உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ஹிந்து, பா.ஜ.,வினர் போராட்டம்; திருப்பரங்குன்றத்தில் போலீஸ் குவிப்பு

ஹிந்து, பா.ஜ.,வினர் போராட்டம்; திருப்பரங்குன்றத்தில் போலீஸ் குவிப்பு

மதுரை: மதுரை திருப்பரங்குன்றம் மலையை பாதுகாக்க கோரி, ஹிந்து முன்னணி மற்றும் பா.ஜ.,வினர் இன்று (பிப்-4) அறப்போராட்டம் நடத்தி வருகின்றனர். இதனால் பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஹிந்து முன்னணியினர் திருப்பரங்குன்றம் நோக்கி புறப்பட்ட ஹிந்து அமைப்பை சேர்ந்தவர்கள் கைது செய்யப்பட்டனர். திருப்பூரில் இருந்து புறப்பட்ட மாநில ஹிந்து முன்னணி தலைவர் காடேஸ்வர சுப்பிரமணியன் கைது செய்யப்பட்டார். திருப்பரங்குன்றம் கோயிலுக்கு போலீஸ் தடுப்பையும் மீறி பெண்கள் உள்பட பலர் கோஷங்கள் எழுப்பினர். திருப்பரங்குன்றம் மலையில் காசி விஸ்வநாதர் கோவில் மற்றும் முஸ்லிம்களின் தர்கா உள்ளது. தர்காவில் உயிர்பலி கொடுக்க போலீசார் தடை விதித்துள்ளனர்.இதனை கண்டித்து சில முஸ்லிம் அமைப்புகள் போராட்டத்தில் ஈடுபட்டன. இதனை தொடர்ந்து மலையின் புனிதத்தை காக்க கோரி ஹிந்து அமைப்புகளும் போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளன.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=itms3eoz&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0ஹிந்து முன்னணி அறப்போராட்டத்தில் தென் மாவட்ட ஹிந்து அமைப்புகளின் தலைவர்கள் பங்கேற்க முடியாத வகையில் அவர்கள் வீட்டு சிறையில் வைக்கப்பட்டு உள்ளனர். தடையை மீறி வாகனங்களில் வந்தால் அவற்றை பறிமுதல் செய்வதுடன், கைதும் செய்யப்படுவர் என போலீசார் எச்சரித்துள்ளனர். மலையைச் சுற்றி, 300க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.ஐந்து எஸ்.பி.,க்கள், மூன்று ஏ.டி.எஸ்.பி.,க்கள், 13 டி.எஸ்.பி.,க்கள் வெளிமாவட்டங்களில் இருந்து வரவழைக்கப்பட்டுள்ளனர்.இவர்கள் தலைமையில், 3,000 போலீசார் கமிஷனர் லோகநாதன் தலைமையில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர்.

சிக்கந்தர் மலையாக மாற்ற

உயர் நீதிமன்ற மதுரை கிளையில் நீதிபதி பி.தனபால் முன்னிலையில் வழக்கறிஞர் கார்த்திகேய வெங்கடாஜலபதி ஆஜராகி முறையிட்டதாவது: திருப்பரங்குன்றம் கந்தர் மலையை, சிக்கந்தர் மலையாக மாற்ற மற்றும் மலையில் ஆடு, கோழி பலியிட முயற்சிப்பதை கண்டித்து, ஹிந்து முன்னணி சார்பில் இன்று ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி கோரி போலீசாரிடம் அளிக்கப்பட்ட மனு நிராகரிக்கப்பட்டது. அனுமதி அளிக்க உத்தரவிடக்கோரும் மனுவை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என அவர் கோரினார். இந்நிலையில் இன்று இது தொடர்பான வழக்கில் மதுரை பழங்கா நத்தத்தில் ஆர்பாட்டம் நடத்த கோர்ட் அனுமதி அளித்தது.

கடும் சோதனை

144 தடை உத்தரவு மதுரை நகர் முழுவதும் பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக திருப்பரங்குன்றத்தை சுற்றிலும் உள்ள புறநகர் பகுதிகளான தோப்பூர், தனக்கன்குளம், வேடர் புளியங்குளம் விலக்கு,நாகமலை புதுக்கோட்டை மேலக்கால் விலக்கு,மதுரை -அருப்புக்கோட்டை சாலை, ராமநாதபுரம் சாலை உள்ளிட்ட பகுதிகளில் வரக்கூடிய வாகனங்கள் பலத்த சோதனைக்கு பின்னரே மதுரைக்குள் செல்ல அனுமதிக்கப்பட்டு வருகின்றன.போராட்டத்தில் ஈடுபடக் கூடியவர்கள் ரயில் மூலமாக வந்து இறங்கி விடக்கூடாது என்பதற்காக காவல் துறை தரப்பில் நூற்றுக்கும் மேற்பட்ட காவலர்கள் திருப்பரங்குன்றம் ரயில் நிலையத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.

வெறிச்சோடிய கோயில் சன்னதி

திருப்பரங்குன்றம் கோயிலுக்கு வரும் அனைத்து பாதைகளிலும் பாலங்களிலும் கூடுதல் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். பலத்த சோதனைக்கு பின்னரே அனுமதிக்கப்பட்டனர். போலீசார் கெடுபிடி காரணமாக வழக்கம் போல் முருகனை தரிசிக்க வரும் பக்தர்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகினர். பக்தர்கள் கூட்டம், கூட்டமாக வந்தால் அனுமதி அளிக்கப்படுவதில்லை. மேலும் கோயிலை சுற்றி உள்ள வணிக நிறுவனங்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. செவ்வாய்க்கிழமை பக்தர்கள் வருகை அதிகம் இருக்கும் ஆனால் இன்று கோயில் சன்னதியில் பக்தர்கள் யாரும் இல்லாமல் வெறிச்சோடி காணப்பட்டன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 121 )

baala
பிப் 24, 2025 11:14

உண்மையான பெயரில் கருத்து எழுத நிறைய பேருக்கு தைரியம் இல்லையே. ஏன்


Kathiravan
பிப் 09, 2025 10:00

கோவில்la வந்து பிரியாணி தின்னவன விட்டு விட்டு அமைதியா தன்னோடைய கோவிலை காக்க வந்த ஹிந்து மற்றும் பிஜேபி மக்களை மிரட்டுவது இந்த வீனா போன விடியாத ஆட்சி.


madhes
பிப் 07, 2025 15:02

பல நூறு ஆண்டாக ஒன்றாக இருந்த மக்களின் ஒற்றுமையை, இந்த பிஜேபி பயலுங்க இன்னைக்கு கேள்விக்குறியக்கிறுக்கனுங்க


நிக்கோல்தாம்சன்
பிப் 25, 2025 05:53

கோவிலில் வந்து வம்பு காட்டியவனை கேள்வி கேட்க துப்பில்லை ,பிரச்சனையை ஆரம்பித்து வைத்தவனை பதிவி விலக சொல்லும் கேள்வி வந்திருக்க வேண்டும் , சரிதானே பாய்


Sampath Kumar
பிப் 07, 2025 11:59

மத கலவரத்தை மட்டுமே நடத்த தெரிந்த இந்த போலி ஹிந்து கும்பல் மக்களின் ஒற்றுமையை குலைத்து அதில் குளிர் கயலாம் என்று இணைகிறார்கள் போல அது நடக்காது இந்த மத வெறியர்கள் நடத்தும் இந்த வெறி ஆட்டத்தில் பொதுமக்கள் புறக்கணிக்க வேண்டும் இம்புட்டு ஆர்ப்பாட்டம் சேயும் இவர்கள் ஒரு கேள்விக்கு இல் சொல்லட்டும் அந்த மலை மீது தர்க்க கட்ட அனுமதி கொடுத்தது யாரு ?? அதை கண்டுபிடி பார்க்கலாம் தும்பை விட்டு வாலை பிடித்தல் வேலைக்கு ஆகுது போவியா


V RAMASWAMY
பிப் 06, 2025 14:57

அடாவடித்தனத்தை அடக்க தைரியமில்லாமல், அமைதி போராட்டத்தை கலவரமாக்குகின்றனர், விஷமத்தனமான ஹிந்து விரோத அரசியல்.


என்றும் இந்தியன்
பிப் 04, 2025 17:07

ஷாஹி ரஹ்மான் என்றால் இப்படித்தான் சொல்லவேண்டும் அது குரானில் சொல்லியிருக்கும் கட்டளை


அப்பாவி
பிப் 04, 2025 17:06

ஓவியா விஜய் ஏன் முகமதியர் செல்லும்போது அரசு தடுக்கவில்லை என்று கூற முடியுமா இந்துக்கள் என்றால் சங்கீ என்று அர்த்தம் அல்ல இதை புரிந்து கொள்


Muthu Kumaran
பிப் 04, 2025 16:59

இந்த பயம் போதும் , ஹிந்துக்கள் எழுச்சி பெற்று விட்டதற்கு சாட்சி , ஓட்டுகளாக மாறவேண்டும்


Oviya Vijay
பிப் 04, 2025 16:58

என் பெயரை வைத்து நான் கிறிஸ்தவ மதத்தை சார்ந்தவன் என நினைத்து சிலபேர் இங்கே கமெண்ட் செய்வதை பார்க்கும் போது அவர்களுடைய சிறுபுத்தியை நினைத்து தலையில அடித்துக் கொள்கிறேன்... நான் எழுதும் கருத்துகளுக்கு தகுந்த பதில் தர முடியாமல் எதற்கெடுத்தாலும் மதம்... மதம்... மதம்... என்று அடுத்தவர் மதத்தை சீண்டிக்கொண்டே இருக்கின்றனர். அதற்காகத் தான் சொல்கிறோம்... சங்கிகள் மத வெறி தூண்டுபவர்கள் என்று. இவர்களை தமிழகத்தில் ஆட்சிக் கட்டிலில் அமர்த்தி விடக்கூடாது என்று நினைப்பவர்களே இங்கு அதிகம்... இல்லையெனில் தமிழகம் பாலைவனம் ஆகிவிடும்... உங்களுக்கு ஒரு தகவல்... நான் ஹிந்து குடும்பத்தில் பிறந்த அனைத்து மத நண்பர்களையும் கொண்ட மத வெறி துளியும் இல்லாத எம்மதமும் சம்மதமே என்று உதட்டளவில் அல்லாமல் மனதளவில் நினைக்கும் ஒரு இந்தியன். நான் ஒன்றும் சங்கி அல்ல. உங்களைப் போன்று சிறுபுத்தியுடன் செயல்படுவதற்கு... என் பெயரை வைத்து எனக்கு சம்பந்தம் இல்லாத வேறொரு மதத்தை நீங்கள் இனிமேலும் சீண்டுவதை தடுக்கவே இந்த தன்னிலை விளக்கம்... பலமுறை சொல்லியும் திருந்தியபாடில்லை... கேவலமான பிறவிகள்...


guna
பிப் 04, 2025 17:13

இப்போது மதத்தின் பின்னால் போய் ஒளிந்து கொண்டான் இந்த ஈன பிறவி


Madras Madra
பிப் 04, 2025 17:38

அய்யா ஓவியா உலகம் முழுவதும் மத பிரச்சினை செய்வது குண்டு வைப்பது யார் என்பது ஊரறிந்த உண்மை அதனால் நீங்கள் மதம் மதம் மதம் என்று கையில் ஹவாலா பணம் வைத்து கொண்டு விற்பனைக்கு அலைபவன் யார் என்று தெரிந்து கொண்டு கொந்தளியுங்கள் அடுத்தவர் மதத்தை சீண்டுவது மட்டும் அல்ல அழித்து விட்டு தன மதத்தை கூவி கூவி விற்பவன் யார் என்றும் புரிந்து கொள்ளுங்கள் நீங்கள் கூறுவது போல் இங்கே அனைவருக்கும் மாற்று மத நண்பர்கள் உண்டு அதையும் தாண்டி நமது உரிமை அடையாளம் என்ற ஒன்றும் உண்டு என்பதை புரிந்து கொண்டு பதிவிடுங்கள்


paman.krr
பிப் 04, 2025 19:13

உம்மை போல ஒரு கேடுகெட்ட இழிபிறவி எங்கள் இந்து மதத்துக்கு தேவையே இல்லை நீ தயவு செய்து வேறு மதம் என்றே கூறிகொள். இந்து மதம் என்று கூறி எங்கள் மதத்தை கேவல படுத்தாதே...


வாசகர்
பிப் 04, 2025 19:34

அணைத்து மதங்களையும் அரவணைக்கும் கட்சி பிஜேபி ஒன்று தான். ஆனால் மாநில கட்சிகள் சிறுபான்மை வாக்கு வங்கி அரசியலுக்காக இந்துக்களை அவமதிக்கிறது. அதனை எதிர்த்து குரல் கொடுக்கும் ஒரே கட்சி பிஜேபி தான். இந்துக்களுக்கு ஆதரவாக பேசும் கட்சி மதவாத கட்சி என்றால், பிற மதங்களுக்கு ஆதரவாக செயல்படும் கட்சி எப்படி மதசார்பற்ற கட்சி ஆகும்?. இந்துகளை ஏய்த்து பிழைக்கும் அரசியல் இனி நீடிக்காது.


சந்திரசேகரன்,துறையூர்
பிப் 04, 2025 20:07

நீ என்னதான் இந்து என்று சொல்லிக் கொண்டாலும் நீ போடும் பதிவுகள் உன்னை அங்கி என்று காண்பித்து கொடுத்து விடுகிறது இனியும் நீ இந்து என்று புருடா விடாதே


என்றும் இந்தியன்
பிப் 04, 2025 16:50

அப்படின்னா நடப்பது முஸ்லீம் மூர்க்கன் அவருங்கஸீப் ஆட்சியா ஆனால் பிறப்பில் இந்துக்கள் ரொம்ப அதி அற்புதம் திருட்டு திராவிட அறிவிலி மடியல் அரசே


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை