உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / வழக்கு நிலுவையில் இருந்தாலும் சொத்துக்களை பதிவு செய்யலாம்! பதிவுத்துறை உத்தரவால் சர்ச்சை

வழக்கு நிலுவையில் இருந்தாலும் சொத்துக்களை பதிவு செய்யலாம்! பதிவுத்துறை உத்தரவால் சர்ச்சை

சென்னை : நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருப்பதை சுட்டிக்காட்டி, சொத்து விற்பனையை பதிவு செய்ய மறுக்கக்கூடாது என, பதிவுத்துறை உத்தரவிட்டுள்ளது.சொத்து தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருந்தால், அதை விற்பது தொடர்பான பத்திரங்களை, சார் - பதிவாளர்கள் திருப்பி அனுப்புவது வழக்கம். இதில், நீதிமன்றம் எவ்வித உத்தரவும் பிறப்பிக்காத நிலையில், சொத்து விற்பனையை நிறுத்தக்கூடாது என, சில வழக்குகளில் தீர்ப்பு வந்து உள்ளது. எனவே, தடை ஆணை இல்லாத நிலையில், வழக்கு நிலுவையில் இருந்தாலும், சொத்து விற்பனையை பதிவு செய்யலாம் என, பதிவுத்துறை உத்தரவிட்டுள்ளது. பத்திரங்களை திருப்பி அனுப்புவதால் ஏற்படும் வருவாய் இழப்பை தடுக்கும் வகையில், இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. இருப்பினும், பதிவுத்துறையின் இந்த உத்தரவு, சொத்து வாங்குவோர், அதற்கு கடன் கொடுக்கும் வங்கிகளுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.இதுகுறித்து, ரியல் எஸ்டேட் சொத்து மதிப்பீட்டாளர் பி.பாலமுருகன் கூறியதாவது: சொத்து வாங்கும் மக்கள் பாதிக்கப்படக்கூடாது என்ற நோக்கத்தில், இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது. ஆனால், உண்மையில் பாதிப்பு ஏற்படும். அதாவது, உரிமையாளருக்கு தெரியாமல் போலி ஆவணங்கள் வாயிலாக அபகரித்த சொத்தை, ஒருவர் வேறு நபருக்கு விற்கும் நிலையில், உரிமையாளர் வழக்கு தொடர்கிறார் எனில், அந்த வழக்கில் உத்தரவு பிறப்பிக்கப்படாத நிலையில், மோசடி செய்தவர் சொத்தை எளிதில் விற்று விட முடியும்.இது போன்ற வழக்கில், அசல் உரிமையாளருக்கு சாதகமாக கோர்ட் தீர்ப்பு வரும் நிலையில், மோசடி நபரை நம்பி சொத்து வாங்கியவர், அதற்கு வீட்டுக்கடன் கொடுத்த வங்கிகளுக்கு இழப்பு ஏற்படும். எனவே, இந்த விஷயத்தை மேலோட்டமாக பார்த்து, பதிவுத்துறை ஒரு முடிவுக்கு வருவது நல்லதல்ல. சட்ட வல்லுனர்களை ஆலோசித்து, இதில் உரிய தெளிவுரைகளை பதிவுத்துறை வழங்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 16 )

Vijay
மார் 18, 2025 18:31

கஷ்ட பட்டு உழைச் சி ஒரு 5 சென்ட் இடத்தை வாங்குனா அதை பயபுள்ளகை ஆட்டைய போட வழி பாக்குதுக. முதல இந்த பதிவு துறையை காலி பண்ணனும். பினாமிகளோட கைக்கூலியா மாறிடுச்சி கருப்பு பணம் எல்லாம் வைத்து இடங்களில் முதலீடு செய்து அதையும் வியாபாரமாக்கி இன்றைக்கு சாமானியன் 50 சதுர அடி கூட வாங்க வழியில்லை. ஆனால் இவர்கள் வாங்கும் முதலீடு இடங்கள் 1 கோடி வாங்கி னால் அடுத்த பத்து ஆண்டு களில் எந்த வித திறனையும் வெளிபடுத்தாமல் 10 கோடி ஆகிறது. அதையும் இவர்கள் போன்ற கயவர்களே வாங்குகிறார்கள். அதுவும் இது போன்ற மக்களிடம் ஆட்டையை போட்ட பணமாகவே இருக்கும். சாமானியன் சிறு இடம் கூட வாங்க முடிவதில்லை. அது போக இது போன்று கணக்கில் வராத பணங்களை இடங்களில் முதலீடு செய்வது அதிகரிக்க அதிகரிக்க இந்திய பொருளாதாரம் மொத்தமாக ஒரு நாள் வீழும் ஏனேன்றால் ஒரு நாட்டின் பொருளாதாரம் என்பது அந்த நாட்டின் உற்பத்தி திறன் மற்றும் சேவைத்துறை அடிப்படையில் மட்டுமே மிகவும் திறனாக அமையும் ஒரு நிலத்தில் இருந்து விவசாயம் செய்வது உற்பத்தி திறனை அதிகரிக்கும் ஆனால் விவசாயம் என்பது அழிந்து பினாமி பணங்களின் உண்டியலாக மாறி வருகிறது. அடுத்து ஒரு இடத்தில் சேவை நிறுவனமோ அரசு சார்ந்த நிறுவனமோ இயங்கினால் அது மக்களுக்கு உபயோகம் . ஆனால் இங்கு கருப்பு பணம் முதலீடு மீண்டும் பல மடங்கு உயர்ந்து அதையும் ஒரு பண முதலை வாங்க இங்கு எந்த ஒரு உற்பத்தி திறனும் சேவையும் இல்லாமல் பல கோடி பல கோடி என இந்திய பணம் வீணாக ஒதுங்கி கொண்டே போகிறது. ஏழை மீண்டும் மிக ஏழையாவான் பண முதலை பண திமிங்கலமாக மாறுவான் இது முடிவே இல்லாமல் போனால் சம நிலை என்பது மாறி ஒரு நாள் நாடு சோமாலியாவாக மாறலாம். இது முடிவு கட்ட பட்ட வேண்டும் என்றால் நிலங்களை விற்பது வாங்குவது எல்லாம் அரசின் மூலமாக ஆன்லைனில் வெளிப்படைத் தன்மையாக நடைபெறுவதை முன் எடுக்க வேண்டும். அது மட்டுமே இதை களை எடுக்க உதவும் அதையும் அந்த அந்த நிலங்களின் அரசு மதிப்பீட்டின் படியே நடை பெற வேண்டும். மற்றபடி அவரவர் உரிமை அப்படி அப்படியே பாதுகாக்க பட வேண்டும். இதற்கு அரசு சேவை வரி விதித்து அரசுக்கும் வருவாய் ஈட்டலாம் இதை குழு அமைத்து ஆராய்ந்து செயல்படுத்தினால் இன்று உள்ள 2000 கோடி சொத்து நாளை அரசின் மதிப்பிற்கு தானாகவே மதிப்பிழப்பு செய்யப்படும் பினாமி பணங்கள் அழிக்கப்படும். தேவை என்றால் மட்டுமே வாங்குவார்கள் பணம் எல்லோர் கைகளுக்கும் போகும் .மத்திய அரசு பரிசிலனை செய்து வரைமுறை படுத்த வேண்டும்


K Lakshmanan
செப் 11, 2024 07:55

வழக்கு நிலுவையில் இருக்கும் சொத்துக்களை விற்கிரையம் செய்தால் அந்தக் கிரையத்தை வழக்கின் தீர்ப்பு கட்டுப்படுத்தும். ஆனால் சொத்தை வாங்கினவர் தன் பண செல்வாக்கு அல்லது அரசியல் செல்வாக்கால் தீர்ப்பை தனக்கு சாதகமாக்கிக் கொள்ளலாம். இதனால் உண்மை யான சொத்தின் உரிமையாளர் மேலும் வழக்கை மேல்முறையீடு செய்து கடுமையாக போாராட வேண்டும். அதனால் பதிவு அலுவலகம் நீதிமன்றத்திற்கு இணையான அதிகாரத்தை கையில் எடுத்து மக்களை துன்புறுத்துவது ஏற்புடையதல்ல.


SENTHILKUMAR N
செப் 10, 2024 19:16

அரசுக்கு வருவாய் என்றால், தீர்ப்புக்கு பிறகு ஏமாற்றபட்டவர்க்கு சொத்தும் இல்லை, சொத்து மதிப்புக்கு கட்டி ய பணமும் ஏமாற்றம்தான், மக்களில் ஏமாற்றுபவர் இருக்கலாம் ஆனால் அரசு ஏமாற்றலாமா?


Lion Drsekar
செப் 09, 2024 15:04

பொதுவாகவேவழக்கு என்றால் பல தலைமுறைகளுக்கு நடக்கும் இதில் வழக்கு நிலுவையில் இருந்தாலும் பதிவு என்பது ஒரு அதிகாரி வெளியிட்டுள்ள ஆணை, அமைச்சர் பெருமானார் அல்ல, ஏதாவது நீதிமன்ற பிரச்னை வந்தால் அரசு விளக்கிக்கொள்ளுமோ . எப்படியோ தவறானவர்கள் காட்டில் மழை, புதிதாக சொத்து வாங்கியவருக்கு லாட்டரி யோகம், வாழ்க வளமுடன், வந்தே மாதரம்


Sn RAAJA
செப் 09, 2024 11:42

ஏற்கனவே உள்ள விஷயம் தான். இது சரியான முடிவு தான். கோர்ட் எந்த உத்தரவும் பிரப்பிக்காத போது எப்படி பதிவு செய்ய மறுக்க முடியும்.


Anantharaman Srinivasan
செப் 09, 2024 10:50

இந்த நடைமுறையால் சொத்துக்கு உண்மையானவர்கள் பாதிக்கப்படுவார்கள். திருடி விற்பவர் பாடு கொண்டாட்டம்.


Karthik
செப் 09, 2024 10:33

நான் அமெரிக்கா சென்றாலும், எனது முதலமைச்சர் கடமையைத் தடையின்றி செய்துகொண்டேயிருப்பேன் என்றாரே நம் முதல்வர், அது இதுதானா?


PADMA M
செப் 09, 2024 10:18

பதிவு துறைக்கு பவர் கிடையாது ,கோர்ட் மட்டும் பவர்


rasaa
செப் 09, 2024 10:02

சபாஷ் நல்ல செய்தி. அடுத்தவன் சொத்தை ஆட்டை போடுபவன் சந்தோஷதில் துள்ளி குதிப்பான். எவன் சொத்தை ஆட்டை போடுவதற்கு இந்த உத்தரவோ?


அருண் பிரகாஷ் மதுரை
செப் 09, 2024 09:25

வருமானம் ஒன்றை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டு பதிவுத்துறை செயல்படுவது அழிவின் உச்சகட்டம்..தவறான சொத்தை வாங்கிவிட்டு வாங்கியவர்களுக்கு எதிராக தீர்ப்பு வரும் பட்சத்தில் சொத்து பறிமுதல் ஆகிவிட்டால் பணம் கொடுத்து வாங்கியவரின் நிலைமை என்ன ???.சொத்தை விற்பனை செய்தவர் வெற்றி பெற்றால் மட்டுமே வாங்கியவர் தப்பிக்க முடியும்.என்ன மாதிரியான உத்தரவு இது..விடியலின் உச்ச கட்டம்...


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை