உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ஊழல் வழக்குகளுக்கு முன்னுரிமை: சிறப்பு நீதிமன்றங்களுக்கு ஐகோர்ட் உத்தரவு

ஊழல் வழக்குகளுக்கு முன்னுரிமை: சிறப்பு நீதிமன்றங்களுக்கு ஐகோர்ட் உத்தரவு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: '' ஊழல் வழக்குகளுக்கு முன்னுரிமை வழங்கி விசாரிக்க வேண்டும்,'' என எம்.பி.,க்கள் மற்றும் எம்.எல்.ஏ.,க்களுக்கு எதிரான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றங்களுக்கு சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டு உள்ளது.எம்.பி., எம்.எல்.ஏ.,க்களுக்கு எதிரான வழக்குகளை விசாரிக்க மாவட்டந்தோறும் சிறப்பு நீதிமன்றங்கள் அமைக்கப்பட்டு உள்ளன. இந்த நீதிமன்றங்களில் உள்ள வழக்குகள் தொடர்பாக சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதி ஸ்ரீராம் மற்றும் செந்தில்குமார் அமர்வு தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்தது.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=sc7bx1sm&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இந்த வழக்கில், நீதிமன்றங்களுக்கு உதவ மூத்த வழக்கறிஞர் ஒருவர் நியமிக்கப்பட்டார்.அவர் நீதிபதிகளிடம், ' அனைத்து மாவட்டங்களிலும் சிறப்பு நீதிமன்றங்களில் விசாரணையில் உள்ள எம்.பி., எம்.எல்.ஏ.,க்களுக்கு எதிரான வழக்குகளின் புள்ளி விவரம், தற்போதைய நிலை ஆகியவற்றை அளிக்க வேண்டும். ஊழல் வழக்குகளுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும். பல ஆண்டுகளாக சில வழக்குகள் நிலுவையில் உள்ளதாக தெரிவித்தார்.இதனையடுத்து, தமிழகம் முழுதும் சிறப்பு நீதிமன்றங்களில் உள்ள வழக்குகளில் விவரங்களை பெற்று அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். விசாரணையை கண்காணிக்க வேண்டும் என பதிவாளர் அல்லிக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர். மேலும், ஊழல் வழக்குகளுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என சிறப்பு நீதிமன்றங்களுக்கு உத்தரவிட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 12 )

S.Martin Manoj
நவ 18, 2024 15:07

ஐயா இந்த தேர்தல் பத்திர ஊழல் பற்றி விசாரிக்கபடுமா?


AMLA ASOKAN
நவ 14, 2024 19:42

MLA , MP க்கள் மட்டும் தான் ஊழல்வாதிகளா . சொத்து , தங்கம் , ஆடம்பர தேவைகள் அனைத்திலும் கருப்பு பணம் கரை புரண்டு ஓடிக் கொண்டிருக்கிறது . கருப்பு பணம் இல்லாத பணக்காரன் இந்தியாவில் எங்கும் இல்லை . அதை மறைப்பதற்கும் அவனுக்கு தெரியும் . நீதிமன்ற விசாரணையில் நிரூபிக்கவே முடியாது .


Dharmavaan
நவ 14, 2024 19:00

ஊழல் என்பது அவன் சேர்த்த சொத்துக்களை கணக்கு வைத்து நடத்த வேண்டும் வருமானத்துக்கு அதிகமாக சொத்து வழக்காக . அப்போது எல்லாரும் பிடிபடுவார்கள்


Dharmavaan
நவ 14, 2024 18:57

என்று கீழமை நீதிபதிகள் சுடலை அரசின் கட்டுப்பாட்டில் உள்ளதோ அப்போதே அவர்கள் கொத்தடிமைகளாகி விடுவார்கள் எவரும் பிடிபட மாட்டார்


Shekar
நவ 14, 2024 18:05

ஆமாங்க அய்யா, சாட்சி சரியில்லை, போலீஸ் அறிக்கையில் குற்றம் செய்ததற்கான அறிகுறி இல்லை, அமலாக்க துறை அதிகாரிகள் ஐந்து நிமஷம் லேட்டா வந்தாங்க, அப்படின்னு சொல்லி வழக்கை தள்ளுபடி செஞ்சி, 2 நாள்ல முடிங்க எஜமான்


Ramesh Sargam
நவ 14, 2024 17:44

அப்படி என்றால் இதுநாள் வரையில் அப்படி நடக்கவில்லையா…?


raja
நவ 14, 2024 17:38

அட போங்கையா...௨ ஜிலையும் ஏர்செல் மேக்சிஸ் நேசனல் ஹெரால்டுலையும் சம்பந்த பட்டவங்களுக்கு தண்டனை கொடுத்து இருந்தால் எங்க திருட்டு திராவிடன் சின்னவன் கொள்ளையடித்த 30000 கோடி யை தடுத்து இருக்கலாம்...


P.Sekaran
நவ 14, 2024 17:37

எந்த கருத்துக்களையும் பதிவுட்டு பயனில்லை. சம்பாதித்தவர்கள் சம்பாதித்த பணத்தை வைத்துகொண்டு தப்பித்துவிடுவார்கள். சாட்சி சொன்னவர்களை மிரட்டி பிரழ் சாட்சிகளாக மாற்றிவிடுவார்கள் . கடைசியில் ஏமாளிகள் ஓட்டுபோட்ட மக்களை முட்டாளாக்குவார்கள்


D.Ambujavalli
நவ 14, 2024 17:35

ஆமாம் தேர்தல் நெருங்குகிறது சீக்கிரம் எங்கள் வழக்குகளை முடித்து விடுவித்து விடுங்கள் அடுத்து எந்த ஆனந்த் வெங்கடேஷ் கிளம்புவாரோ ?


sundarsvpr
நவ 14, 2024 17:15

செந்தில் பாலாஜி ஊழல் வழக்கு போல் எல்லா வழக்குகளும் அப்படியே நிலுவையில் இருக்கும்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை