உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / நிலம் அணுகு சாலை சான்றுக்கு ரூ.60,000 லஞ்சம் பெற்ற பி.டி.ஓ., பஞ்., செயலர் கைது

நிலம் அணுகு சாலை சான்றுக்கு ரூ.60,000 லஞ்சம் பெற்ற பி.டி.ஓ., பஞ்., செயலர் கைது

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சூளகிரி : சூளகிரி அருகே, அணுகு சாலைக்கு சான்று வழங்க, 60,000 ரூபாய் லஞ்சம் வாங்கிய, பி.டி.ஓ., மற்றும் பஞ்., செயலர் ஆகிய இருவரை, லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர்.கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் பழைய டெம்பிள் லேண்ட் ஹட்கோ பகுதியை சேர்ந்தவர் வெங்கடேசன், 56. இவர், தன் மனைவி லட்சுமி பெயரில், சூளகிரி அருகே மருதண்டப்பள்ளி பஞ்.,ல், 53 சென்ட் காலி இடம் வாங்கினார். அதற்கு செல்ல அணுகு சாலை சான்று கேட்டு, சூளகிரி பி.டி.ஓ., அலுவலகத்தில், கடந்த, 3 மாதங்களுக்கு முன் மனு அளித்தார்.அணுகுசாலை சான்று வழங்க, சூளகிரி பி.டி.ஓ., (கிராம வளர்ச்சி) கார்த்திக்குமார், 43, மருதண்டப்பள்ளி பஞ்., செயலர் ராஜேந்திரன், 37, ஆகியோர், 60,000 ரூபாய் லஞ்சமாக கேட்டுள்ளனர். லஞ்சம் கொடுக்க விரும்பாத வெங்கடேசன், கிருஷ்ணகிரி மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் செய்தார். அதன்படி போலீசார், ரசாயனம் தடவிய, 60,000 ரூபாயை வெங்கடேசனிடம் கொடுத்து அனுப்பினர். அதை மதியம், சூளகிரி பி.டி.ஓ., அலுவலகத்தில் இருந்த பி.டி.ஓ., கார்த்திக்குமார், பஞ்., செயலர் ராஜேந்திரன் ஆகியோரிடம், வெங்கடேசன் கொடுத்தார்.அதை பெற்று கொண்ட ராஜேந்திரன், தன் பாக்கெட்டில் வைத்தபோது, அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு டி.எஸ்.பி., நாகராஜன், இன்ஸ்பெக்டர் ரவி மற்றும் போலீசார், பஞ்., செயலர் ராஜேந்திரன் மற்றும் பி.டி.ஓ., கார்த்திக்குமார், ஆகிய இருவரையும் கைது செய்தனர். மேலும், அங்கிருந்த சில ஆவணங்களை கைப்பற்றி உள்ளதாக, லஞ்ச ஒழிப்பு போலீசார் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 6 )

Ravi om namasivaya
டிச 25, 2025 07:22

பாவம் பஞ்சம் போக்க லஞ்சம் வாங்கும் அதிகாரியை மாட்டி வீட்டீர் இனி அவர் தான் லஞ்ச ஒழிப்புத் துறைக்கே தலைமை தாங்குவார்.


Ravi om namasivaya
டிச 25, 2025 07:16

லஞ்சம் வாங்காத அதிகாரியையும் அரசியல்வாதியையும் கான இது ஒன்றும் காமராஜர் கால ஆட்சி அல்ல காகப் பணம் பார்க்கத் தான் ஆட்சிக்கும் அதிகாரத்திற்கும் இவர்களுக்கு சமீபத்தில் ஒரு சீன அதிகாரிக்கு கொடுத்த மரன தண்டனை கொடுத்தாலும் திருந்த மாட்டார்கள் அரசும் அப்படியொரு சட்டம் கொண்டுவராது. மக்கள் நாம் தான் சிக்கலோடு சின்னா பின்னமாக வேண்டும்


sasikumaren
டிச 25, 2025 04:33

பதினைந்து வருடங்களுக்கு முன்பு அரக்கோணம் பகுதியில் நிலம் போட்டு விற்பனை செய்வதற்கு ஒரு மனைக்கு பத்தாயிரம் லஞ்சம் கேட்கிறாரா ஒரு பெண் கவுன்சிலர் இதை எல்லாம் யார் தட்டி கேட்பது டீடிசிபி கூட வாங்கி விடலாம் உள்ளூர் அரசியல் எமன்களை யார் கட்டுப்படுத்துவது.


r.thiyagarajan
டிச 24, 2025 23:58

Well did should be punished severely


சிட்டுக்குருவி
டிச 24, 2025 23:33

லோக் ஆயுக்தா அமைப்பின் நோக்கம் நிறைவேற்றப்படவில்லை .லோக் ஆயுக்தாவும் லஞ்சஒழிப்புதுரையும் ஒன்றிணைந்து மிலிட்டரி வேகத்தில் வேலை செய்தால் லஞ்சம் ஊழல் முழுவதும் ஒழிக்கும் வாய்ப்புள்ளது .


சிட்டுக்குருவி
டிச 24, 2025 22:57

லஞ்ச ஒழுப்புத்துறை எவ்வளவோ முயற்சிகள் செய்து கைது செயகின்றார்கள் .ஆனால் லஞ்சம் ஒழிப்புத்துறையால் கைதுசெய்யப்பட்டவர்கள் சிறைக்கு சென்றதாக செய்திகளை காணோமே ?அவர்கள் பணிக்கு மதிப்பு அவ்வளவுதானா ?