உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தீர்த்த நீராடி, ராமாயண பாராயணம் கேட்டு, ராமேஸ்வரத்தில் வழிபட்ட மோடி

தீர்த்த நீராடி, ராமாயண பாராயணம் கேட்டு, ராமேஸ்வரத்தில் வழிபட்ட மோடி

ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் கோயில் அக்னி தீர்த்த கடற்கரையில் பிரதமர் மோடி புனித நீராடினார். ராமநாத சுவாமி கோயிலில் ராமாயண பாராயணத்தை பிரதமர் மோடி மனமுருகி கேட்டார். முன்னதாக, மஹாலட்சுமி, காயத்ரி, யமுனா உள்ளிட்ட 22 தீர்த்தங்களில் பிரதமர் மோடி நீராடினார். திருச்சியில் இருந்து ஹெலிகாப்டர் மூலம், பிரதமர் மோடி ராமேஸ்வரம் சென்றடைந்தார். https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=ce7uf2gh&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0Galleryபின்னர் அவர் ராமநாதசுவாமி கோயிலில் சாமி தரிசனம் செய்ய சாலை வழியாக காரில் சென்ற போது, சாலையெங்கும் பூக்கள் தூவி பா.ஜ.,வினர் வரவேற்றனர்.

பேட்டரி காரில் பயணித்த மோடி

பின்னர், பிரதமர் மோடி ராமேஸ்வரம் அக்னி தீர்த்தம் கடற்கரையில், புனித நீர் தெளித்து சுவாமி தரிசனம் செய்ய ராமநாதசுவாமி கோயிலுக்கு சென்றார். முன்னதாக, அக்னி தீர்த்த கடற்கரையில் பிரதமர் மோடி புனித நீராடினார்.இதையடுத்து மஹாலட்சுமி, காயத்ரி, யமுனா உள்ளிட்ட 22 தீர்த்தங்களில் பிரதமர் மோடி நீராடினார். அவருக்கு கோயில் நிர்வாகம் சார்பில் பூர்ண கும்ப மரியாதை அளிக்கப்பட்டது.

ராமாயண பாராயணம் கேட்டார் மோடி

ராமநாத சுவாமி கோயிலில் புனித நீராடிய பின் பிரதமர் மோடி வழிபாடு நடத்தினார். கோயில் வளாகத்தில் புதிய ஆடை அணிந்து கொண்டு ராமநாதசுவாமி, பர்வதவர்த்தினி அம்மன் சன்னதி முன் அமர்ந்து பயபக்தியுடன் மோடி சுவாமி தரிசனம் செய்தார். தொடர்ந்து, கோயிலில் நடைபெற்ற ராமாயணப் பாராயணம் நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொண்டார். நிகழ்ச்சியில், எட்டு வெவ்வேறு பாரம்பரிய மண்டலிகள் சமஸ்கிருதம், அவாதி, காஷ்மீரி, குருமுகி, அஸ்ஸாமி, பெங்காலி, மைதிலி மற்றும் குஜராத்தி ராம்கதாக்களை (ஸ்ரீராமன் அயோத்திக்குத் திரும்பிய அத்தியாயத்தை) பாராயணம் செய்தார்கள். அப்போது பிரதமர் ருத்ராட்ச மாலையை அணிந்து இருந்தார்.

மோடிக்கு கை காட்டிய மூதாட்டி!

வழியெங்கும் காத்திருந்த பொதுமக்களை பார்த்து பிரதமர் மோடி கை அசைத்த படி சென்றார். கும்பிட்ட மோடிக்கு, மகிழ்ச்சியுடன் கை காட்டினார் மூதாட்டி ஒருவர். இந்த புகைப்படம் சமூகவலைதளத்தில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.

ஹெலிகாப்டர் சக்கரம் புதைந்தது

ராமேஸ்வரத்திற்கு பிரதமர் மோடி பயணம் செய்த ஹெலிகாப்டர் மாதா அமிர்தானந்த மடம் பள்ளி மைதானத்தில் தரையிறங்கிய போது ஹெலிகாப்டர் சக்கரங்கள் 8 இன்ச் தரைக்குள் புதைந்தது பிரதமருடைய பாதுகாப்பு குறைபாடு காரணமா என அதிகாரிகள் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 40 )

g.s,rajan
ஜன 21, 2024 09:17

உண்மையைச் சொன்னால் அது உளறல் பொய்யாய்ச் சொன்னால் அது உண்மையா...???,நல்லா இருக்கு உங்க பேத்தல் .....


Ramesh Sargam
ஜன 21, 2024 00:10

இப்படி ஒரு தவப்புதல்வர் நமக்கு பிரதமராக கிடைத்தது நாம் செய்த புண்ணியம் என்றுதான் கருதவேண்டும்.


Kasimani Baskaran
ஜன 20, 2024 23:49

இமய மலையில் துறவரம் பூண்ட மோடி போன்ற கர்ம யோகிகளுக்கு ஆண்டவன் திருவுள்ளப்படி அனைத்தும் கிடைக்கும். இராமன் பிறந்த மண் மிக மிகப்புனிதமானது. அதை மீட்டெடுக்க மோடி மேற்கொண்ட முயற்சியை சரித்திரம் பல ஆயிரம் ஆண்டுகள் சொல்லப்போகிறது. அகில உலகத்துக்கும் இராமனின் ஆசி கிடைக்க வேண்டும். அனைவருக்கும் சமாதானமும் சுபிட்சமும் உண்டாக வேண்டும் என்று எம்பெருமானை பிரார்த்திக்கிறேன்.


Venkatesan.v
ஜன 20, 2024 23:37

சங்கி மங்கி நாய்களுக்கு இவரை பற்றிய புரிதல் மிகவும் வித்தயாசமானது.... சலுகையை பெற இவர் வேண்டும் ஆனால் பிரதிஷ்டை செய்ய முடியாது.. ஏன்???? சனாதானம் ????


Anantharaman Srinivasan
ஜன 20, 2024 23:16

ஸ்ரீராமன் அயோத்திக்குத் திரும்பிய அத்தியாயத்தை பாராயணம் செய்தார்கள். அப்போது பிரதமர் ருத்ராட்ச மாலை அணிந்திருந்தார். ருத்ராட்ச மாலை அணிபவர்கள் உண்மையை மட்டுமே பேசி வாழ வேண்டும். அரசியல்வாதி அங்கனம் வாழ்வது இயலாத காரியம்.


kijan
ஜன 20, 2024 23:13

ஸார் .... கொஞ்சம் அடிக்கடி இராமேஸ்வரம் வர இயலுமா .... நீங்கள் நடக்கும் இதே கடற்கரை சில மாதங்களுக்கு முன் கழிவுகளால் நிரம்பி இருந்தது .... மனிதர்கள் ஏன் தான் தாங்கள் உடுத்திய துணியை கடலில் விடுகிறார்கள் என்று புரியவில்லை ....கால் வைக்க முடியாத நிலைமை .... இப்போதோ எதோ பாரின் கடற்கரை போல சுத்தமாக இருக்கிறது ....எத்தனை டன் குப்பைகளை எடுத்தார்கள் என்று தெரியவில்லை ....


வெகுளி
ஜன 20, 2024 22:10

என்ன ஒரு தவ வாழ்க்கை... மோடிஜி அவர்களின் செயல்பாடுகள் மறுபிறவி இன்றி முக்தி அடைய போகும் ஒரு ஞானியின் செயல் போல இருக்கிறது... தெய்வப்புலவர் திருவள்ளுவரது கூற்றுக்கிணங்க வையத்துள் வாழ்வாங்கு வாழ்ந்தபின் வானுறையும் தெய்வத்துள் வைக்கப்படுவார்....


T.sthivinayagam
ஜன 20, 2024 21:41

எல்லாம் ஈசன் திருவிளையாடல் மாண்புமிகு பாரத பிரதமரின் கர்மவினை போக்க அவன் குறித்த நாள் இன்று எல்லாம் ஈசன்செயல்


T.sthivinayagam
ஜன 20, 2024 21:39

எல்லாம் ஈசன் திருவிளையாடல் மாண்புமிகு பாரத பிரதமரின் கர்மவினை போக்க அவன் குறித்த நாள் இன்று எல்லாம் ஈசன்செயல்


g.s,rajan
ஜன 20, 2024 21:02

பாட்டி ,காக்கா ,வடை கதைக்காக எவ்வளவு செய்ய வேண்டியதாக இருக்கு ....


pakkoda
ஜன 20, 2024 21:15

அலற விடுவோம்


hari
ஜன 20, 2024 23:14

என்ன ராஜா உள்ளர்ரா.ராஜன்


மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை