உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / சார் பதிவாளர் ஆபீஸ்களில் லஞ்ச ஒழிப்பு வேட்டை; ஒரே நேரத்தில் தொடங்கியது விஜிலன்ஸ் போலீஸ்!

சார் பதிவாளர் ஆபீஸ்களில் லஞ்ச ஒழிப்பு வேட்டை; ஒரே நேரத்தில் தொடங்கியது விஜிலன்ஸ் போலீஸ்!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: தமிழகம் முழுவதும் வெவ்வேறு சார் பதிவாளர் அலுவலகங்களில் நடத்தப்பட்ட லஞ்ச ஒழிப்பு சோதனையில், கணக்கில் வராத பல லட்சம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. பத்திரப்பதிவு, வில்லங்க சான்றிதழ், திருமணப் பதிவு உள்ளிட்ட பல்வேறு பதிவு சார்ந்த பணிகள் சார் பதிவாளர் அலுவலகங்களில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்தப் பதிவுகளுக்காக அதிகாரிகள் லஞ்சம் பெறுவது கண்கூடு. தீபாவளிப் பண்டிகை நெருங்கி வரும் நிலையில், அதிகாரிகள் லஞ்ச வேட்டை எக்கச்சக்கமாகி விட்டதாக புகார்கள் கிளம்பின. அதனடிப்படையில், தமிழகம் முழுதும் சார் பதிவாளர் அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் இன்று திடீரென ரெய்டு நடத்தி வருகின்றனர். சென்னை, கோவை, திருப்பூர், தருமபுரி, நெல்லை, அரியலூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் உள்ள சார் பதிவாளர் அலுவலகங்களில் சோதனை நடத்தப்பட்டுள்ளது. குறிப்பாக, தர்மபுரி மாவட்டம் அரூர் சார் பதிவாளர் அலுவலகத்தில் நடந்த சோதனையில் கணக்கில் வராத ரூ.3.57 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது. அதேபோல, நெல்லை மாவட்டம் ராதாபுரம் சார் பதிவாளர் முருகன் என்பவரிடம் இருந்து ரூ.70,000 ரொக்கமும், அரியலூரில் இரும்புலிகுறிச்சி சார் பதிவாளர் முகமது இக்பாலிடம் கணக்கில் வராத ரூ.5,000 ரொக்கமும் பறிமுதல் செய்யப்பட்டது. தமிழகத்தின் பல்வேறு சார்பதிவாளர் அலுவலகங்களில் இருந்து கட்டு கட்டாக ரொக்கமும், முக்கிய ஆவணங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. எனினும், சோதனை முடிந்த பிறகே, கைப்பற்றப்பட்ட ரொக்கம் மற்றும் ஆவணங்கள் குறித்த விபரம் தெரிய வரும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 15 )

VENKATESWARANA
அக் 24, 2024 19:12

வெட்கம்,லஞ்சம் கேட்டு வாங்குகிறார்கள்.இவர்களுக்கு சம்பளம் எதற்கு...லஞ்சம் கொடுத்து வேலை.மனசாட்சி இல்லாமல் கொள்ளை,மக்களின் சாபம் இவர்களை அழிக்கும். லஞ்சகரங்களுக்கு குஷ்டம் வரும் என்பர்.


theruvasagan
அக் 24, 2024 17:40

முழுங்கினது மலையளவு. பிடிபட்டது சுண்டக்காய் அளவு. மாசக் கடைசியில டார்கெட்டை எட்ட டிராபிக் போலீசு முக்குல சந்துல நின்னு அபராதம் வசூல் பண்ற மாதிரி. மத்த நாட்கள்ள கண்டுக்காம விட்டது ஆயிரம் மடங்கு அதிகம் இருக்கும். அதே மாதிரிதான் இதுவும்.


sundarsvpr
அக் 24, 2024 16:40

சார் பதிவாளர் அலுவலங்களில் பண புழக்கம் அதிகமாய் உள்ளது. அரசுக்கு நன்றாக தெரியும். காரணம் இதில் தில்லு மல்லுக்கு காரணம் அடிமட்டத்திலிருந்து எது வரை செல்கிறது என்பதனை விசாரணை செய்வதில்லை. அரசு துறை தலைமை அலுவலகம் செயலகம் போன்றவைகளில் ஆவண முறைகேடுகள் நடக்கவில்லை என்று லஞ்ச துறை கூறமுடியுமா? இதில் அமைச்சர்கள் அறைகள் உட்பட. இங்கு எல்லாம் விஜிலென்ஸ் ஏன் நடவடிக்கை எடுப்பதில்லை. செந்தில் பாலாஜி போல் அகப்பட்டால் இருக்கையை துருவி துருவி ஆராய்வார்கள்.


Karuthu kirukkan
அக் 24, 2024 05:46

சிபிஐ மட்டும் தான் பன்னமுடியுமா , நாங்களும் பன்றோம் பாருங்க ..நாங்க பன்ன போறோம்னு ஒரு மாதத்துக்கு முன்னாலே சொல்லிட்டோம் .... அப்புறம் என்ன கட்டிங் ரெடி


Mani . V
அக் 24, 2024 05:41

ஒரு வாரம் முன்பே, எப்பொழுது வரப்போகிறோம் என்று சொல்லி விட்டுத்தானே போனீங்க?


சாண்டில்யன்
அக் 24, 2024 00:39

திருந்தவே மாட்டாங்களா இல்ல திருந்த விடமாட்டாங்களா தெரியலை யாரை நொந்துக்கறது அதிகாரிகளையா இல்ல மக்களையா


David DS
அக் 23, 2024 21:45

கோவில்பட்டி சப் ரிஜிஸ்ட்டிரார் பக்கம் கொஞ்சம் வாங்க


Jebakumar
அக் 23, 2024 21:40

Also, Please visit Thoothukudi Nazareth Sub-register office. Very worst people working there. Voluntarily they delay for doing the work.


Sathyanarayanan Sathyasekaren
அக் 23, 2024 21:34

இந்த வேட்டைகள் எல்லாம் கண்துடைப்புக்காகத்தான், யாரேனும் அரசு என்ன நடவடிக்கை எடுத்து என்று கேட்டால் சொல்வதற்காக. விஜிலென்ஸ் போலீஸின் கண்துடைப்பு வேலை.


sankaranarayanan
அக் 23, 2024 20:52

அமைச்சர்களால் இந்த பதிவாளர்களாக வேலைக்கு அமர்த்தப்பட்டவர்கள் ஆதலால் இதில் அந்தந்த அமைச்சர்களுக்கும் வரவில் பங்கு உண்டு முதலில் அந்தந்த அமைச்சர்களின் பதவிகளை பறித்தால் எல்லாமே கட்டுக்குள் வந்துவிடும் இவர்கள் மீது எந்த தவறும் இல்லை


சாண்டில்யன்
அக் 24, 2024 00:45

போலி பத்ர பதிவு பொறம்போக்கை பதிவு செய்வது சொத்து மதிப்பை குறைத்து பதிவது போலி பவர் ஆப் அட்டர்னிய காட்டி முடிக்கறது இன்னும் எத்தனையோ இருக்கு ஆதாயம் இல்லாம எவனும் ஆயிரம் ஆயிரமா அள்ளி தரமாட்டான் கொஞ்சம் ரேட் ஜாஸ்தின்னா கூட புடுச்சு குடுத்துடுவானுங்கோ இதெல்லாம் இருக்கே


சமீபத்திய செய்தி