உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தமிழகம், புதுச்சேரியில் இன்றும், நாளையும் இடி மின்னலுடன் மழை

தமிழகம், புதுச்சேரியில் இன்றும், நாளையும் இடி மின்னலுடன் மழை

சென்னை:'வடகிழக்கு - தென்கிழக்கு அரபிக்கடல் பகுதியில், காற்றழுத்த தாழ்வுநிலை நிலவுவதால், தமிழகம், புதுச்சேரியில் இன்றும், நாளையும் இடி மின்னலுடன் மழை பெய்யும்' என, சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இதுகுறித்து, அந்த மையம் நேற்று வெளியிட்ட அறிக்கை: தமிழகத்தில் நேற்று காலை நிலவரப்படி, அதிகபட்சமாக நீலகிரி மாவட்டம் அவலாஞ்சியில், 9 செ.மீ., மழை பெய்துள்ளது. நீலகிரி மாவட்டம் நடுவட்டம் பகுதியில் 8, கோவை சின்னக்கல்லாரில், 5 செ.மீ., மழை பதிவாகியுள்ளது. இதேபோல, திருநெல்வேலி மாவட்டத்தில் சில இடங்களிலும் மழை பெய்துள்ளது. இதற்கிடையே, தெற்கு குஜராத் - வடக்கு கேரள பகுதிகளுக்கு அப்பால் உள்ள வடகிழக்கு - தென்கிழக்கு அரபிக்கடல் பகுதியில், காற்றழுத்த தாழ்வு நிலை நிலவுகிறது. இதனால், தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்காலில் இன்றும், நாளையும் இடி மின்னலுடன் மழை பெய்யும். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில், இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்யும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை