கனமழையால் தடைபடும் போக்குவரத்து! தலைநகரில் புறநகர் ரயில் சேவையில் மாற்றம்
வாசிக்க நேரம் இல்லையா?
செய்தியைக் கேளுங்கள்
சென்னை: கனமழையால், சென்னையில் புறநகர் ரயில் சேவை பாதிக்கப்பட்டு உள்ளது. பெஞ்சல் புயலால் தலைநகர் சென்னையில் நேற்றிரவு தொடங்கிய கனமழை ஓயவில்லை. அண்ணாசாலை, கோயம்பேடு, பெசன்ட் நகர், மயிலாப்பூர், மந்தைவெளி, நுங்கம்பாக்கம், தண்டையார்பேட்டை, ராயபுரம், மேடவாக்கம் என பெரும்பாலான பகுதிகளில் மழை கொட்டி வருகிறது.புறநகரில் மழை விடாது பெய்து வருவதால், மக்கள் வீடுகளில் முடங்கி உள்ளனர். மழையால் தாழ்வான பகுதிகளிலும், சாலைகளிலும் வெள்ள நீர் தேங்கி காணப்படுகிறது. இந் நிலையில் மழை விடாமல் கொட்டி வருவதால் புறநகர் ரயில் சேவையில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இது குறித்து தெற்கு ரயில்வே அறிவிப்பு ஒன்றை வெளியிட்டு உள்ளது. அதில் கூறி உள்ளதாவது; தொடர் மழையால் செங்கல்பட்டு, தாம்பரம் இடையே ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டு உள்ளது. 1 மணிநேரத்துக்கும் மேலாக இந்த வழிதடத்தில் சேவை பாதிப்படைந்துள்ளது. வழக்கமான நேர அட்டவணைப்படி இல்லாமல் குறைந்த அளவில் மின்சார ரயில்கள் இயக்கப்படுகின்றன. பயணிகள் பாதுகாப்புக்கு உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு உள்ளது.இவ்வாறு தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.