உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ராமேஸ்வரத்தில் புதிய பாம்பன் ரயில் பாலத்தை திறந்து வைத்தார் பிரதமர் மோடி; சிறப்புகள் ஏராளம்!

ராமேஸ்வரத்தில் புதிய பாம்பன் ரயில் பாலத்தை திறந்து வைத்தார் பிரதமர் மோடி; சிறப்புகள் ஏராளம்!

ராமநாதபுரம்: ராமேஸ்வரத்தில் புதிய பாம்பன் ரயில் பாலத்தை இன்று (ஏப்.,06) பிரதமர் மோடி திறந்து வைத்தார். பின்னர், அவர் ராமேஸ்வரம்-தாம்பரம் (சென்னை) இடையே புதிய ரயில் சேவையை தொடங்கி வைத்தார்.இலங்கை பயணத்தை வெற்றிகரமாக முடித்துவிட்டு, இன்று பிரதமர் மோடி தமிழகம் வந்தார். ராம நவமி நாளான இன்று, மதியம் 1 மணியளவில், ராமேஸ்வரத்தில் இந்தியாவின் முதல் செங்குத்து தூக்கு கடல் பாலமான புதிய பாம்பன் ரயில் பாலத்தை பிரதமர் மோடி திறந்து வைத்தார்.

பின்னர் அவர், சாலை பாலத்திலிருந்து ஒரு ரயிலையும், கப்பலையும் கொடியசைத்து தொடங்கி வைத்தார். பாலத்தில் நடைபெறும் போக்குவரத்து செயல்பாட்டையும் அவர் பார்வையிட்டார். செங்குத்து பாலம் தூக்கப்பட்டு, பாலத்திற்கு அடியே கப்பல் போக்குவரத்து நடந்தது.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=d2hf1gp8&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0

வேட்டி,சட்டையில் பிரதமர்

தமிழர்களின் பாரம்பரிய உடையான வேட்டி, சட்டையை பிரதமர் மோடி அணிந்து இருந்தார். மண்டபத்தில் இருந்து பாம்பனுக்கு காரில் சென்ற போது, சாலையின் இருபுறமும் கூடியிருந்த மக்களை பார்த்து பிரதமர் மோடி கை அசைத்தார்.

ரயில் சேவை துவக்கம்

ராமேஸ்வரம்-தாம்பரம் (சென்னை) இடையே புதிய ரயில் சேவையை கொடியசைத்துத் தொடங்கி வைத்தார். Gallery

புதிய ரயில் பாலம் சிறப்புகள்:

* புதிய ரயில் பாலத்தை கப்பல்கள், ஆழ்கடல் மீன்பிடி படகுகள் கடந்து செல்ல பாலம் நடுவில் 240 அடி நீளம் 570 டன்னில் வடிவமைத்த செங்குத்து துாக்கு பாலம் பொருத்தப்பட்டுள்ளது. * இந்த துாக்கு பாலத்தின் இருமுனையிலும் 34 மீ., உயரத்தில் இரு இரும்பு கோபுரங்கள் உள்ளன. இதன் மேல் தளத்தில் இரு ராட்சத இரும்பு வீல்கள் உள்ளன. * இந்த வீலில் துாக்கு பாலத்தை திறந்து மூட கம்பி வடங்கள் சுற்றி உள்ளனர்.இந்த பாலத்தை 'லிப்ட்' முறையில் திறந்து மூடும் வகையில் வடிவமைத்துள்ளனர். * இதனை ஹைட்ராலிக் இயந்திரத்தில் பொருத்தி உள்ளதால் ஒருமுறை திறக்க 5 நிமிடம் 30 வினாடிகள் ஆகும். * இதை 17 மீ., உயரம் வரை திறந்து வைத்திருக்க முடியும் என்பதால் கனரக சரக்கு கப்பல்கள், கடற்படை கப்பல்கள், எவ்வித சிரமம் இன்றி கடந்து செல்லலாம்.* துாக்கு பாலம் மூடப்பட்டு இருக்கும் சமயத்தில் கடல் மட்டத்தில் இருந்து 11 மீ., உயரத்தில் இருக்கும். இதனால் துாக்கு பாலத்தை திறக்காமலே பாம்பன், ராமேஸ்வரம் பகுதியில் உள்ள படகுகள் பாலத்தை கடந்து செல்ல முடியும். * ஸ்பெயின் நிறுவன பொறியாளர்களின் டிசைனில் வடிவமைக்கப்பட்டது. இதுபோன்ற துாக்கு பாலம் அமெரிக்கா, பிரான்சில் மட்டுமே உள்ளது.* துாக்கு பாலத்தில் அனிமோ மீட்டர் கருவி பொருத்தி உள்ளதால், மணிக்கு 55 கி.மீ.,க்கு மேல் சூறைக் காற்று வீசினால் இக்கருவி தானியங்கியாக செயல்பட்டு ரெட் சிக்னல் காட்டும். இதனால் பாலத்தில் ரயில்கள் செல்ல தடை விதிக்கப்படும்.* துாக்கு பாலத்தை திறந்து மூட புதிய பாலம் கிழக்கு நுழைவில் 700 கிலோ வாட் திறன் கொண்ட தனி டிரான்ஸ்பார்மர் பொருத்தப்பட்டுள்ளது. இருப்பினும் மின் தடை ஏற்பட்டால் 650 கிலோ வாட் திறன் கொண்ட இரு ஜெனரேட்டர்கள் மூலம் இயக்கப்படும். * புதிய ரயில் பாலம் மற்றும் துாக்கு பாலத்தில் மின்சார ரயில்கள் அதுவும் இரு ரயில்கள் செல்லும் வகையிலும் வடிவமைத்துள்ளனர்.* புதிய பாலத்தில் ஒரு வாரத்திற்கு 134 ரயில்கள், அதுவும் அதிகபட்சமாக 75 கி.மீ., வேகத்தில் செல்ல முடியும்.* துாக்கு பாலத்தின் இரு முனைகளில் உள்ள 34 மீ., உயர இரும்பு கோபுரத்தின் மேல் தளத்திற்கு செல்ல லிப்ட் வசதி உள்ளது.* உப்புக்காற்றில் துருப்பிடிக்காத வகையில் துாக்கு பாலத்தில் 'ஜிங்மெட்டாலைசிங்' மற்றும் 'பாலிசிலோசின் பெயின்ட்' பூசி உள்ளனர். * 35 ஆண்டிற்கு துருப்பிடிக்காத வகையில் இந்த ரசாயனம் கலந்த பெயின்ட் பூசியதற்கு செலவு ஒரு கோடி ரூபாயை தாண்டியது. இந்த உயர் ரக பெயின்ட் இந்தியாவில் வேறு எந்த ரயில் பாலத்திற்கும் பூசப்படவில்லை.பாலத்தில் பழுதுபுதிதாக திறக்கப்பட்ட செங்குத்து தூக்கு பாலத்தை கீழே இறக்க முடியாமல் பழுது ஏற்பட்டது. தூக்கு பாலம் ஒருபுறம் ஏற்றம், இறக்கமாக உள்ளதால் சிக்கலானது. இதனை சரி செய்யும் பணியில் பணியாளர்கள் மற்றும் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 15 )

Arunagiri K
ஏப் 07, 2025 14:32

சூப்பர்


Mediagoons
ஏப் 06, 2025 22:09

நாடு முழுவதும் ஆங்கிலேயர்கள் கட்டிய ரயில்வே, ரயில் பாலங்கள் அனைத்தும் நூறாண்டுகளாக பழுதில்லாமல் மிக சிறப்புடன் திகழ்ந்தன . எதற்காக கட்டினார்கள் என்பதை நாடு அறியும்.


செல்வேந்திரன்,அரியலூர்
ஏப் 07, 2025 01:14

படையெடுத்து வந்தவர்களின் பரம்பரையில் பிறந்த உன்னைப் போன்றவர்கள் தேசப்பற்று இல்லாமல் இருப்பதற்கு காரணம் கண்டுபிடிக்க வேண்டிய அவசியம் இல்லை புரிஞ்சா சரி...


T.sthivinayagam
ஏப் 06, 2025 21:33

தாய் மொழியில் கையெழுத்து போடசொன்ன பிரதமருக்கு நன்றி நன்றி நன்றி


V.Mohan
ஏப் 06, 2025 21:16

ஓங்கோல் விடியலின்₹200/- உ.பி சம்பள விசுவாசிகளின் மூளை எங்கேயிருந்து எங்கே தாவுது? அறிவுக் கொழுந்து கடலில் நிறுவப்படும் இரும்பு பாலத்தை , தரையில் ஆற்றின் குறுக்கே கட்டப்பட்ட தடுப்பணையான கல்லணையையும் ஒப்பிட்டு கருத்து போடும் அபத்தம் வேறு யாருக்கும் தோணாது. பிரதமர் வருகிறார் என்றால் 360 டிகிரியில் ஏதாவது குறை சொல்லணும். உலகிலேயே அதிகம் மதிக்கப்படும் தனது நாட்டு பிரதமரை மதிக்காமல் வெட்டியாய் எதிர்க்கும் ஒரே எதிரிக்கட்சி திமுக தான். இத்தனைக்கும் ஒப்பிட்டில் எந்த மதிப்பெண்ணும் பெற இயலாத தனக்கென்று எந்தவித சிறப்புத் திறமைக்கும் பெயர் வாங்காத ஒரே தலைவரை கொண்ட கட்சி திமுக. தமிழ்நாட்டில் ஜெயலலிதாவின் மறைவுக்குப்பின் எந்த பலமான தலைவரும் இல்லாத எதிர்கட்சியாக அதிமுக இருப்பதாலும், லஞ்சத்தையும், ஊழலையும், சாராயத்தையும் தமிழக மக்களின் இரத்தத்தில் கலந்து ஓட விட்டுள்ள திமுகவும் அதன் ஊழல் கூட்டணி கட்சிகளும் ஆக்டோபஸ் போல தமிழ்நாட்டை கசக்கி உறிஞ்சுவது தமிழக மக்களுக்கு மூளை மழுங்கியதை காண்பிக்கிறது. தமிழ் நாட்டில் உள்ள ஊழலில் திளைத்த அரசு அதிகாரிகள், அவர்களுக்கு. உதவும் புரோக்கர்கள், மற்ற இவர்களது வாரிசு, உறவினர்கள், போன்ற எல்லோருக்கும் ஊழல்,லஞ்சம் ஆகியவை கொண்டு நினைத்ததை சாதிக்கும் நிலை மாறவே கூடாது என்பதற்காக அல்லும் பகலும் பாடுபடுகின்றனர். இந்த நிலை மாறினால் தான் நல்லவர்கள் பாதிக்கப்பட மாட்டார்கள். சே என்ன அபத்தமாக ஒப்பிடுகிறார்கள சே


என்றும் இந்தியன்
ஏப் 06, 2025 18:58

ராமேஸ்வரம் இருப்பது எங்கு??? டாஸ்மாக்கினாட்டில் தானே??? ராமேஸ்வரத்தில் புதிய பாம்பன் ரயில் பாலத்தை திறந்து வைத்தார் பிரதமர் மோடி???ஓங்கோல் தெலுங்கு டாஸ்மாக் முதல்வர் எங்கே??? உதகையில் விழாவில் பங்கேற்றுள்ளதால் பாம்பனில் நடக்கும் பாலம் திறப்பு விழாவில் பங்கேற்க முடியவில்லை. இதை நான் பிரதமர் மோடியிடம் ஏற்கனவே தெரிவித்து விட்டேன். பிரதமர் விழாவில் அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, ராஜகண்ணப்பன் ஆகியோர் பங்கேற்றுள்ளனர்.இதை விட கேவலமான ஒரு முதல்வர் இனிமேல்தான் இந்த உலகத்தில் பிறக்கவேண்டும் என்று நிரூபணம் செய்யும் ஸ்டாலின்??இதெல்லாம் ஒரு முதல் மந்திரி????


chinnamanibalan
ஏப் 06, 2025 18:50

வடக்கில் உள்ள காசியும் வாரணாசி, தெற்கில் உள்ள இராமேஸ்வரமும் இந்த புண்ணிய பூமியின் பெருமைக்குரிய ஆன்மீக கலாச்சார அடையாளங்கள் ஆகும். இங்கு பக்தர்கள் தங்கு தடையின்றி விரைவாக நாட்டின் பல பகுதிகளில் இருந்தும் வந்து செல்ல, ரயில் சேவை மட்டுமின்றி, விமான சேவையையும் விரைவில் ஏற்படுத்த மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.


Narayanan
ஏப் 06, 2025 17:46

அப்படி வைக்க முடியாது. வண்டியின் பெயர் தாமரை மலர்தே தீரும்


Shankar
ஏப் 06, 2025 14:47

இந்த புதிய பாலத்தின் பணித்திறனின் காலம் வெறும் 100 வருடம். வரவிருக்கும் 2125 அல்லது 2130 ஆவது வரூடத்தில் இதே இந்த பாலத்தை டிஸ்ட்மெண்டல் பண்ணிவிட்டு திரும்பவும் புதியதொரு பாலத்தை கட்டமைக்க 15 மடங்கு செலவாகும் அதாவது 530 கோடி X 15 = 7950 கோடி. கல்லணை 2000 வருஷம் நிலைத்திருக்கையில் இந்த பாலம் நீண்ட காலம் இருக்க அறிவும், அறிவியலும் இந்தியர்களுக்கு இல்லையா, கடல் தண்ணீர் உப்பு என்று சாக்கு போக்கு சொல்லி மழுங்கிக்கொள்ளுங்கள். ..ஜெய் ஹிந்த்.


C KALIDAS
ஏப் 06, 2025 13:52

நமது நினைவில் வாழும் மேனாள் குடியரசு தலைவர் காலஞ்சென்ற "பாரத ரத்னா அப்துல் கலாம்" பிறந்த ராமேஸ்வரம் பகுதியில் இருந்து இயக்கப்படும் ரயில் என்பதன் அடிப்படையில் இன்று துவக்கப்படும் புதிய ரயில் சேவைக்கு "பாரத் ரத்னா அப்துல் கலாம் விரைவு வண்டி" என்று பெயரிட மத்திய ரயில்வே துறைக்கும் மாண்புமிகு பாரத பிரதமர் அவர்களுக்கும் வேண்டுகோள் விடுக்கிறோம்


கண்ணன்,மேலூர்
ஏப் 06, 2025 21:47

அதென்னடா மேனாள்... முன்னாள் என்று சொல்ல முடியாதா. புதுசு புதுசா வார்த்தைகளை கண்டு பிடிக்கிறார்கள்...


aaruthirumalai
ஏப் 06, 2025 13:47

தனுஷ்கோடி வரை ரயில்பாதை அமைக்க வேண்டும். மிகச்சிறந்த சுற்றுலாதலமாக உருவாக்க வேண்டும்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை