தமிழகத்தில் பல்வேறு இடங்களில் கொட்டியது மழை: அதிக மழைப்பொழிவு எங்கே!
வாசிக்க நேரம் இல்லையா?
செய்தியைக் கேளுங்கள்
சென்னை: தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் நேற்று மாலை முதல் கனமழை கொட்டியது. அதிகபட்சமாக ராஜபாளையத்தில் 176 மிமீ மழை பதிவாகி உள்ளது.வங்கக்கடலில் அக்டோபர் 24ம் தேதி குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு உள்ளது. குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி, கடலோர பகுதியை நோக்கி நகர்ந்து வலுவடையக் கூடும் என வானிலை மையம் தெரிவித்து உள்ளது.குமரிக்கடல் மற்றும் அதையொட்டிய பகுதிகளின் மேல், வளி மண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. தமிழகத்தில் அனேக இடங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்காலில், இன்று முதல் வரும் அக் 23ம் தேதி வரை மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என வானிலை மையம் எச்சரித்துள்ளது.தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் பல்வேறு பகுதிகளில் பெய்த மழை விவரம் மில்லி மீட்டரில் பின்வருமாறு:ராஜபாளையம் 176 கும்மிடிப்பூண்டி 164 தேக்கடி 158பொன்னேரி 136காயல்பட்டினம் 120 அலக்கறை எஸ்டேட் 113 வேம்பக்கோட்டை அணை 93மாம்பழத்துறை ஆறு 87 ஆணைக்கிடங்கு 85 அடையாமடை 82 மண்டபம் 67தென்காசி 98 செங்கோட்டை 96 ஆயிக்குடி 96 குண்டாறு அணை 88 ராமநதி அணை 86 கடனா நதி 80சிவகிரி 75குன்னூர் 95 பர்லியார் 93 சண்முக நதி 95 கீழ் கோத்தகிரி 76 பந்தலூர் 74 திருச்செந்தூர் 74மன்னார்குடி 77ஓட்டப்பிடாரம் 70எண்ணூர் 69 மணலி புதுநகரம் 65தேனி 68 கூடலூர் 54 நீடாமங்கலம் 49சங்கரன்கோவில் 38