உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ஸ்ரீரங்கம் கோவில் முன் உள்ள சிலையை அகற்றா விட்டால் போராட்டம்: அர்ஜுன் சம்பத்

ஸ்ரீரங்கம் கோவில் முன் உள்ள சிலையை அகற்றா விட்டால் போராட்டம்: அர்ஜுன் சம்பத்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

திருச்சி: திருச்சி தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் மன்றத்தில் நடைபெற்று வரும் வழக்கு விசாரணைக்காக நீதிபதி மீனா சந்திரா முன்னிலையில், ஹிந்து மக்கள் கட்சித் தலைவர் அர்ஜுன் சம்பத் நேற்று ஆஜரானார்.அதன்பின், அவர் அளித்த பேட்டி: பெரும்பான்மையான ஹிந்துக்கள் மனதை புண்படுத்தும் வகையில், ஸ்ரீரங்கம் கோவில் முன் ஈ.வெ.ரா., சிலை வைக்கப்பட்டிருக்கிறது. அச்சிலையை அகற்ற வேண்டும் என்பது தான் கடவுள் நம்பிக்கையுடையோரின் நீண்டகால கோரிக்கை. இந்த நியாயமான கோரிக்கை நிறைவேற்றப்படாததால், தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வருகிறது.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=zk2fmo4n&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இதற்கிடையில், 'பொது இடங்களில் வைக்கப்பட்ட சிலைகள் மற்றும் கொடிக் கம்பங்களை அகற்ற வேண்டும்' என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அந்த உத்தரவை பின்பற்றும் வகையிலாவது, தமிழகம் முழுதும் 'கடவுள் இல்லை' என்ற வாசகத்துடன் வைக்கப்பட்டுள்ள ஈ.வெ.ரா., சிலையையும், மற்ற சிலைகளையும் அகற்ற வேண்டும். இல்லையென்றால், ஹிந்து உணர்வாளர்களை திரட்டி மிகப்பெரிய போராட்டம் நடத்தப்படும்.திருச்சி மாவட்டம், செந்துறை கிராமத்தில், பழமைவாய்ந்த சிவன் கோவிலை கூட வக்பு வாரியத்துக்கு சொந்தமாக்கும் வகையில் முயற்சிகள் எடுக்கப்பட்டுள்ளன. இதனால், உடனடியாக வக்பு வாரிய திருத்தச் சட்டத்துக்கான மசோதாவை, நடப்பு பார்லிமென்ட் கூட்டத் தொடரிலேயே மத்திய அரசு கொண்டு வர வேண்டும்.சனாதன தர்மம் மற்றும் ஆன்மிகத்திற்கு ஆதரவாக செயல்படுவோர் மீது தமிழக அரசு நடவடிக்கை எடுக்கிறது. இதை தடுக்கும் விதமாக, ஸ்ரீரங்கத்தில், சனாதன ஆதரவு வக்கீல்கள் கூட்டம் நடைபெற உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 60 )

Matt P
டிச 07, 2024 12:42

சிலையின் கையை மட்டும் தான் எடுப்பேன் என்ற போது ஆறு மாதம் தண்டனை. முழுவதுமாக எடுக்க வேண்டும் என்று சொன்னால் அதற்க்கு அதிகமா தான் வேண்டுமே வேண்டுமே.


sankaranarayanan
டிச 04, 2024 17:16

பொது இடங்களில் வைக்கப்பட்ட சிலைகள் மற்றும் கொடிக் கம்பங்களை அகற்ற வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அப்படி இருந்தும் இன்னும் ஏனிந்த அரசு பொது இடமனா திருவரங்க கோயில் வாசலில் வைத்திருக்கும் எல்லா சிலைகளையும் அகற்றவே இல்லை இது நீதி மன்ற அவமதிப்பு ஆகாதா? உச்ச நீதி மன்றமே முன்வந்து இதற்கு உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்


DJ Serve Life
டிச 04, 2024 10:22

அது என்ன தள்ளு வண்டியா


ram prasath
டிச 01, 2024 00:47

சாமி ல்லன்னு அந்த சாமி சொன்னாரு சாமி எந்த சாமி ie வே ramasami


Santhosh Vaitheeswaran3720
நவ 30, 2024 12:23

Crores of devotees


Narayanan Ramaswamy
நவ 30, 2024 10:25

how many people?


Ravi Chandran
நவ 29, 2024 20:21

வடலூர், கடலூர் மாவட்டம், அருட்பெரும்ஜோதி வள்ளலார் சபை முகப்பு வாயில் எண்ட்ரன்ஸ் அர்ச் க்கு எதிரில்...திராவிட முன்னேற்ற கட்சி யின் கொடிகம்பம், கருணாநிதி கல்வெட்டு திடிரென்று வைத்துள்ளார்கள்.... வள்ளலார் அற்புத மகான் புனிதத்தை அழிக்க நினைத்து செயல்படுபவர்களுக்கு மரணம் என்ற மரண வலி...தினமும் தொடரும்.....


Barakat Ali
நவ 29, 2024 11:49

ஐயா ஹிந்துக்களா ..... உங்க எதிர்ப்பில்தான் திராவிட மாடல் வளருது ..... எதிர்க்க எதிர்க்கத்தான் அவனுங்க அதிகமா பண்றானுங்க ..... மொத்தம் பன்னிரண்டு ஆழ்வார்கள் இருந்தாங்க ன்னு படிச்சிருக்கேன் ..... பேசாம ச்சொறியானை பதிமூனாவது ஆழ்வாரா நினைச்சு கும்பிட்டுப் போங்கப்பு .... இப்படி அதிகம் பேரு செஞ்சா, தானாக அடங்கிருவானுங்க ..... ஐ மீன் அடுப்புலர்ந்து கொள்ளியை உருவினா கொதி தானாக அடங்கும் .....


ஆரூர் ரங்
நவ 29, 2024 11:40

அந்த சிலையை ஒட்டியே அவரது 21 ஆம் பக்கத்தை பொன்னெழுத்துக்களால் பொறித்து வைக்கலாம்.


Mohdgilani
நவ 29, 2024 11:28

சொரியான் சிலை பள்ளி வாசல் முன்பு வைத்தால் ....தி க காரன் உயிருக்கு உத்திரவாதம் இல்லை


சமீபத்திய செய்தி