உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தலைமையாசிரியர் தாராளம்: விமானத்தில் பறந்த மாணவர்கள்

தலைமையாசிரியர் தாராளம்: விமானத்தில் பறந்த மாணவர்கள்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

துாத்துக்குடி: துாத்துக்குடியை சேர்ந்த பள்ளி தலைமையாசிரியர் தன் சொந்த செலவில், 17 மாணவ - மாணவியரை விமானத்தில் அழைத்துச் சென்றார்.துாத்துக்குடி அருகே புதுக்கோட்டையைச் சேர்ந்தவர் நெல்சன் பொன்ராஜ், 56; பண்டாரம்பட்டி அரசு உதவி பெறும் துவக்கப்பள்ளி தலைமை ஆசிரியர். வகுப்பில் பாடம் நடத்திய போது, விமானம் குறித்து விளக்கம் அளித்துள்ளார். அப்போது, மாணவ - மாணவியர் சிலர், 'விமானத்தில் பயணம் செய்ய எங்களாலும் முடியுமா?' என, கேள்வி எழுப்பி உள்ளனர்.இதனால், தன் சொந்த செலவில், ஐந்தாம் வகுப்பு மாணவர் ஐந்து பேர், மாணவியர் ஐந்து பேர், முன்னாள் மாணவர்கள் ஏழு பேர், பெற்றோர் இருவர் என மொத்தம், 19 பேரை, நெல்சன் பொன்ராஜ், நேற்று துாத்துக்குடியில் இருந்து சென்னைக்கு விமானத்தில் அழைத்துச் சென்றார்.நெல்சன் பொன்ராஜ் கூறியதாவது: எங்களால் ரயில், விமானத்தில் செல்ல முடியுமா என, மாணவர்கள் கேள்வி எழுப்பினர். வறுமையைக் காரணம் காட்டி அவர்கள் கேட்டது எனக்கு மிகவும் வலித்தது. அதனால் தான் இந்த பயணம். விமானத்தில் சென்னை சென்று, மெட்ரோ ரயிலில் பயணித்தோம். வண்டலுார் உயிரியல் பூங்காவிற்கு சென்றோம்.எனக்கு, 1 லட்சத்து, 5,000 ரூபாய் செலவானது. என் சொந்த பணத்தில் இந்த பயணத்தை ஏற்பாடு செய்ததில் மகிழ்ச்சி. இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 29 )

N Annamalai
மார் 24, 2025 23:30

எங்கள் பாராட்டுக்கள் உங்களுக்கு


Pudhuvai Paiyan
மார் 24, 2025 19:02

செய்தியாளர் ஒருவருடம் கழித்து மீண்டும் இது சம்பந்தமாக செய்தி வெளியிடவேண்டும், நிச்சயம் அனைவரையும் கர்த்தர் ரட்சித்திருப்பார் , ஆமென் . அல்லேய்லுயா


திண்டுக்கல் சரவணன்
மார் 24, 2025 14:41

ஆசிரியருக்கு பாராட்டுகள்


Padmini Ramaswamy
மார் 24, 2025 09:52

நல்ல உள்ளம் படைத்த ஆசிரியருக்கு வாழ்த்துக்கள்


என்றும் இந்தியன்
மார் 23, 2025 18:44

செய்தது கிருத்துவன் என்பதால் ஒரே ஒரு சந்தேகம் அவர் சம்பளம் மிக அதிகம் இருக்கவே முடியாது இது அவரின் இரண்டு மாத சம்ம்பள அளவிற்கு இருக்கலாம். அப்படி இருக்கும்போது அயல்நாட்டிலிருந்து இதை செய்ய சொல்லி வந்த பணமாக இருக்கலாம். இதை சுட்டிக்காட்டி மதமாற்றம் செய்யும் முயற்சியாகவுமிருக்கலாம்.


Pandi Muni
மார் 23, 2025 17:17

மத மாற்ற கும்பலின் புது முயற்சி


sundarsvpr
மார் 23, 2025 14:09

வாழ்த்துக்கள். நல்ல எண்ணம் நல்ல நடவடிக்கை. இந்த எண்ணம் திடிரென்று ஏற்பட்டதா இந்த செய்கை செய்திடவேண்டும் நீண்ட நாளாக மனசில் கொண்டு இருக்க வேண்டும். ஒரு ஏழைக்கு வைத்திய செலவு செய்திட விமானத்தில் செல்ல உபயோகப்பட்டு இருந்தால் கூடுதல் மகிழ்ச்சி கிடைத்து இருக்கும். தலைமை ஆசிரியர் உள்ளம் மென்மையானது என்பதில் சந்தேகம் இருக்க முடியாது.


Sridharan Venkatraman
மார் 23, 2025 16:28

அந்த யோசனையை தாங்கள் செயல் படுத்தலாம்.


BalaG
மார் 23, 2025 14:08

அருமை. அவர் ஆசிரியராய் பணியாற்றியது போலவே, இந்த செயலும் மாணவர்கள் மனதில் நிற்கும். அவர் செலவிட்ட பணம் பல மடங்கு அவருக்கு திரும்ப கிடைக்கும்.. இறைவன் இருக்கிறான்


Joseph Agustine
மார் 23, 2025 13:41

Great HM SIR


vijayasankar c
மார் 23, 2025 13:00

great


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை