உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ‛‛இளையராஜா வீட்டு மருமகள் ஆகி இருக்கணும்...: கண்ணீர் மல்க ‛புது குண்டு போட்ட வனிதா

‛‛இளையராஜா வீட்டு மருமகள் ஆகி இருக்கணும்...: கண்ணீர் மல்க ‛புது குண்டு போட்ட வனிதா

நடிகை வனிதா விஜயகுமார் இயக்கி, கதை நாயகியாக நடித்த ‛மிஸஸ் அண்ட் மிஸ்டர்' படம் நேற்று வெளியானது. சென்னை, கமலா தியேட்டரில் படம் பார்க்க வந்த வனிதாவிடம் ''உங்க படத்தில் இடம் பெற்ற சிவராத்திரி' பாடலை பயன்படுத்தக் கூடாது என்று இசையமைப்பாளர் இளையராஜா வழக்கு தொடர்ந்துள்ளது பற்றி நிருபர்கள் கேள்வி எழுப்பினர்.அதற்கு பதிலளித்த வனிதா, ‛‛தெய்வமே இப்படி செய்யலாமா? நாங்க அந்த பாடலுக்கு முறைப்படி சோனி மியூசிக் நிறுவனத்திடம் பணம் கொடுத்து அனுமதி வாங்கினோம். அவர்களுக்கும், இளையராஜா தரப்பும் இன்னும் பிரச்னை. இவர்களும் எங்களிடம் அனுமதி வாங்க வேண்டும் என்கிறார்கள். நான் ஒரு வீடு வாங்குகிறேன். https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=e8f1upgi&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0பில்டரிடம் பணம் கொடுக்கிறேன். அப்போது இன்னொருவர் இந்த மனை எங்களுடையது என வந்தால் என்ன செய்ய முடியும். நான் அமைதியாக இருக்கிறேன். இளையராஜா வீட்டில் அவர் மனைவி ஜீவா அம்மாவிடம் லாக்கர் சாவி வாங்கி, நகையெல்லாம் எடுத்து அம்மனிடம் போட்டு பூஜை பண்ணியிருக்கேன். அந்த வீட்டுக்கு நிறைய உழைச்சிருக்கேன். இளையராஜா வீட்டுக்கு மருமகள் ஆக வேண்டியது. இதற்குமேல் பேச விரும்பவில்லை'' என்று கண்ணீர் மல்க பேட்டி அளித்தார்.

என்ன பிரச்னை

சில நாட்களுக்கு முன்பு இந்த பாடல் விவகாரத்தில் எந்த பிரச்னையும் வரக்கூடாது என்பதற்காக, இளையராஜாவை நேரில் சந்தித்து விஷயத்தை சொல்லி, காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்கியிருக்கிறார் வனிதா. இவ்வளவு நடந்ததும் இளையராஜா வழக்கு போட்டு உள்ளார். என்ன பிரச்னை என்று ராஜா தரப்பில் விசாரித்தால், ''அந்த பாடல் விவகாரத்தில் வனிதா வந்து பேசினார். ஆனாலும், சோனிக்கும் அவர் தரப்புக்கும் சட்ட சிக்கல் நீடிக்கிறது. கோர்ட்டில் வழக்கு நடக்கிறது. இவருக்காக விட்டால், மற்ற பாடல்களும் ரைட்ஸ் பிரச்னை வரும். இந்த படத்தின் போஸ்டர் பப்ளிசிட்டியில் இளையராஜா போட்டோ, பெயர் இடம் பெற்றுள்ளது. இந்த படம் ஒரு மாதிரியான அடல்ட் கன்டன்ட் படம், இந்த படத்துக்கு இளையராஜா இசையமைத்துள்ளார் என்ற தோற்றத்தை வனிதா உருவாக்கி உள்ளார். அதனால், அந்த பாடலை பயன்படுத்தக்கூடாது என்று சட்டரீதியாக நடவடிக்கை எடுக்க உள்ளோம். ஆபாச படத்தில் ராஜா பாடல் இடம் பெறுவது சரியில்லை'' என்கிறார்கள். சரி, இளையராஜா வீட்டுக்கு மருமகள் என எந்த அர்த்தத்தில் வனிதா பேசினார் என்று விசாரித்தால், பலருக்கும் குழப்பம். இளையராஜாவுக்கு கார்த்திக் ராஜா, யுவன் ஷங்கர் ராஜா என 2 மகன்கள். இதில் யாருக்கு அவரை திருமணம் செய்ய நினைத்தார்கள். யாருடன் காதல் இருந்தது அல்லது இளையராஜா குடும்பத்தில் யாருடனாவது வனிதாவை திருமணம் செய்து வைக்க பேச்சுவார்த்தை நடந்ததா? அப்போது என்ன நடந்தது என பலரும் துப்பறிந்து வருகிறார்கள்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 24 )

P. SRINIVASAN
ஜூலை 14, 2025 17:47

இவர் இசை ஞானியா


தாமரை மலர்கிறது
ஜூலை 13, 2025 19:38

பாடல்கள் தயாரிப்பாளருக்கு தான் சொந்தம். இசையமைப்பாளருக்கு அல்ல. கட்டிடம் உரிமையாளருக்கு தான் சொந்தம். வடிவமைத்தவருக்கு அல்ல. இந்தியாவில் முட்டாள்தனமாக முன்பு கொடுக்கப்பட்ட தீர்ப்பை மாற்றி, இசையை தயாரிப்பாளருக்கு சொந்தம் என்று மாற்றினால் தான், இதற்கான தீர்வு ஏற்படும். அதுவரை தயாரிப்பாளர் மற்றும் இசைமைப்பாளர் என்று இருவரும் உரிமை கோருவார்கள். ஒரு கட்டிடத்திற்கு ரெண்டு பேர் உரிமை கோருவதை போன்று.


R K Raman
ஜூலை 13, 2025 11:46

ரொம்ப முக்கியம்...? அந்த நபர் பற்றிய விஷயம் நாட்டுக்கு அவசியமா?


M Ramachandran
ஜூலை 13, 2025 10:37

ஊர்அறிந்த பின் முக்காடு எதற்கு? பாவம் காலம்சென்ற விஜகுமார் மஞ்சுளா தம்பதிக்கு இப்படி ஒரு சாப கேடு.


prakash m
ஜூலை 13, 2025 09:35

Old age knowlege???


Khalil
ஜூலை 12, 2025 20:08

நிலா அது வானத்து மேலே .. பலானது ஓடத்துமேலே ..இது என்ன தத்துவ பாடலோ ? இந்த பாட்ட பாடுனதுகூட நம்ம ஆள் தான்


Mani . V
ஜூலை 12, 2025 18:11

நல்லவேளை அந்த குடும்பம் தப்பித்தது.


Haja Kuthubdeen
ஜூலை 12, 2025 17:55

இளைய ராஜா ஏன் இப்படி செய்கிறார்.அவரிடம் இல்லாத பணமா???அவர் பாடலை உபயோகப்படுத்துவது அவருக்குதானே பெருமை...காசு வாங்கி கொண்டுதானே படத்திற்கு இசை போடுகிறார்..அப்ப அது தயாரிப்பாளருக்குதானே சொந்தம்.


Dinesh Pandian
ஜூலை 12, 2025 19:30

அறிவு சார் சொத்துரிமை பற்றி தெரிந்து கொள்ளுங்கள்


Natarajan Ramanathan
ஜூலை 13, 2025 08:22

இளையராஜா தனது இசைக்கான ராயல்டி தொகை அனைத்தையும் நலிந்த இசை கலைஞர்களுக்கு என்று முழுமையாக எழுதி கொடுத்துவிட்டார். எனவே வழக்குப்போட்டு நஷ்டஈடு வந்தாலும் அதுவும் அந்த நலிந்த கலைஞர்களுக்கே சென்று சேரும்.


Raja k
ஜூலை 12, 2025 17:21

இளையராஜா ஞானி இல்லை, மண்டைகனம் பிடித்த, நாகரீகம் தெரியாத ஆள்


Padmasridharan
ஜூலை 12, 2025 16:20

"ஆபாச படத்தில் ராஜா பாடல் இடம் பெறுவது சரியில்லை. ஆபாச வார்த்தைகளை இரட்டை அர்த்தம் உள்ள சில பாடல்களுக்கு இசையமைத்துள்ளாரே சாமி, அப்புறம் என்ன.. எ.கா. சிந்திய வெண்மணி சிப்பியில் முத்தாச்சு


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை