மேலும் செய்திகள்
பள்ளி பேருந்து சக்கரத்தில் சிக்கி 4 வயது குழந்தை பலி
51 minutes ago
நாகர்கோவில்: நாகர்கோவில் அருகே சர்ச்சில் நடந்த கொலை வழக்கில் பாதிரியார் உட்பட மூன்று பேர் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டனர்.ஜன. 20 -ல் மைலோடு மிக்கேல் அதித்துாதர் சர்ச்சில் நிர்வாக பிரச்சனை தொடர்பாக இரு தரப்பினரிடையே ஏற்பட்ட மோதலில் அரசு போக்குவரத்து கழக ஊழியர் சேவியர் குமார் அடித்து கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக அந்த சர்ச் பாதிரியார் ராபின்சன் உட்பட 15 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.இதில் கைது செய்யப்பட்ட ராபின்சன் மற்றும் தி.மு.க., முன்னாள் ஒன்றிய செயலாளர் ரமேஷ் பாபு ,ஜஸ்டிஸ் ரோக் ஆகிய மூன்று பேரையும் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய எஸ். பி. சுந்தர வதனம் பரிந்துரைத்தார். இதையடுத்து கலெக்டர் ஸ்ரீதர், மூவரையும் குண்டர் தடுப்புச் சட்டத்தில் சிறையில் அடைக்க உத்தரவிட்டார்.
51 minutes ago