உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ராஜேந்திர பாலாஜிக்கு எதிரான மோசடி வழக்கு; சி.பி.ஐ.யிடம் ஒப்படைக்க ஐகோர்ட் உத்தரவு

ராஜேந்திர பாலாஜிக்கு எதிரான மோசடி வழக்கு; சி.பி.ஐ.யிடம் ஒப்படைக்க ஐகோர்ட் உத்தரவு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை; மாஜி அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீதான மோசடி வழக்கை சி.பி.ஐ.,யிடம் ஒப்படைக்க சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. அ.தி.மு.க., ஆட்சியின் போது அமைச்சராக இருந்தவர் ராஜேந்திர பாலாஜி. அமைச்சராக இருந்த காலத்தில் ஆவின் நிறுவனம் உள்ளிட்ட பல்வேறு அரசுத் துறைகளில் வேலை வாங்கி தருவதாக பணம் பெற்று மோசடி செய்தார் என்பது அவர் மீதான குற்றச்சாட்டாகும். 33 பேரிடம் ரூ. 3 கோடி வசூலித்து மோசடி செய்ததாக விருதுநகர் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிந்துள்ளனர். இந்த வழக்கில் விரைவில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய உத்தரவிடக் கோரி ரவிந்திரன் என்பவர் சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்திருந்தார். இந் நிலையில், இந்த மனுவை விசாரித்த சென்னை ஐகோர்ட், வழக்கை சி.பி.ஐ.,யிடம் ஒப்படைக்க விருதுநகர் மாவட்ட குற்றப்பிரிவுக்கு உத்தரவிட்டுள்ளது. தமிழக அரசுக்கு நீதிமன்ற உத்தரவை பின்பற்ற நேரம் இல்லை என்றும் ஐகோர்ட் விமர்சித்துள்ளது. முன்னதாக, விசாரணையின் போது ராஜேந்திர பாலாஜிக்கு எதிராக வழக்கு தொடர அனுமதி பெறும் நடைமுறைகள் மேற்கொள்ளப்பட்டதாக கோர்ட்டில் போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 9 )

Constitutional Goons
ஜன 07, 2025 00:49

நீதிபதிகள் குற்றவாளியை காக்க முயற்சிக்கிறார்கள்


Raghavan
ஜன 06, 2025 21:47

அரசாங்கமும் நீதிமன்றங்களும் மக்களை முட்டாளாக நினைத்துக்கொண்டு இருக்கிறார்கள். இல்லாவிட்டால் ஒவ்வொரு வழக்கும் 15 டு 20 வருடங்கள் இழுத்தடிப்பார்களா. ஒரு திடீர் புரட்சி ஏற்படும் நாள் வெகு தூரத்தில் இல்லை.


Barakat Ali
ஜன 06, 2025 21:14

சரி ..... குறுநில மன்னர்கள் பொன்முடி, தங்கம் தென்னரசு, செந்தில் பாலாஜி முதலானோர் சட்டத்தின் பார்வையிலிருந்து / பிடியிலிருந்து தப்புவது ஏன் ???? எப்படி ????


sankaranarayanan
ஜன 06, 2025 20:16

ராஜேந்திர பாலாஜி. அமைசராக இருந்த காலத்தில் ஆவின் நிறுவனம் உள்ளிட்ட பல்வேறு அரசுத் துறைகளில் வேலை வாங்கி தருவதாக பணம் பெற்று மோசடி செய்தார் என்பது அவர் மீதான குற்றச்சாட்டாகும். அதேபோன்று செந்தில் பாலாஜி அமைச்சராக இருந்த காலத்தில் தமிழ்நாடு மின்சாரம் நிறுவனம் உள்ளிட்ட பல்வேறு அரசுத் துறைகளில் வேலை வாங்கி தருவதாக பணம் பெற்று மோசடி செய்தார் என்பது அவர் மீதான குற்றச்சாட்டாகும். இப்படியே இரு பாலாஜிகளும் நாட்டை நாசமாக்கி விட்டார்கள் ஆனால் ஒருவருடைய வழக்கு மட்டும் பல ஆண்டுகள் கழித்து சிபி ஐயிடம் ஒப்படைக்க கோரும் இந்த உய்ரநீதிமன்றம் அடுத்த பாலாஜி வழக்கையும் சேர்த்து சிபி ஐயிடம் கொடுக்கச்சொல்லலாமே


Ramesh Sargam
ஜன 06, 2025 19:50

இந்தியாவில் குற்றம் செய்தவர்கள் மீது வழக்கு மட்டும்தான் பதிவாகும். அந்த வழக்கில் வாதங்கள் நடந்து, நீதிமன்ற தீர்ப்பு வருவதற்குள், வழக்கில் சம்பந்தப்பட்டவர்கள் பரலோக பிராப்தி அடைந்திருப்பார்கள். ஓம் சாந்தி .


ஆரூர் ரங்
ஜன 06, 2025 18:29

இனிமே மோடி எங்க டாடி ன்னு சொல்லி பயனில்லை.


Dhurvesh
ஜன 06, 2025 21:06

ஆமாம் அவர் தான் சட்டமே போட்டு PM CARE என்று சொல்லி கமிஷன் வாங்குவார் மற்றவர்கள் செய்ய கூடாது என்று பெரிசு ஓகே வா


அப்பாவி
ஜன 06, 2025 18:16

என்ன அவசரம்? லஞ்சம் வாங்கி இத்தனை வருஷம் ஆயாச்சு. முன்னாள் அமைச்சர் வரும் தேர்தலில் ஜெயிச்சு மீண்டும் மந்திரியாவுற சான்ஸ் இருக்கு. பேசாம கேசை 2047 ல ஹேண்ட் ஓவர் பண்ணிக்கலாம்.


Sugir Raj
ஜன 06, 2025 18:13

ஸ்வீட் கேஸ் என்னவாயிற்று?