உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / கருப்பு பேட்ஜ் அணிந்து போராட்டம்: பதிவுத்துறை அலுவலர்கள் அறிவிப்பு

கருப்பு பேட்ஜ் அணிந்து போராட்டம்: பதிவுத்துறை அலுவலர்கள் அறிவிப்பு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: பணியிடத்தில் பாதுகாப்பை உறுதிப்படுத்த கோரி, போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக, பதிவுத்துறை அலுவலர்கள் சங்கம் அறிவித்துள்ளது. தமிழகத்தில், சொத்து விற்பனை உள்ளிட்ட பத்திரங்களை பதிவு செய்ய, பொதுமக்கள் சார் - பதிவாளர் அலுவலகம் செல்கின்றனர். அங்கு நேரடியாக வரும் மக்களை, சார் - பதிவாளர்கள் அலைக்கழிப்பதாக புகார் எழுந்துள்ளது. இதன் காரணமாக பல இடங்களில், பொது மக்களுக்கும், சார் - பதிவாளர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்படுகிறது.கடந்த வாரம் கன்னியாகுமரி மாவட்டம், கருங்கல் சார் - பதிவாளர் அலுவலகத்தில், குறிப்பிட்ட ஆவணத்தை சார் - பதிவாளர் நிராகரித்து உள்ளார். இதனால், ஆத்திரமடைந்த நபர் மண்ணெண்ணெயை தன் மீதும், சார் பதிவாளர் மீதும் ஊற்றி, கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளார். சார் - பதிவாளர் உள்ளிட்டோர் ஓட்டம் பிடித்ததால் தப்பினர். மதுரை மாவட்டம் பேரையூர் சார் - பதிவாளர் அலுவலகத்தில், பத்திரத்தை பதிய மறுத்த சார் - பதிவாளரை, ஒரு நபர் தாக்கியதில், அவரது மண்டை உடைந்தது. இந்த இரண்டு சம்பவங்கள் தொடர்பாக வழக்குப் பதிவு செய்யப்பட்டுஉள்ளது. இதுகுறித்து, தமிழக பதிவுத்துறை அலுவலர் சங்கம் வெளியிட்ட அறிவிப்பு: பதிவுத்துறையில், பதிவு அலுவலர்களுக்கு பாதுகாப்பு அரணாக இருந்த மேடைகள், தற்போதைய அரசால் அப்புறப்படுத்தப்பட்டு உள்ளன. இதன்பின், சட்ட நெறிமுறைகளுக்கு உட்பட்டு கடமையை ஆற்றும் போது, நியாயமற்ற தாக்குதலுக்கு ஆளாகும் நிலை ஏற்படுகிறது. இதனால், மகளிர் உள்ளிட்ட பதிவு அலுவலர்களுக்கு, பணி செய்யவே, பாதுகாப்பற்ற சூழல் ஏற்பட்டுள்ளது. இது, பதிவுத்துறை அலுவலர்களுக்கு கவலை அளிக்கிறது. எனவே, பாதுகாப்பை உறுதி செய்ய அரசை வலியுறுத்தி, இன்று அனைத்து சார் - பதிவாளர் அலுவலகத்திலும், அலுவலர்கள், பணியாளர்கள் கருப்பு பேட்ஜ் அணிந்து தங்கள் உணர்வை வெளிப்படுத்துவர். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 20 )

Srimathibuilders
டிச 09, 2024 13:02

ஒரிஜினல் பதிவு செய்தால் . பிரச்சனை வராது. தூத்துக்குடி மக்களும் நிம்மதி அடைவார்கள்.


chinnamanibalan
டிச 09, 2024 12:41

லஞ்சத்தை வாரிக் குவிப்பதில் எந்த ஒரு துறையும் சளைத்ததல்ல. இதில் பத்திர பதிவுத்துறை, வருவாய்த் துறை போன்றவை முதலிடத்தைப் பெறுகிறது.


Raj
டிச 09, 2024 12:25

ஐயய்யோ இதோட விட்டுட்டீங்களே. வேலை ஆகனும்னு எக்ஸ்ட்ரா அமௌண்ட் லஞ்சம் கறக்குறது கிட்டத்தட்ட அனைவரிடமும். இங்க மட்டுமில்ல. கார்ப்பரேசன் இ பி ஆபீஸ் ..... ஆனால் லஞ்சம் கேட்பவர்கள் அனைவரும் சொல்வது - எனக்கா வாங்குறேன் இதுல ஒரு பகுதி கப்பமா மூலவருக்கு படைக்கிறோங்கிறாங்க. ஆண்டவா இவங்க வாரிச நல்லபடியா ?????????


lana
டிச 09, 2024 11:38

இங்கு அனைவரும் அரசு ஊழியர்கள் ஐ மட்டுமே குறை செல்கின்றனர். ஏன் அனைவரும் சரியான விலையில் தான் பத்திரம் பதிகிறார் கள் எ‌ன்று சொல்லுங்க. பதிவில் செல்லுகின்ற தொகை க்கு‌ம் உண்மையான தொகை க்கு‌ம் பாதி கணக்கில் வருவது இல்லை .எவரும் 100 ரூபாய் லஞ்சம் கொடுத்தால் 1000 ஏமாற்றும் அளவுக்கு தான் பத்திரம் உள்ளது. நாம எப்படியோ அப்படி தான் நமக்கு வாய்க்கும் அரசியல் வியாதிகள் முதல் அரசு ஊழியர்கள் வரை அமையு‌ம். காசு வாங்கிட்டு ஓட்டு போட்டு விட்டு எனக்கு yokkiyan அதிகாரிகள் மற்றும் அரசாங்கம் வேண்டும் என்று கேட்பது தவறு. நாம திருந்தினால் எல்லாம் மாறும்


Ananth PG
டிச 09, 2024 10:32

கருப்பு பேட்கேக்கு பதிலில் நான் லஞ்சம் வாங்க மாட்டேன் என்று பேட்ஜ் போடவும்


Sridharan P
டிச 09, 2024 09:36

பெரும்பாலான பத்திரபதிவு அலுவலங்களில் நேரடியாக பதிவு பெற்ற பத்திர எழுத்தர், வழக்கறிஞர் நேரடியாக பதியும் பத்திரங்கள் தற்போது மிகக்குறைவு.ஓர் ஆண்டுகாலம் ஏதாவது ஒரு பதிவு பெற்ற பத்திர எழுத்தர் அலுவலகத்தில் அல்லது வழக்கறிஞரிடம் உதவியாளாராக பணிபுரிந்தால் அவர்கள் ஒரு பத்திர டைப் ஆபீஸ் வைத்துவிடுகிறார்கள், பெரும்பாலான வழக்கறிஞர்கள் வெற்றுதாளில் முத்திரை வைத்து கையெழுத்து செய்து கொடுத்து அதன் மூலம் ஆயிரக்கான பத்திர டைப் ஆபீஸ்களில் பதியும் பத்திரம் தான் அதிகம், இவர்கள் எந்த விதமான சட்டத்திற்கு புறம்பான வேலையையும் செய்ய அஞ்சுவதில்லை. எந்த பிரச்சனை வந்தாலும் இந்த டைப் ஆபீஸ் புரோக்காளுக்கு எந்த வித சம்மந்தமுமில்லை. அதற்காக இவர்கள் தரும் லஞ்சம் மிக அதிகம், மேலும் நானே பார்த்திருக்கிறேன், வெற்றுத்தாளில் போட்டா மற்றும் சீல் வைத்த தாளில் பத்திரபதிவு செய்து தர வரும் ஏதோ ஒரு நபர் வழக்கறிஞர் கையெழுத்து இடுகிறார். இந்த செயல்கள் பெரும்பாலும் MDOT என்று சொல்லப்படுகிற அடமான கடன் பத்திரங்களுக்கு நடக்கிறது. மேலும் பத்திரபதிவு அலுவலங்களில் ஒரு நாளைய லஞ்ச வருமானம் சுமாராக 2 முதல் 5 லட்சங்கள், மேலும் அரசு ஊழியர்களை தவிர தாங்களாக நியமித்த ஊழியர்களுக்கு சுமார் 2 முதல் 10 நபர்கள் ஒவ்வொரு SRயும் தனியாக லஞ்சபணத்தில் சம்பளம் வழங்குகிறார்கள். பத்திர எழுத்தளர்கள் அலுவலகத்திற்குள் செல்லக்கூடாது என்ற ஒரு அரசானை உள்ளது, அதனால் பத்திர டைப் ஆபீஸ் என்ற பெயரில் உள்ள இந்த புரோக்கர்களுக்கு மிகவும் வசதியாகிவிட்டது.


Barakat Ali
டிச 09, 2024 09:30

ஊழலில் திளைத்தவர்கள் ..... போராடினால் பணிநீக்கம் செய்து வேலையில்லா பட்டதாரிகளை நியமியுங்கள் .....


Karuthu kirukkan
டிச 09, 2024 09:21

பதிவு துறையில் பணம் வாங்காமல் பதிவு செய்தால் பத்திரமா இருக்கலாம் அந்த பத்திரமும், பதிவாளரரும், இருப்பவர் பணம் கொடுப்பர் இல்லாதவர்களை அலைக்கழிப்பர் , இந்த களவாணிகள் கருப்பு பேட்ச் அணிவது வெட்க கேடு ..உங்கள் பாவங்கள் கர்மாவின் காலடியில்


பாமரன்
டிச 09, 2024 08:59

எந்த மாற்றுக் கருத்தும் இன்றி எல்லாரும் இவர்களை திட்டி கருத்து எழுதுவதில் இருந்தே இவர்களின் லட்சணம் தெரிகிறது. மற்றொரு சிறப்பு நிறைய கருத்துக்கள் வந்தும் யாரும் டீம்காவை திட்டலை... இதிலிருந்தே தெரிகிறது இதுக எவ்ளோ மோசம்னு... கருப்பு பேட்ஜ் போட்டுட்டு வந்தா மூஞ்சிலயே குத்திட்டு வேலைக்கு வரவாணாம் ரிசைன் பண்ணிட்டு போன்னு சொல்லனும்... கிட்டத்தட்ட அனைத்துமே ஈனப்பிறவிகள்


GMM
டிச 09, 2024 08:22

எந்த பத்திர பதிவும், ரத்தும் முதலில் தாற்காலிக பதிவாக இருக்க வேண்டும். பதிவு விவரம், விற்பவர், வாங்குபவர், தாசில்தார், வருமான வரி துறை, நகராட்சி ஆணையருக்கு கடிதம், ஈமெயில் மூலம் தெரிவித்து 3 மாதங்கள் வரை எந்த மறுப்பும் வரவில்லை என்றால், நிரந்தரம் பதிவு எண் கொடுத்து பதிவை சட்டபூர்வம் ஆக்க வேண்டும். பதிவில் மோசடிகள் அதிகம். பதிவில் குறைபாடு இருந்தால், வாங்குபவர், பத்திர எழுத்தர் முதல் குற்றவாளியாக சேர்க்க வேண்டும். மூல பாத்திரம் இல்லாத / கைமாறாத பதிவு எப்போதும் தற்காலிக பதிவே.


முக்கிய வீடியோ