உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தமிழகத்தில் ஜனவரி 2ம் தேதி வரை மழை தொடரும்; வானிலை மையம் எச்சரிக்கை

தமிழகத்தில் ஜனவரி 2ம் தேதி வரை மழை தொடரும்; வானிலை மையம் எச்சரிக்கை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: தமிழகத்தில் இன்று (டிச.,27) முதல் வரும் ஜனவரி 2ம் தேதி வரை மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.இது குறித்து சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: வட தமிழகத்தில் அநேக இடங்களிலும், தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் மழை பெய்துள்ளது.தெற்கு கேரளா, தென் கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. தமிழகத்தில் இன்று (டிச.,27) முதல் வரும் ஜனவரி 2ம் தேதி வரை மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது.சென்னையில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதிகாலை வேளையில் லேசான பனிமூட்டம் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 30 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 24 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

sundarsvpr
டிச 27, 2024 14:11

அண்ணா பல்கலை வளாகத்தில் நடந்த கொடூரவன்முறை மக்கள் கண்ணீர் பெரு மழைபோல் கொட்டுகிறது. மக்கள் தண்ணீர் மழையை மறந்துவிட்டனர்.


MARI KUMAR
டிச 27, 2024 13:51

தமிழகத்தில் மழை தொடர வேண்டும்.. விவசாயம் செழிக்க வேண்டும்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை