உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / 7வது நாளாக இன்றும் போராட்டம்; சென்னை சாலையில் மன்றாடிய இடைநிலை ஆசிரியர்கள்

7வது நாளாக இன்றும் போராட்டம்; சென்னை சாலையில் மன்றாடிய இடைநிலை ஆசிரியர்கள்

சென்னை: சம வேலைக்கு சம ஊதியம் கோரி, சென்னையில் மண்டியிட்டு, இடைநிலை ஆசிரியர்கள் போராட்டம் நடத்தினர்.அரசு தொடக்கப் பள்ளிகளில் பணியாற்றும் இடைநிலை ஆசிரியர்கள், 'சம வேலைக்கு சம ஊதியம்' என்ற ஒற்றை கோரிக்கையை வலியுறுத்தி, போராட்டம் நடத்தி வருகின்றனர். சென்னை நுங்கம்பாக்கம் டி.பி.ஐ., வளாகம், மாவட்ட முதன்மை கல்வி அலுவலகம், மாவட்ட கலெக்டர் அலுவலகம், எழிலகம், வட்டார கல்வி அலுவலகம் என, அரசு துறை அலுவலகங்களில் முற்றுகை போராட்டம் நடத்தி வருகின்றனர்.ஏழாவது நாளாக இன்று, புத்தாண்டு தினத்தன்றும் இடைநிலை ஆசிரியர்கள் சென்னையில் போராட்டம் நடத்தினர். சென்னை எழும்பூரில் உள்ள வட்டார கல்வி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். காந்தி இர்வின் சாலை மேம்பாலத்தில், குழந்தைகளுடன் போராட்டம் நடத்தினர்.சாலையில் மண்டியிட்டும், தோப்புக்கரணம் போட்டும், தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர். இதையடுத்து, போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்களை, போலீசார் குண்டுக்கட்டாக கைது செய்தனர். அதில், பலருக்கு காயம் ஏற்பட்டதாகவும், மயக்கம் ஏற்பட்டதாகவும் தெரிகிறது.இது குறித்து, அந்த சங்கத்தின் மாநில பொதுச் செயலர் ராபர்ட் கூறியதாவது:எங்களுக்கான ஊதிய முரண்பாடு எப்போது களையப்படுகிறதோ, அப்போதுதான், எங்க ளு க்கு புத்தாண்டு கொண்டாட்டம். எங்கள் புத்தாண்டு சிறையில் தான். கோரிக்கை நிறைவேறாமல், நாங்கள் திரும்ப செல்ல மாட்டோம்.அரசு ஆசிரியர்களுக்கான அடிப்படை ஊதியத்தை பறிப்பதால், இனி தகுதியான ஆசிரியர்கள் இந்த பணிக்கு வர தயங்குவர். இதனால், அரசு பள்ளி மாணவர்கள் மிகுந்த பாதிப்பை சந்திப்பர். இத்தனை நாட்கள் போராட்டம் நடத்தியும், எங்களை பேச்சுக்கு அழைக்காமல், அரசு மவுனம் காக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.பேச்சு நடத்தாமல் கைது செய்வதா? போராடும் ஆசிரியர்களை அழைத்து பேசாமல், கைது செய்வதும், வழக்குப் போடுவதும் சரியானதல்ல. புத்தாண்டு நாளில் கூட சொந்த ஊர் செல்லாமல், போராடுவதிலிருந்தே அவர்களது கோரிக்கைகளில் உள்ள நியாயத்தை, அரசு உணர வேண்டும். ஒரு வாரமாக சென்னையில் போராடி வரும் இடைநிலை ஆசிரியர்கள் விவகாரத்தில், முதல்வரும், பள்ளிக் கல்வித் துறை அமைச்சரும் தலையிட்டு, அவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும். - ராமதாஸ், பா.ம.க., நிறுவனர்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 10 )

Venkatesan S
ஜன 02, 2026 09:23

இவர்கள் ஒவ்வொரு வருடமும் அரையாண்டு விடுமுறையில் போராட்டம் நடத்துகின்றனர். அது மட்டுமில்லை இவர்களுக்கு இந்த அரசு தேர்தல் வாக்குறுதியில் இந்த பிரச்சினையை சரி செய்வதாக சொல்லியுள்ளது. வாக்குறுதி எண் 311


SIVA
ஜன 02, 2026 08:55

ஏழுபது வருடம் போராடினாலும் நீங்கள் கேட்பது தீயமூகவிடம் இருந்து உங்களுக்கு கிடைக்காது, இன்று கஜானா காலி, காரணம் திராவிட மாதிரி ஆட்சியின் லட்சணம், இவங்க வந்தா உங்களுக்கு மட்டும் நலலது நடக்கும் என்று பகல் கனவு கண்டால் தீயமூக என்ன செயும் ....


SIVA
ஜன 02, 2026 08:51

இந்த ஆட்சியில் எந்த நல்லதும் மக்களுக்கு நல்லது நடக்கவில்லை, நீட் தேர்வு ஒரு நல்ல விஷயம், அதை வைத்து பல பேரை கொன்று இந்த ஆட்சி உருவானது, அப்போது அந்த தீயைமூக செய்வது தவறு என்று தெரிந்தும் எவன் செத்த எனக்கென்ன இவன் வந்தா எனக்கு சம்பளம் அதிகம் கொடுப்பான் என்று அவனுக்கு வேலை செய்தீர்கள், மாதா பிதா குரு பின் தான் தெய்வம் என்று சொல்லப்பட்டது ஆனால் நீங்கள் கடவுள் இல்லை என்று சொல்பவன்க்கு ஜால்ரா போடீர்கள் அதற்கான பலன் தான் இது , இது தான் கர்மா ....


Ram
ஜன 02, 2026 08:08

முடியாது என்று தெரிந்தும், அந்த கட்சிக்கு ஓட்டுபோடுவது அப்புறம் கொடிபிடிப்பது . அரசும் தகுதியான ஆசிரியர்களை தேர்ந்தெடுக்காமல் கௌரவ விரிவுரையாளர்களை வைத்து பல்கலையை நடத்தி இன்னும் கல்வியை மோசமான நிலைக்கு கொண்டுசெல்வது


Rajarajan
ஜன 02, 2026 05:35

நாட்டை பிடித்த இரண்டு தரித்திரங்கள். ஒன்று, தேவையற்ற அரசு / பொதுத்துறை நிறுவனங்கள். இரண்டு, இதை சார்ந்த ஊழியர்கள் மற்றும் நிர்வாக செலவுகள். இவைகளால் தான் கஜானா காலி. இவற்றை சரி செய்தால் போதும். நாட்டின் அடுத்தகட்ட வளர்ச்சியை எளிதில் எட்டிவிடலாம். தமிழக அரசின் கல்வித்துறையை நிர்வகிக்க, ஒரு தரமான குழுவை நியமித்து, அவர்களிடம் நிர்வாகம் / பாடத்திட்டம் மற்றும் தகுதியை உயர்த்தும் முடிவை விட்டுவிடலாம். இது அரசின் பெரும்பாலான துறைகளுக்கும் பொருத்தவேண்டும். பின்னர் பாருங்கள். அரசு வேலை என்றாலே அலறியடித்து ஓடுவதை.


Kasimani Baskaran
ஜன 02, 2026 04:18

நாட்டின் வருங்காலத்துக்கு இவர்கள் சிறப்பாக பணி செய்வது அவசியமான ஒன்று. ஆனால் தமிழக அரசு அரசு பள்ளிகளை ஒழித்துக்கட்டுவதில் மும்மரமாக அரை நூற்றாண்டாக ஈடுபட்டு வருகிறது. சர்வதேச தரத்தில் பயிற்சிகளோ அல்லது அரசு பள்ளிகளுக்கான உள்க்கட்டமைப்புக்களோ கிடையாது.


தாமரை மலர்கிறது
ஜன 01, 2026 23:52

முதலில் சம உரிமை சம ஊதியம் என்பார்கள். பிறகு பழைய பென்ஷன் வேண்டும் என்பார்கள். இதையெல்லாம் கொடுத்தால் தமிழகம் திவாலாகிவிடும். இலவசத்தை எப்படி ஒழிக்க வேண்டுமோ, அதே மாதிரி அரசு ஊழியர்களின் கொட்டத்தை ஒடுக்க வேண்டும். இல்லையெனில் நாடு திவால் ஆகிவிடும். ஒரு பைசா கிடையாது. அரசு வேலை பிடிக்காவிடில், பிரைவேட்டில் வேலை செய்யுங்கள். நீங்கள் செய்யும் வேலைக்கு, பழைய பென்ஷன், சம ஊதியம் எல்லாம் கிடைக்கும். ஒரே நாளில் வேலையை விட்டு தூக்கியெறியப்படுவார்கள். ஒரு மண்ணாங்கட்டிக்கும் உதவாத வரிப்பணத்தை உறிஞ்சும் அட்டைப்பூச்சிகள்.


Saai Sundharamurthy AVK
ஜன 01, 2026 23:15

கஜானா காலி ! தமிழ்நாட்டை திமுக அரசு திவாலாக்கி விட்டது. போராடும் ஆசிரியர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.


Priyan Vadanad
ஜன 01, 2026 23:03

ஏன் இவர்கள் தேர்தல் வரும்போது மட்டும் போராட்டத்தில் இறங்கவேண்டும், அதுவரை என்ன செய்து கொண்டிருந்தார்கள் என்று பத்திரிகைகள் கேள்வி கேட்கக்கூடாது?


vivek
ஜன 02, 2026 08:10

ஒரு நாள் இருநூறு வரவில்லை என்றால் நீயும் கருத்து போடமாடாய்...அது போலத்தான்


சமீபத்திய செய்தி