உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / சிரவையாதீனம் மீதான வழக்கு வாபஸ் பெறக்கோரி ஆர்ப்பாட்டம்

சிரவையாதீனம் மீதான வழக்கு வாபஸ் பெறக்கோரி ஆர்ப்பாட்டம்

கோவை: சிரவையாதீனம் குமரகுருபர சுவாமிகள், மதுரை முருக பக்தர்கள் மாநாட்டில் சிறப்புரையாற்றியது குறித்து, போலீசார் வழக்கு பதிவு செய்ததை வாபஸ் பெற வலியுறுத்தி, ஹிந்து மக்கள் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.சமீபத்தில் ஹிந்து முன்னணி சார்பில், மதுரையில் முருக பக்தர்கள் மாநாடு நடந்தது. அதில் பங்கேற்ற குமரகுருபர சுவாமிகள், ஆன்மிக அருளுரை நிகழ்த்தினார். ஆனால், அவர் மீது ஐந்து பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. 'முருக பெருமானின் பெருமைகள் தொடர்பான ஆன்மிக செய்தி மட்டுமே அவரது பேச்சில் இடம் பெற்றது. ஆனால், அவர் மீது வழக்குப்பதிவு செய்தது, அரசியல் ரீதியில் பழிவாங்கும் முயற்சி. இது முருக பக்தர்களை மிரட்டும் செயல்' என, ஹிந்து மக்கள் கட்சி உள்ளிட்ட ஹிந்து அமைப்புகள் போலீஸ் நடவடிக்கைக்கு எதிராக கருத்து தெரிவித்தன. இந்நிலையில் பொய் வழக்கு பதிவு செய்ததை கண்டித்தும், வழக்கை வாபஸ் பெற வலியுறுத்தியும், ஹிந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் தலைமையில், நேற்று கோவையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில், மாநில முருக பக்தர் பேரவை பொதுச் செயலர் முருக ராமமூர்த்தி, சிவனடியார்கள் திருக்கூட தலைவர் மாணிக்கவாசகம், பிரபஞ்ச பீடம் தெய்வசிகாமணி சுவாமிகள் உள்ளிட்ட சிவனடியார்கள், முருக பக்தர்கள் பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ