உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / வாங்க ராகுல் வாங்க!ஆர்.எஸ்.எஸ்.சில் சேருங்க, பயிற்சி எடுங்க! அழைக்கும் பா.ஜ.

வாங்க ராகுல் வாங்க!ஆர்.எஸ்.எஸ்.சில் சேருங்க, பயிற்சி எடுங்க! அழைக்கும் பா.ஜ.

சென்னை: ஆர்.எஸ்.எஸ்., இயக்கத்தில் ராகுல் சேர்ந்து பயிற்சி எடுக்க வேண்டும் என்று பா.ஜ., செய்தித்தொடர்பாளர் ஏ.என்.எஸ். பிரசாத் கூறி உள்ளார்.அமெரிக்கா சுற்றுப்பயணம் சென்றுள்ள எதிர்க்கட்சித் தலைவர் ராகுல், பா.ஜ மற்றும் ஆர்.எஸ்.எஸ். பற்றி கடும் குற்றச்சாட்டுகளை முன் வைத்து வருகிறார். அவரின் கருத்துகளுக்கு மத்திய பா.ஜ., தலைமை பதிலடி கொடுத்து வருகிறது.இந் நிலையில் அவர் ஆர்.எஸ்.எஸ்., இயக்கத்தில் சேர வேண்டும், அதில் பயிற்சி எடுக்க வேண்டும் என்று தமிழக பா.ஜ., செய்தித்தொடர்பாளர் ஏ.என்.எஸ். பிரசாத் கூறி உள்ளார். இது குறித்து அவர் மேலும் கூறி உள்ளதாவது: சரியான புரிந்து கொள்ளல் இல்லாமல் ஆர்.எஸ்.எஸ்., குறித்து ராகுல் கூறிய விமர்சனம் தவறானது. இந்த இயக்கத்தை பற்றி அவர் தெரிந்து கொள்ள வேண்டும். அதற்காக அவர் இதில் சேர்ந்து பயிற்சி பெற வேண்டும். அப்படி ஒரு வாய்ப்பு கிடைக்கும் பட்சத்தில் அதை ராகுல் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.இவ்வாறு அவர் கூறி உள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

M Ramachandran
செப் 10, 2024 19:14

உஙகளுக்கு ஏன் இந்த வேண்டாத வேலை. அதற்க்கு தான் பப்பு அமெரிக்கா சத்தம் போடாமல் சென்றிருக்கிறார். வேணுமானால் அங்கு ஸ்டாலின் சந்திப்பார்.


என்றும் இந்தியன்
செப் 10, 2024 17:18

Fantastic மிக மிக சரியான இடம் ராவுல் வின்சி என்னும் ராகுல் காந்தி உனக்கு பயிற்சி எடுக்க. பாஜகவுக்கு எதிராக போராடி வெற்றி பெறுவோம்- ராகுல் காந்தி. இந்த தினம் தினம் உளறுவது உடனே நின்று என்ன சொல்லவேண்டும் என்று உன் மூளை மூளை இருக்கின்றது ஆனால் அதில் அறிவு என்னும் சாப்ட்வேர் இல்லை உனக்கு அறிவிக்கும் சரியாக


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை