ற, லேசான தடுமாற்றம் கூட நம்மை விழவைத்துவிடும் சுமார் பத்தாண்டுகளுக்கு முன் நம் இந்த பெட்டிகளில் மட்டுமே கவனமாகவே பயணம் செய்து பழகியிருந்தோம் அதனால் பிரச்சினைகளாய் தெரியவில்லை


Nagarajan S
மே 03, 2024 19:11

கர்ப்பிணியாக இருக்கும் பெண்ணை கூட வந்தவர்கள் ஏன் தனியாக வாந்தி எடுக்க அனுப்பினார்கள்? அவர் எதற்காக ரயிலின் வாசற்படிக்கு சென்று வாந்தி எடுக்க முயற்சிக்க வேண்டும்? எல்லா ரயில் பெட்டிகளின் இரண்டு முனைகளின் கதவிற்கு அருகில் வாஷ் பேசின் உள்ளதே அதில் வாந்தி எடுத்திருக்கலாம்


Saai Sundharamurthy AVK
மே 03, 2024 18:21

அந்த பெண் முன் பதிவு செய்யப்பட்ட பெட்டியில் பயணித்திருந்தால் கதவை மூடியிருக்க வேண்டும். அல்லது கைத் தாங்கலாக வாஷ் பேசினையாவது கெட்டியாக பிடித்துக் கொண்டிருக்க வேண்டும். பொதுவாக வாஷ் பேசின் என்பது படிக்கட்டு பகுதியிலிருந்து ஒரு மீட்டர் தூரம் உள்ளது. அப்படியிருக்க படிக்கட்டு பகுதி வரை சென்றது தான் பிரச்சினையாகியிருக்கிறது. ஒருவேளை இவரே கதவை திறந்து வெளியில் வாந்தி எடுக்க முற்பட்டிருப்பார் என்றே தோன்றுகிறது. மயக்கநிலை ஏற்பட்டிருப்பதால் அப்படியே விழுந்தும் விட்டிருக்கலாம். பெரும்பாலும் ஓடும் ரயிலில் கதவை மூடித்தான் வைப்பார்கள். சில சமயங்களில் அடுத்த ரயில் நிலையத்தில் பயணிகள் எளிதாக ஏறுவதற்காக கதவை திறந்தும் வைத்திருப்பார்கள். போன உயிர் திரும்பவரப் போவதில்லை. அந்த கர்பிணிப் பெண்ணுக்காக கண்ணீர் விடுவதைத் தவிர வேறு வழியில்லை.


J.V. Iyer
மே 03, 2024 17:19

கேவலம் சம்பளம் வாங்கிக்கொண்டு இவர்கள் என்னதான் செய்கிறார்கள்? இவர்களுக்கு கடுமையான தண்டனை விதிக்கவேண்டும்


அசோகன்
மே 03, 2024 16:47

வாந்தி வரும்போது வந்தவுடன் மயக்கம் வருவது பெரும்பாலும் இயல்பு...... அதனால் உடன் உடனிருப்பவர்கள் அவரை பிடித்துக்கொள்ளவேண்டும்....... கண்டுகொள்ளாமல் விட்டுவிட்டு இப்போ ரயில்வே மேல் பழி போசுவது அசிங்கம்....... அப்போ விமானத்தில் போனா என்ன பண்ணுவாங்க........


Kumaran
மே 03, 2024 16:40

துரதிர்ஷ்டவசமாக இப்படிப்பட்ட நிகழ்வு நடந்து இருக்கக்கூடாது கர்ப்பிணி பெண்ணுடன் வேறெருவர் துணைக்கு சென்றிருக்க வேண்டும் இந்த கொடுமை மீண்டும் யாருக்கும் வரக்கூடாது இறைவா


ஆரூர் ரங்
மே 03, 2024 16:38

ஓடும் ரயிலின் கதவுகளைத் திறந்து கொண்டு அங்கே நிற்க வேண்டாம். தண்டனைக்குரிய து என அங்கே எழுதி வைத்திருப்பதை இவர் பார்த்திருப்பார். எனவே ரயில்வே பொறுப்பல்ல.


ஜெய்ஹிந்த்புரம்
மே 06, 2024 09:34

வந்தே பாரத் ரயிலில் போயிருந்தால் இந்த பிரச்சினை வந்திருக்காது


aaruthirumalai
மே 03, 2024 16:19

ரயிலில் கழிப்பிட வசதி உள்ளது.


மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை