உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / போராட்டம் நடத்தி வரும் தூய்மை பணியாளர்கள் நள்ளிரவில் கைது

போராட்டம் நடத்தி வரும் தூய்மை பணியாளர்கள் நள்ளிரவில் கைது

சென்னை: சென்னையில் போராட்டம் நடத்தி வரும் தூய்மை பணியாளர்களை நள்ளிரவில் போலீசார் குண்டு கட்டாக கைது செய்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. சென்னை மாநகராட்சி, ராயபுரம், திரு.வி.க., நகர் மண்டலங்களில், தனியார் நிறுவனத்தின் வாயிலாக, ஜூலை 16ம் தேதி முதல் திடக்கழிவு மேலாண்மை மேற்கொள்ளப்படுகிறது.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=gxfzl7sv&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், பணி நிரந்தரம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தியும், 1ம் தேதி முதல் வேலை நிறுத்த போராட்டத்தில், தற்காலிக துாய்மை பணியாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.இந்த போராட்டத்திற்கு, அ.தி.மு.க., காங்., நா.த.க., கம்யூ., உள்ளிட்ட அரசியல் கட்சிகள், சினிமா பிரபலங்கள் உள்ளிட்டோர் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.இதற்கிடையே, போராட்டத்தை கைவிட்டு துாய்மை பணியாளர்கள் பணிக்கு திரும்ப வேண்டும்.தனியார் நிறுவன பணியில் பணி பாதுகாப்பு மற்றும் பல்வேறு சலுகைகள் இருப்பதாக, மாநகராட்சி தெரிவித்துள்ளது. சென்னை ஐகோர்ட்டில் வழக்கும் நடைபற்று வருகிறது. இந்த வழக்கில் போராட்டக்கார்களை அப்புறப்படுத்த . உத்தரவிட்ட நீதிமன்றம் அனுமதிக்கப்பட்ட இடத்தில் போராட்ட்டம் நடத்த அறிவுறுத்தியது. இந்நிலையில்இன்று (ஆக. 14) நள்ளிரவு அதிரடியாக களம் இறங்கியபோலீசார் போராட்டம் நடத்தி வரும் தூய்மை பணியாளர்களை குண்டுகட்டாக கைது செய்து பேருந்தில் ஏற்றினர். இதனால் போராட்டக்கார்களுக்கும், போலீசாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. முன்னதாக இரவில் 30க்கும் மேற்பட்ட பேருந்துகளை நிறுத்தி வைத்திருந்த போலீசார் கலைந்து போகுமாறு எச்சரித்த நிலையில், அவர்களை குண்டு கட்டாக கைது செய்தனர்.இதில் பேராட்டக்காரர்களுக்கு ஆதரவாக இருந்தவர்களும் கைது செய்யப்பட்டனர்.தற்போது போராட்டக்காரர்கள் முழுதும் அங்கிருந்து அப்புறப்படுத்தப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. பதற்றத்தை தவிர்க்க சென்னை முழுதும் போலீசார் ரோந்து சுற்றிவருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 9 )

பேசும் தமிழன்
ஆக 14, 2025 09:02

நாட்டின் குப்பைகளை அகற்றிய அவர்களை ....குப்பைகளை போல் விடியாத அரசு நடத்துவது கண்டிக்கத்தக்கது .


Rajarajan
ஆக 14, 2025 05:57

ஒரு விஷயத்தை அனைவரும் புரிந்துகொள்ள வேண்டும். இனி வருவது தனியார்மயம் தான். ஏன், இந்திய குடிமக்கள் அல்லது தமிழக மக்கள் அனைவருமே அரசு பணியிலா உள்ளனர் ?? அனைவர்க்கும் அரசு பணி சாத்தியமில்லை. தனியாரில் பணியாற்றுவோர் குடும்பம் நடத்தவில்லையா ?? முன்னேறவில்லையா ?? எனவே, இவர்களுக்கு ஆதரவு தரும் கட்சிகள் மற்றும் பொதுமக்கள் தங்கள் எண்ணத்தை மாற்றிக்கொள்ளவேண்டும். தமிழக பா.ஜ.க. ஆதரவு கொடுப்பதும் முற்றிலும் கண்டிக்கத்தக்கது. மத்தியிலுள்ள நிறுவனங்களை தனியாருக்கு கொடுப்பதை செயல்படுத்தும் பா.ஜ.க., தமிழகத்தில் இரட்டை வேடம் போடுவதை கண்டிக்கவேண்டும்.


பேசும் தமிழன்
ஆக 14, 2025 12:52

நீங்கள் தஞ்சை ராஜராஜன் அல்ல.. பாலைவன மதம் மாறிய ஆள் என்பது தெளிவாகத் தெரிகிறது.


Gajageswari
ஆக 14, 2025 05:27

நியாமான கோரிக்கைக்கு இடையூறு இல்லாமல் போராடுபவர்கள் கைது. ஆனால் திருப்பூர் தெற்கு மாவட்டத்தில் அநியாயமான கோரிக்கைக்கு சாலை மறியல் செய்பவர்களை கைது செய்யவில்லை


Kasimani Baskaran
ஆக 14, 2025 03:56

அடக்குமுறை என்றால் அதற்க்கு இதுதான் உதாரணம்.


Sundaran
ஆக 14, 2025 03:46

திருட்டு தி மு க வுக்கு சாவு மணி அடிக்கப்பட்டு விட்டது . அணைத்து தரப்பினரின் வயிற்று எரிச்சலையும் சம்பாதித்து வருகிறது .


சகாயாம்
ஆக 14, 2025 11:51

வீரியமற்ற எதிர்கட்சிகள் . வலிமையற்ற ஏழைகள். அவர்களின் வயிற்றெரிச்சல் சும்மா விடாது.


Shiva
ஆக 14, 2025 00:59

incapable government who does not fulfill it's promise. Using police force against poor peoples is condemnable...


ManiMurugan Murugan
ஆக 14, 2025 00:35

நள்ளிரவில் கைது நடவடிக்கை நாகரொகமற்றச் செயல் அவர்கள் என்ன தவறு செய்தவர்களா கண்ட தக்க த் தக்கது


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை