உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ஸ்மார்ட் மீட்டர் கொள்முதலுக்கான டெண்டரை ரத்து செய்தது தமிழக அரசு

ஸ்மார்ட் மீட்டர் கொள்முதலுக்கான டெண்டரை ரத்து செய்தது தமிழக அரசு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: அதானி நிறுவனம் குறைந்த விலை குறிப்பிட்டு இருந்த நிலையில், ஸ்மார்ட் மீட்டர்களுக்கான டெண்டரை தமிழக மின்வாரியம் ரத்து செய்துள்ளது.வீடுகளுக்கு இரு மாதங்களுக்கு ஒரு முறையும்; தொழிற்சாலைகளுக்கு மாதந்தோறும் மின் பயன்பாடு கணக்கு எடுக்கப்படுகிறது. அதன்படி, வீடுகளுக்கு மின் ஊழியர்கள் நேரில் சென்று, மீட்டரில் பதிவயாகியுள்ள மின் பயன்பாட்டை கணக்கெடுத்து, மின் கட்டண விபரத்தை, நுகர்வோரிடம் உள்ள கணக்கீட்டு அட்டையில் எழுதி தருகின்றனர். பின், அலுவலக கணினியில் பதிவேற்றம் செய்கின்றனர். அடுத்த சில தினங்களில், மின் கட்டண விபரம் நுகர்வோரின் மொபைல் போன் எண்ணுக்கு எஸ்.எம்.எஸ்., வாயிலாகவும் அனுப்பப்படுகிறது.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=jwo66tat&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0தொழிற்சாலை உள்ளிட்ட உயரழுத்த பிரிவு மின் இணைப்புகளில் உள்ள மீட்டர்களில், தொலைதொடர்பு கருவி பொருத்தப்பட்டு, வாரியத்தில் உள்ள, 'சர்வர்' உடன் இணைக்கப்பட்டு உள்ளது. இதன் வாயிலாக, மாதந்தோறும் ஆளில்லாமல் மின் பயன்பாடு கணக்கு எடுக்கப்படுகிறது. வீடுகளிலும் ஆளில்லாமல் மின் பயன்பாடு கணக்கெடுக்கும், 'ஸ்மார்ட்' மீட்டர் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. இதற்காக, 3.03 கோடி மின் இணைப்புகளுக்கு ஸ்மார்ட் மீட்டர் பொருத்தும் திட்டத்துக்கு, 'டெண்டர்' கோரப்பட்டது.முதல் கட்டமாக வெளியிடப்பட்ட சர்வதேச டெண்டரில் 82 லட்சம் ஸ்மார்ட் மின் மீட்டர்கள் கொள்முதல் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. அதன்படி வெவ்வேறு நிறுவனங்கள் டெண்டர் சமர்ப்பித்தன. அவற்றில் அதானி நிறுவனமே குறைந்தபட்ச விலை உடன் டெண்டர் கோரி இருந்தது. இதனால் அந்த நிறுவனத்திற்கு டெண்டர் ஒதுக்கீடு செய்யப்படும் வாய்ப்புகள் இருந்தன. இந்நிலையில், அதானி தமிழகம் வந்ததாகவும், முக்கிய புள்ளிகளை சந்தித்ததாகவும் சர்ச்சைகள் கிளம்பின. தமிழக அரசு அதானிக்கு ஆதரவாக செயல்படுவதாக ஒரு சில கட்சியினரும், அறப்போர் இயக்கம் உள்ளிட்ட அமைப்பினரும் குற்றம் சாட்டினர்.இத்தகைய பின்னணியில், ஸ்மார்ட் மீட்டர் கொள்முதலுக்கான டெண்டரை தமிழக மின்வாரியம் ரத்து செய்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 29 )

sundar
ஜன 01, 2025 15:34

தரம் இல்லை என்று காரணம் சொல்லப்படும். ஆனால் இதே அதானி நிறுவனத்தை வேறு ஒரு நிறுவனத்திற்கு சப்ளை செய்யச் சொல்வார்கள் அந்த நிறுவனத்திடம் இதே பொருளை கூடுதல் விலைக்கு அரசு வாங்கும். கேட்டால் தரம் என்று சொல்லி மூடிவிடுவார்கள்


அப்பாவி
டிச 31, 2024 14:45

கட்டிங் சதவீதம் பத்தலியோ


Sankare Eswar
டிச 31, 2024 13:15

என்னப்பா அறிவியல் ஊழல் அம்பலம் ஆயிடுச்சா? ரொம்ப சூதானமான திருடங்குகா நீங்களே மாட்டுனா எப்பூடி?


M S RAGHUNATHAN
டிச 31, 2024 11:09

If Adani company go to court saying that the action of the Government is malafide in cancelling the allotment, then the government will be in soup. The government has to place all the papers before Court starting from calling for international tender till finalisation and awarding . The government will be also forced to submit the reason for cancellation of the allotment. It can not hide behind a clause that government reserves the right to cancel the allotment without adducing any reason will not hold water. The government should have to give geniune reasons for the cancellation supported by documents. The government has been caught in catch 22 situation.


GoK
டிச 31, 2024 10:53

சும்மாவா திரும்பவும் மந்திரி ஆனார் செந்திலு பாலாசி? தேர்தலுக்கு இன்னும் 1 வருஷந்தானே இருக்கு ..இப்போதிருந்தயே கொள்ளையடிச்சாதானே வோட்டுக்கு சாராயம், பிரியாணி, காசு, வேட்டி சேல கொடுக்க முடியும் இந்த பிச்சைக்கார தமிழ் வோட்டு போட


ஆரூர் ரங்
டிச 31, 2024 10:44

மின்னணு ஸ்மார்ட் மீட்டர்கள் வந்தால் மாதாந்திர மீட்டர் கணக்கெடுப்புக்கு அழுத்தம் அதிகரிக்கும். பொய் வாக்குறுதி வெட்ட வெளிச்சமாகும். (எல்லா டிரான்ஸ்பார்மர்களிலும் மின்னணு மீட்டர்களை பொருத்தி மின் திருட்டை முழுமையாக தடுக்க வேண்டும். அதெல்லாம் 176000000000 ஆட்டை ஆட்சியில் நடக்குமா? )


ஆரூர் ரங்
டிச 31, 2024 10:39

1.ரீடிங் எடுக்கும் தொமுச உடன்பிறப்புகள் எதிர்த்திருப்பார்கள். (இது விடியல் கழகத்தின் வசூல் வழியைக் குறைக்குமே). எல்லாவற்றிலும் ஏதோ ஒன்று.2. மத்திய அரசு நிதியில் செயல்படுத்தப்படுவதால் கடும் கண்காணிப்பு இருக்கும். அதெல்லாம் மகன் மருமகனுக்கு ஆகாதே. பாமர 200 ஆட்களுக்கு இதெல்லாம் புரியப் போவதில்லை.


Srameshsrivi
டிச 31, 2024 10:33

உரிய கமிஷன் கொடுத்தால் டெண்டர் தரப்படும்.. கமிஷன், கரப்ஷன், கலெக்ஷன்.. இதுதான் கழகத்தின் கொள்கை.. வாழ்க அண்ணாத்துரையின் புகழ்


கூமூட்டை
டிச 31, 2024 10:15

இதே பொருள் வேறு கம்பேனி பேரில் கொள்ளை அடிக்கபடும் வாழ்க வளமுடன் அகண்ட ஊழல் வாதிதக்காளி


Paramasivam
டிச 31, 2024 10:06

அப்போ வாங்குன காசு? திருப்பிக்கொடுக்கப்படுமா? அது அவங்க சரித்திரத்திலேயே இல்லையே, கலைஞர் டிவிக்கு கொடுக்கப்பட்ட பணத்தை திருப்பி கொடுத்ததைத்தவிர


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை