உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தமிழகத்தில் 7 நாட்களுக்கு மழை; 8 மாவட்டங்களுக்கு "ஆரஞ்ச் அலர்ட்"

தமிழகத்தில் 7 நாட்களுக்கு மழை; 8 மாவட்டங்களுக்கு "ஆரஞ்ச் அலர்ட்"

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: தமிழகத்தில் 7 நாட்களுக்கு மழை தொடரும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. சென்னையில் அதிகன மழை பெய்யும் என எச்சரிக்கப்பட்டிருந்தது. ஆனால் கனமழை மட்டுமே பெய்யும் என்ற தகவல் சென்னை மக்களுக்கு நிம்மதியை தந்தது. அதேநேரத்தில் சென்னையில் மழை தொடர்ந்து ஒரு வாரம் வரை இருக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது.செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகை, திருவாரூர் ஆகிய 8 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.தென்மேற்கு வங்கக்கடல், அரபிக்கடல் பகுதிகளில் வளிமண்டல கீழ்அடுக்கு சுழற்சி காரணமாக வட மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. கனமழை காரணமாக, கடலூர், விழுப்புரம், மயிலாடுதுறை மற்றும் திருவாரூர் மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று(ஜன.,8) விடுமுறை அறிவித்து, அந்தந்த மாவட்ட கலெக்டர்கள் உத்தரவிட்டுள்ளனர்.* கனமழை காரணமாக, திருவண்ணாமலை, வேலூர், அரியலூர், கள்ளக்குறிச்சி, செங்கல்பட்டு மற்றும் ராணிப்பேட்டை மாவட்டத்தில், பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.* நாகையில், நாகபட்டினம், கீழ்வேளூர் தாலுகாக்களை சேர்ந்த பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. வேதாரண்யம், திருக்குவளை தாலுகாகளில், பள்ளிகள் வழக்கம் போல் இயங்கும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.* புதுச்சேரியில் பள்ளி, கல்லூரிகளுக்கும், காரைக்காலில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று கனமழை அறிவிக்கப்பட்டுள்ளது.* அதிகபட்சமாக சீர்காழியில் 22 செ.மீ, திருவாரூரில் 21.2 செ.மீ மழையும் பதிவாகி உள்ளது.வங்கக்கடலின் தென் மேற்கு பகுதியிலும், தென் கிழக்கு பகுதியிலும், வளிமண்டல கீழடுக்கில் தலா ஒரு சுழற்சி நிலவுகிறது. இதனால், வங்கக்கடலின் தென் மேற்கு, மன்னார் வளைகுடா, குமரிக்கடல் பகுதிகளில், இன்று முதல், 10ம் தேதி வரை மணிக்கு, 55 கி.மீ., வேகத்தில் சூறாவளி காற்று வீசும்.எனவே, மீனவர்கள் இந்த பகுதிகளுக்கு செல்ல வேண்டாம். வரும், 11ம் தேதி வரை தமிழகம், புதுச்சேரியில் கனமழை தொடரும். சென்னையில், வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். அவ்வப்போது கனமழை பெய்யும் என வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் பதிவான அதிகபட்ச மழை!

சீர்காழி 23 செ.மீ., சிதம்பரம் 22 செ.மீ., வேளாங்கண்ணி 21 செ.மீ., திருவாரூர் 21 செ.மீ., ஆனைக்காரன்சத்திரம் 19 செ.மீ., புவனகிரி 18 செ.மீ., நாகப்பட்டினம் 16 செ.மீ., நன்னிலம் 16 செ.மீ., சேத்தியாத்தோப்பு 15 செ.மீ., அண்ணாமலை நகர் 14 செ.மீ., காட்டுமன்னார்கோவில் 14 செ.மீ., கடலூர் 13 செ.மீ., குடவாசல் 13 செ.மீ., மரக்காணம் 13 செ.மீ., மாமல்லபுரம் 12 செ.மீ., லால்பேட்டை 12 செ.மீ., வானூர் 12 செ.மீ., கடலூர் 11 செ.மீ., திருவிடைமருதூர் 11 செ.மீ., மணல்மேடு 11 செ.மீ., வலங்கைமான் 10 செ.மீ., மயிலாடுதுறை 10 செ.மீ., கும்பகோணம் 10 செ.மீ.,


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ