கைதி ஞானசேகரனுக்கு வலிப்பு மருத்துவமனையில் சேர்ப்பு
சென்னை:மாணவி பாலியல் வன்முறை வழக்கில் கைதாகி, சிறப்பு புலனாய்வு குழுவினரின் விசாரணையில் உள்ள, ஞானசேகரனுக்கு வலிப்பு ஏற்பட்டதால், சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.சென்னை அண்ணா பல்கலை மாணவி பாலியல் வன்முறை வழக்கில் கைதான, கோட்டூர்புரத்தைச் சேர்ந்த, தி.மு.க., அனுதாபி ஞானசேகரனை, ஏழு நாள் காவலில் எடுத்து, சிறப்பு புலனாய்வு குழுவினர் விசாரித்து வருகின்றனர்.இரு தினங்களுக்கு முன், ஞானசேகரனை எழும்பூர் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விடிய விடிய விசாரித்தனர். விசாரணைக்கு ஒத்துழைக்க மறுத்ததால், அண்ணா நகர் துணை கமிஷனர் அலுவலகத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டு விசாரிக்கப்பட்டார். அப்போது, தன்னுடன் நெருங்கிய நட்புடன் இருந்த, அபிராமபுரம் மற்றும் கோட்டூர்புரம் காவல் நிலைய போலீசார் பற்றி வாக்குமூலம் அளித்துள்ளார். இந்நிலையில் அவருக்கு நேற்று அதிகாலை 3:00 மணியளவில், திடீரென வலிப்பு ஏற்பட்டது. ஸ்டான்லி அரசு மருத்துவ மனையில் சேர்க்கப்பட்டு, சிகிச்சை அளிக்கப்படுகிறது.