உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / முறைகேடு புகார் மக்கள் நல பணியாளர்கள் விளக்கம்

முறைகேடு புகார் மக்கள் நல பணியாளர்கள் விளக்கம்

சென்னை: மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில் பணிபுரிந்தோருக்கு, 3,796 கோடி ரூபாயை, மத்திய அரசு விடுவிக்காமல் நிறுத்தி வைத்துள்ளது. இதற்கு, இத்திட்டத்தில் நடக்கும் முறைகேடே காரணம் என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதுகுறித்து, நம் நாளிதழில் நேற்று செய்தி வெளியானது. இதுகுறித்து, தமிழ்நாடு திட்ட ஒருங்கிணைப்பாளர்கள் கூட்டமைப்பு மாநில தலைவர் பரமசிவம் வெளியிட்ட அறிக்கை:மக்கள்நல பணியாளர்களாகிய நாங்கள், மூன்று முறை பணிநீக்கம் செய்யப்பட்டு, தற்போது திட்ட ஒருங்கிணைப்பாளர் என்ற பெயருடன் பணியில் சேர்ந்துள்ளோம். நுாறு நாள் வேலை திட்ட பணியாளர் பணி தொடர்பான பதிவேட்டில், கடந்த 10 ஆண்டுகளாக, பணித்தளப் பொறுப்பாளர் மற்றும் ஊராட்சி செயலர் மட்டுமே கையெழுத்திடும் அதிகாரம் உள்ளது. அதனால், அத்திட்டத்தில் ஊழல் நடப்பதற்கும், எங்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. இவ்வாறு, அதில் கூறப்பட்டு உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை