உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / எல்லாம் சரியாகி விட்டது! 3நாட்கள் கழித்து புதுச்சேரி-கடலூர் சாலையில் போக்குவரத்து தொடக்கம்

எல்லாம் சரியாகி விட்டது! 3நாட்கள் கழித்து புதுச்சேரி-கடலூர் சாலையில் போக்குவரத்து தொடக்கம்

புதுச்சேரி: 3 நாட்களுக்கு பின்னர், புதுச்சேரி - கடலூர் இடையே வாகன போக்குவரத்து தொடங்கி உள்ளது. பெஞ்சல் புயலால் தமிழகத்தின் கடலூர் மாவட்டமும், புதுச்சேரியும் கடுமையாக பாதிக்கப்பட்டன. சாலைகள், பாலங்கள், விளைநிலங்கள் சேதம் அடைந்து மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியது. மழையால் புதுச்சேரி - கடலூர் இடையேயான இடையார் பாலம் கடும் சேதம் அடைந்து போக்குவரத்து முடங்கியது. போக்குவரத்து நிறுத்தப்பட்டதால் இரண்டு பகுதிகளில் இருந்து செல்வோர் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.இந் நிலையில் சேதம் அடைந்த பாலத்தை சரி செய்யும் பணிகள் தொடங்கின. துரிதமாக பணிகள் முடிக்கப்பட்டு விட்ட நிலையில் இன்று மீண்டும் இடையார் பாலம் போக்குவரத்துக்காக திறக்கப்பட்டது. இதையடுத்து, இன்று முதல் அனைத்து வாகனங்களும் பாலத்தின் வழியாக இருபுறமும் செல்ல துவங்கி உள்ளன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி