உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தமிழகம், புதுச்சேரியில் 9 வரை மழை

தமிழகம், புதுச்சேரியில் 9 வரை மழை

சென்னை:'தமிழகம் மற்றும் புதுச்சேரியில், வரும் 9ம் தேதி வரை, இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது' என, வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. அதன் அறிக்கை: கடந்த, 30ம் தேதி கரையை கடந்த, 'பெஞ்சல்' புயல், வடக்கு மற்றும் உள்மாவட்டங்களில், ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக நீடித்தது. நேற்று காலை நிலவரப்படி, ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு பகுதியாக மேலும் வலுவிழந்தது. அதன்பின் அந்த அமைப்பு, கடலோர கர்நாடகம் மற்றும் மத்திய கிழக்கு அரபிக்கடல் பகுதியில் நிலவுகிறது. இதனால், தமிழகத்தில் கனமழை வாய்ப்புகள் படிப்படியாக குறையும். இந்நிலையில், தமிழகத்தில் ஒரு சில இடங்கள் மற்றும் புதுச்சேரியில், இன்று இடி மின்னலுடன், மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது; வரும் 9ம் தேதி வரை, இந்நிலை நீடிக்கும்.சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில், இன்றும், நாளையும், வானம் மேகமூட்டமாகக் காணப்படும், ஒரு சில இடங்களில் லேசான அல்லது மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை