உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / பேராசிரியை நிகிதா கல்லுாரியில் ‛ஆப்சென்ட்

பேராசிரியை நிகிதா கல்லுாரியில் ‛ஆப்சென்ட்

பேராசிரியை நிகிதா கல்லுாரியில் 'ஆப்சென்ட்'மடப்புரம் பத்ரகாளியம்மன் கோவில் காவலாளி அஜித்குமார் மீது, நகை மாயம் தொடர்பாக புகார் கொடுத்த பேராசிரியை நிகிதா, கல்லுாரிக்கு வரவில்லை என்று, சக பேராசிரியர்கள் தெரிவிக்கின்றனர்.மதுரை மாவட்டம் திருமங்கலத்தை அடுத்த ஆலம்பட்டி பகுதியை சேர்ந்த இவர், திண்டுக்கல் தாடிக்கொம்பு சாலையில் உள்ள எம்.வி.எம்., அரசு பெண்கள் கலை அறிவியல் கல்லுாரியில், தாவரவியல் துறை தலைவராக பணிபுரிந்து வருகிறார். அஜித்குமாரின் மரணத்துக்கு பின், பேராசிரியை நிகிதா கல்லுாரிக்கு வரவில்லை என்று, அங்கு பணியாற்றும் பேராசிரியர்கள் தெரிவிக்கின்றனர். அவர், பணியில் சேர்ந்ததில் இருந்தே மாணவியர், பேராசிரியர்கள், உதவி பேராசிரியர்கள் மீது உயர் அதிகாரிகளிடம் புகார் அளித்ததாகவும் கூறுகின்றனர்.முன்னாள் மாணவியர் சிலர், 'அவர் தாவரவியல் துறை துணைத்தலைவராக இருந்த போது, எங்களை மனரீதியாக துன்புறுத்துவார்; வார்த்தைகளால் கஷ்டப்படுத்துவார். பேராசிரியை நிகிதாவை இடமாற்றம் செய்ய வேண்டும் என, 2024ல் திண்டுக்கல் கலெக்டரிடம் புகார் அளித்திருந்தோம்' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

srinivasan varadharajan
ஜூலை 05, 2025 11:01

கலெக்டர் நடவடிக்கை இல்லை. கல்லூரி கல்வி இயக்குனர் தூங்கி விட்டார். 2011ல் இருந்து மோசடி கேஸ் விஷயத்தில் கோர்ட் ம், போலீஸ் ம் கோமா வில் இருந்து வெளி வரவில்லை. தற்சமயம் இந்த கொடூர சித்ரவதை மரணத்திலும் இந்த பிராடு அவலட்சணத்தை விசாரிப்பதை பற்றி யாரும் கவலைப்படவில்லை. அம்மையார் செல்வாக்கு அப்படி.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை