உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / டி.எம்.எஸ்., இயக்குனராக துர்காவின் சகோதரர் ராஜமூர்த்தி நியமனம்

டி.எம்.எஸ்., இயக்குனராக துர்காவின் சகோதரர் ராஜமூர்த்தி நியமனம்

சென்னை: டி.எம்.எஸ்., என்ற, மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் இயக்குனராக, டாக்டர் ஜெ.ராஜமூர்த்தி நியமிக்கப்பட்டு உள்ளார். இவர் முதல்வர் ஸ்டாலின் மனைவி துர்காவின் சகோதரர் ஆவார்.தமிழக இ.எஸ்.ஐ., மருத்துவமனைகளின் கூடுதல் இயக்குனராக இருந்த ராஜமூர்த்திக்கு, சமீபத்தில் டி.எம்.எஸ்., தர நிலையில் பதவி உயர்வு வழங்கப்பட்டது. தற்போது, மாநில மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் இயக்குனராக ராஜமூர்த்தியை, கவனர்னரின் ஒப்புதலுடன், மக்கள் நல்வாழ்வு துறை செயலர் ககன்தீப் சிங் பேடி நியமித்துள்ளார்.இதுவரை, அப்பொறுப்பில் இருந்து வந்த டாக்டர் இளங்கோ மகேஸ்வரன், இ.எஸ்.ஐ., மருத்துவமனைகளின் டி.எம்.எஸ்., இயக்குனராக மாற்றப்பட்டுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

VENKATESAN V
ஜூன் 28, 2024 18:14

அவருக்கு தகுதியின் அடிப்படையில் வந்த பதவி அதில் எதற்கு துர்கா ஸ்டாலின் சகோதரர் ?


ram
ஜூலை 01, 2024 14:25

ஆமாம் நீங்கள் தான் அவர் தகுதியை நிர்ணயம் செய்திர்களா,


மேலும் செய்திகள்