உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ரங்கராஜன் நரசிம்மன் மீது அவதூறு வழக்கு: அனுமதி கேட்டு துஷ்யந்த் ஸ்ரீதர் மனு

ரங்கராஜன் நரசிம்மன் மீது அவதூறு வழக்கு: அனுமதி கேட்டு துஷ்யந்த் ஸ்ரீதர் மனு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: சமூக வலைதளத்தில் தன் மீது அவதூறான கருத்துக்களை தெரிவித்ததாக கோவில் ஆர்வலர் ரங்கராஜன் நரசிம்மன் மீது அவதூறு வழக்கு தொடர அனுமதி கேட்டு சென்னை ஐகோர்ட்டில் ஆன்மிக சொற்பொழிவாளர் துஷ்யந்த் ஸ்ரீதர் மனு தாக்கல் செய்து உள்ளார்.ஸ்ரீரங்கத்தைச் சேர்ந்தவர் ரங்கராஜன் நரசிம்மன். கோவில்கள் தொடர்பாக நீதிமன்றங்களில் பல்வேறு வழக்குகள் தொடர்ந்து நடத்தி வருகிறார். கோவில் சொத்துக்களை பாதுகாக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தொடர்ந்து போராடி வருகிறார். இந்நிலையில், பெங்களூருவைச் சேர்ந்த ஆன்மிக சொற்பொழிவாளர் துஷ்யந்த் ஸ்ரீதர், சென்னை ஐகோர்ட்டில் , ரங்கராஜன் நரசிம்மன் மீது அவதூறு வழக்கு தொடர அனுமதி கேட்டு மனுத்தாக்கல் செய்துள்ளார்.அவர் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் கூறியதாவது: துஷ்யந்த் ஸ்ரீதர் ரசாயன பாடத்தில் பொறியியல் பட்டம் பெற்றவர். ராஜஸ்தானில் உள்ள பிர்லா தொழில்நுட்ப மையத்தில் பட்டமேற்படிப்பு முடித்து உள்ளார். பிறகு ஆன்மிக பணியில் ஈடுபட்டு வருகிறார்.தனது மனுதாரர், புகழ்பெற்ற மற்றும் அனைவராலும் மதிக்கப்படும் வேத அறிஞர். சனாதன கொள்கைகள் குறித்து சொற்பொழிவாற்றி வருகிறார். ஹிந்தி, தமிழ் மொழிகளில் சரளமாக பேசும் திறன் கொண்ட அவர், ராமாயணம், மஹாபாரதம், பாகவத மகாபுராணம்,விஷ்ணுபுராணம், திவ்யபிரபந்தம் ஆகியவற்றை பற்றி சொற்பொழிவு ஆற்றி உள்ளார்.உலகம் முழுதும் 3,500 நிகழ்ச்சிகளை நடத்தி உள்ளார். ஆனால், சில காரணங்களுக்காக 2023 முதல், துஷ்யந்த் ஸ்ரீதர் மீது ரங்கராஜன் நரசிம்மன் தனிப்பட்ட முறையில் சமூக வலைதளம் மூலம் விமர்சனம் செய்து வருகிறார். அது, அனைத்தும் தவறானவை. அநாகரீகமானதுடன், நேர்மையான விமர்சனத்திற்கான எல்லையை தாண்டி விட்டது. அனைத்து கருத்துகளையும் நீக்குவதுடன், எதிர்காலத்தில் அவ்வாறு விமர்சனம் செய்யாமல் இருக்க வேண்டும். அவப்பெயர் ஏற்படுத்தியதற்காக ரூ.1 கோடி இழப்பீடு வழங்க உத்தரவிட வேண்டும்.மனுதாரர் உலகம் முழுவதும் பயணித்து சொற்பொழிவுகளை நடத்தினாலும் துஷ்யந்த் ஸ்ரீதர் சென்னையை மையப்படுத்தி பணியாற்றி வருகிறார். அங்கு அவரது சொற்பொழிவுகளை ஏராளமானோர் கேட்கின்றனர். அவர் ஆங்கிலத்தை தவிர, தாய்மொழியான தமிழிலும் சொற்பொழிவுகளை வழங்குகிறார்.எனது மனுதாரர், ரங்கராஜன் நரசிம்மனின், வரம்புகளை மீறிய விமர்சனத்தால் வேதனையடைந்துள்ளார். ரங்கராஜன் நரசிம்மன், அவதூறு ஏற்படுத்தும் செயல்களில் ஈடுபடுகிறார். இதனை தொடர்ந்து செய்வதாக தெரிகிறது எனவும் கூறினார்.ரங்கராஜன் நரசிம்மன் ஸ்ரீரங்கத்தில் வசிப்பதால், இந்த வழக்கை திருச்சியில் தாக்கல் செய்ய வேண்டும் என அவர் சார்பில் வாதாடப்பட்டது.இதற்கு துஷ்யந்த் ஸ்ரீதர் சார்பில், ' தான் பெங்களூருவில் நிரந்தரமாக வசித்து வருகிறேன். எனது சொற்பொழிவுகளை கேட்பவர்கள் பெரும்பாலானவர்கள் சென்னையைச் சேர்ந்தவர்கள். இதனால், வழக்கை சென்னை ஐகோர்ட்டில் தொடர விரும்புகிறேன்,' என விளக்கம் அளிக்கப்பட்டது.இதனைத் தொடர்ந்து நீதிபதி குமரேஷ் பாபு, இந்த மனு குறித்து ஏப்.,29ம் தேதிக்குள் பதிலளிக்கும்படி ரங்கராஜன் நரசிம்மனுக்கு உத்தரவிட்டு, விசாரணையை ஒத்திவைத்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 34 )

தர்மராஜ் தங்கரத்தினம்
ஏப் 05, 2025 10:20

சனாதனியின் விரலைப்பிடித்து அவர்கள் கண்ணைக்குத்தும் திராவிடம் .....


Sampath Kumar
ஏப் 05, 2025 08:20

சனாதனத்தில் சொல்லியதை அப்படியே நம்ப தேவை இல்லை நம்ம ஆரூர் சொல்லுது அடஎங்கப்பா அதை தாண்ட உன் பணியில் ஹிர்டு திராவிடம் கேக்குது பதில் சொல்லு பார்க்கலாம் ஆக உன்னக்கு ஆபத்து என்றால் உங்கள் கும்பல் எந்த எவெழிக்கும் போகும் என்பதை மீண்டும் ஒருமுறை நிரூபித்தமைக்கு நன்றி


Sampath Kumar
ஏப் 05, 2025 08:14

தன்மானம் சுயமரியாதை இது எல்லாம் உங்க கும்பலுக்கு ஏது ? இது எல்லாம் பெரியார் கோஷ்டிகள் சொல்லும் வார்த்தை உங்களுக்கு வந்த ரத்தம் மாதவனுக்கு தக்காளி இப்போ புரியுதா சுயமரியாதை என்றால் என்ன வென்று அது சரி சுதந்திர நாட்டில் ஒருவர் மீது வழக்கு தொடுக்க நீதி மன்றம் அனிமதி தேவையா ? சட்ட வல்லனுனர்கள் சொல்லுங்க அப்பா


Parthasarathy Badrinarayanan
ஏப் 05, 2025 05:06

துஷ்யந்த் தன் மானம், மரியாதையை ஒரு கோடிக்கு விற்கத் துணிந்துவிட்டது கேவலம். விமர்சனத்தைப் பொறுக்கமுடியாவிடில் பொது வெளிக்கு வரக்கூடாது.


Tetra
ஏப் 04, 2025 22:36

நரசிம்மன் துஷ்யந்தை ஒன்றும் அவமதிக்க வில்லை. இவர் தவறாக ராமாயணத்தையும் புராணங்களையும் சொல்கிறார். அதை ரங்கராஜன் ந்ருசிம்மன் வெளிச்சத்துக்கு கொண்டு வந்தாரா. இது ப்ளடி அவமதிப்பாகும். துஷ்யந்த்‌ த்ராவிடதாநதில் சேராந்து‌விட்டார்


ஆரூர் ரங்
ஏப் 04, 2025 22:35

நாட்டில் எல்லோருமே அயோக்கியர்கள்தான் என்பதுபோல் ஸ்ரீ ரங்கராஜன் நரசிம்மன் பேசுகிறார். இதனால் பாதிக்கப்பட்ட ஏராளமான வைணவ சனாதன நண்பர்கள் மனம் பாடுபடுவது அவருக்குப் புரியவில்லையா? உண்மையான எதிரி யாரெனில் வேடம் போடும் நாத்திகர்கள் .உங்கள் குறி திருட்டு திராவிஷ எதிர்ப்போடு நிற்கட்டும். ஆன்மீகத்தை சரித்திர மற்றும் அறிவியல்பூர்வமாக ஆராய்ந்து பேசுவதில் தவறில்லை. மற்ற மதங்கள் போல் யாரோ சொல்லியதாக சொல்வதை கேள்வியே கேட்காமல் அப்படியே நம்ப வேண்டும் என்ற கட்டாயம் சனாதனத்தில் இல்லை. அதுதான் சமாதானத்தின் சிறப்பு


கிஜன்
ஏப் 04, 2025 21:52

முக்கூர் ஸ்ரீ லக்ஷ்மிநரசிம்மச்சாரியார் கூறுவார் .... மனிதராக பிறந்த யாரும் .... ஆணவ ம..த்தை மிதித்து விடக்கூடாது என ... பகவான் நாமாவை பாடவேண்டிய இருவருமே மிதித்து விட்டார்கள் ... தவறை உணருவார்களா ?


கிஜன்
ஏப் 04, 2025 21:46

ஆங்கில அகர வரிசையில் U தான் முதலில் வரும் .... Y அப்புறம் தான் .... U க்கு தான் முதல் மரியாதை ...


vbs manian
ஏப் 04, 2025 21:20

நாத்திக வாதிகளுக்கு அல்வா. நிதானம் மன்னிப்பு பொறுமை என்றெல்லாம் பேசும் சொற்பொழிவாளர் நிஜத்தில் ஒரு சராசரி மனிதன் என்று காண்பித்து விட்டார்.


vbs manian
ஏப் 04, 2025 21:15

பிராமணனுக்கு பிராமணன்தான் முதல் எதிரி. சொற்பொழிவாளர் அவர்களே நீங்களுமா இப்படி. கருத்தை கருத்தால் எதிர் கொள்ளுங்கள்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை